CLC இஸ்லாமிய நிதி நிறுவனம் IFFSA மற்றும் SLIBFI விருதுகளுடன் வெற்றி நடை போடுகிறது

CLC இஸ்லாமிய நிதி நிறுவனம் (CLC Islamic Finance), கொமர்ஷல் லீசிங் அன்ட் பைனான்ஸ் (Commercial Leasing & Finance) நிறுவனத்தின் (CLC) இஸ்லாமிய வங்கிப் பிரிவு (IBD), தனது சேவையின் சிறப்பை மீண்டும் வலியுறுத்தும் வகையில், தெற்காசியாவின் இஸ்லாமிய நிதி மன்றத்தில் (Islamic Finance Forum of South Asia – IFFSA) ‘வருடத்தின் (சிறந்த) குத்தகை நிறுவனம்’ (“Leasing Company of the Year”) எனும் பிரிவில் வெள்ளி விருதைப் பெற்றுள்ளதுடன், அண்மையில் இடம்பெற்ற இலங்கை இஸ்லாமிய வங்கி மற்றும் நிதி தொழில்துறை (SLIBFI) விருது விழாவில், குறித்த பிரிவில் வெண்கல விருதையும் பெற்றுள்ளது.

இப்பிராந்தியத்தில் இடம்பெற்ற மிக முக்கியமான இரண்டு விருது விழாக்களிலிருந்து, CLC இஸ்லாமிய நிதி நிறுவனம் இந்த குறிப்பிடத்தக்க வெற்றிகளை  பெற்றுள்ளதானது, வளர்ந்து வரும் அதன் வாடிக்கையாளர் தளத்திற்கு, அது சேவையாற்றுவதில் கொண்டுள்ள அர்ப்பணிப்பு மற்றும் ஈடுபாட்டிற்கான ஒரு சான்றாகும் என்பதோடு, இஸ்லாமிய வங்கி மற்றும் நிதித் துறையில் அதன் சிறப்புக்கு மேலும் வலுவூட்டுகிறது.

குறித்த கெளரவிப்பு தொடர்பில், இஸ்லாமிய வணிகப் பிரிவின் தலைவர் இல்சாம் அவ்பர் தெரிவிக்கையில், “இம்மதிப்புமிக்க விருதுகளை வென்றுள்ளமை மற்றும் இலங்கை மற்றும் தெற்காசியாவில் சிறந்த செயல்திறன் மிக்க இஸ்லாமிய குத்தகை வசதிகள் வழங்குநர்களில் ஒருவராக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமையானது, உண்மையிலேயே பெரும் மதிப்புக்குரிய விடயமாகும். இந்த உலகளாவிய அங்கீகாரத்தை அடைய எமக்கு உறுதுணையாக இருந்து, CLCயின் பணிப்பாளர் / பிரதான நிறைவேற்று அதிகாரி, க்ரிஷான் திலகரத்ன, ஷரீஆ கண்காணிப்பு சபையின் உறுப்பினர்கள் மற்றும்  என்னுடன் இணைந்து பணியாற்றும் ஊழியர்கள், எமது வாடிக்கையாளர்களுக்கு எனது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு விருதுகளை வெல்வதானது, எமது சேவைகளை அடுத்தடுத்த நிலைக்கு உயர்த்துவதை மேலும் தூண்டுகிறது. ” என்றார்.

CLC இஸ்லாமிய நிதி நிறுவனமானது, அதன் புத்தாக்க உந்துதல் அணுகுமுறையின் அடிப்படையில், அதன் வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமையளிக்கும் தீர்வுகளின் அடிப்படையில், உள்நாட்டிலும் தெற்காசிய தளங்களிலும் இருந்து தொடர்ந்தும் இவ்வாறான வெகுமதிகளைப் பெற்று வருகிறது. அண்மையில் இடம்பெற்ற விருது நிகழ்வுகளின் போது மட்டுமல்லாமல்,  CLC இஸ்லாமிய நிதி நிறுவனத்திற்கு, IFFSA இன், இதற்கு முன்னர் இடம்பெற்ற விருது விழாக்களிலும் இவ்வாறான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, ஆண்டின் இஸ்லாமிய நிதி நிறுவனம் (தங்கம்), ஆண்டின் இஸ்லாமிய நிதி குத்தகை நிறுவனம் (தங்கம்) மற்றும் ஆண்டின் இஸ்லாமிய நிதி சாளரம்/ பிரிவு (தங்கம்), போன்ற பல பாராட்டுகளுக்குரிய விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

CLC இஸ்லாமிய நிதி நிறுவனமானது, இஸ்லாமிய வங்கி மற்றும் நிதித் துறையில் ஒரு சிறந்த செயல்திறன் கொண்ட இஸ்லாமிய நிதி சாளரமாகும். அதன் மொத்த சொத்து மதிப்பீடு ரூ. 4,097 மில்லியன் என்பதோடு, 2019/2020 நிதியாண்டு  நிலவரப்படி வரிக்கு முன்னரான அதன் இலாபம் ரூ. 140 மில்லியன் ஆகும்.  CLC இஸ்லாமிய நிதி நிறுவனமானது, தற்போது இஸ்லாமிய வங்கி மற்றும் நிதித்துறையில் அதிக இலாபம் ஈட்டும் நிறுவனமாக உள்ளது. இது தொழில்துறையில் மிகக் குறைந்த NPL விகிதங்களைக் கொண்ட உயர் நிலையிலுள்ள சொத்துகளையும் கொண்டுள்ளது. ஒரு முழுமையான நிதி தீர்வு வழங்குநரான  CLC இஸ்லாமிய நிதி நிறுவனம், வளர்ந்து வரும் வாடிக்கையாளர் தளத்தை கொண்டுள்ளதுடன், அது தற்போது 11000 இற்கும் அதிகமானதாகும். 68 கிளைகள் மூலம் நாடு முழுவதும் வியாபித்துள்ளதுடன், அர்ப்பணிப்புடனான சேவைகளை வழங்கும் 7 சேவை மையங்கள் மற்றும் அதிக எண்ணிக்கையிலான ATM களைக் கொண்ட வலையமைப்பையும் கொண்டுள்ளது.

விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட இஸ்லாமிய நிதி தீர்வு வழங்குநரான CLC, இலாப பங்கீட்டு முதலீடுகள் (முதாரபா), தவணை முதலீடுகள் (வகாலா முதலீடுகள்), இஸ்லாமிய குத்தகை (இஜாரா), கொள்வனவு நிதி (முராபஹா), சொத்து / கூட்டுப் பங்குடமை மூலதன நிதி (முஷாரகா) இறக்குமதி நிதி (முஸாவமா) மற்றும் கூட்டு மூலதன நிதி (வகாலா நிதி) ஆகிய, புதுமையான மற்றும் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய வங்கித் தீர்வுகளை வழங்குகின்றது.   2015 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட  CLC யின் இஸ்லாமிய வணிகப் பிரிவானது (IBD), கொமர்ஷல் லீசிங் அன்ட் பைனான்ஸ் (Commercial Leasing & Finance) பீ.எல்.சி. நிதி நிறுவன ஒழுங்குபடுத்தல் அனுமதிப்பத்திரத்தின் கீழ், இஸ்லாமிய நிதி சாளரமாக செயல்பட்டு வருகிறது. இது ஷரீஆ முறையிலான நிதி தீர்வுகளை செயல்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட ஒரு பிரத்தியேக வணிகப் பிரிவாகும்.  CLC இஸ்லாமிய நிதி நிறுவனம் வழங்கும் வங்கித் தீர்வுகளானது, மூன்று உறுப்பினர்களைக் கொண்ட ஷரிஆ மேற்பார்வை சபையினால் அங்கீகரிக்கப்பட்டு கணக்காய்வு செய்யப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Share

You may also like...