கோவிட்- 19 தடுப்பூசி தற்போது கிடைப்பதுடன், ஐக்கிய இராச்சியத்தில் கற்கும் இலங்கை மாணவர்கள் அதற்கான அணுகலை பெற்றுக்கொள்ள முடியும்

ஐக்கிய இராச்சியத்தில் உயர் கல்வியைத் தொடரும் இலங்கை மாணவர்கள் நாடு முழுவதும் வழங்கப்படும் Pfizer/BioNTech  தடுப்பூசியை அணுக முடியும். கோவிட்- 19 இன் போது சர்வதேச மாணவர்களுக்கு ஆதரவளிப்பதற்கான தனது உறுதிப்பாட்டை ஐக்கிய இராச்சியத்தின் அரசாங்கம் வெளியிட்டுள்ளதுடன், பல்கலைக்கழக அமைச்சர் மிசெல் டொனெலன், வைரஸ் பரவுவதை தடுக்க அறிமுகப்படுத்தப்பட்ட ஏற்பாடுகளில் பொறுமையை வெளிப்படுத்தமை தொடர்பில் மாணவர்களுக்கு திறந்த மடல் ஒன்றின் மூலம் நன்றியை தெரிவித்துள்ளார். கோவிட் – 19 இற்கான சோதனை அல்லது சிகிச்சைக்கு விண்ணப்பிக்க மாணவர்களிடம் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது என்பதையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஒட்டுமொத்தமாக இந்த தடுப்பூசியின் 40 மில்லியன் டோஸ்களுக்கான கொள்வனவுக் கட்டளையை ஐக்கிய இராச்சியம் வழங்கியுள்ளது. இது மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு வரையானோரை நோய்த்தடுப்பு செய்ய போதுமானதாகும். உண்மையில், பல தடுப்பூசி உருவாக்குநர்கள் மூலம் 357 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்களுக்கான முன்கூட்டிய அணுகலை அரசாங்கம் பெற்றுள்ளது. இது முன்னுரிமை பிரிவுகளில் அடங்கும் வயதான அல்லது உள்ளார்ந்த மருத்துவ நிலைகளைக் கொண்டுள்ளோர் அடங்கலாக சர்வதேச மாணவர்களுக்கு, சுகாதார பராமரிப்பினை பெற்றுக்கொள்வது போன்று இந்த தடுப்பூசிகளை அணுகுவதற்கு உதவும்.

இந்த தடுப்பூசி அறிவிப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த Study Groupஇன் ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான முகாமைத்துவ பணிப்பாளர் ஜேம்ஸ் பிட்மேன், “எதிர்வரும் கல்வியாண்டில் சில முன்னேற்றங்களை நாங்கள் எதிர்பார்க்கிறோம். இந்த உலகளாவிய தொற்றுநோய் காலப்பகுதி முழுவதும் பொறுமையை வெளிப்படுத்திய எங்கள் மாணவர்களுக்கு நன்றி தெரிவிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்த விரும்புகிறோம். இந்த தடுப்பூசி பயனளிக்கக்கூடிய சிகிச்சையுடன் இணைந்து, கோவிட்- 19 ஐ நிர்வகிக்கக்கூடிய நோயாக மாற்றுவதில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கும். இதன் மூலம் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப அனுமதிப்பதன் மூலம் முன்னோக்கிச் செல்லும் போது, ​​அதிக எண்ணிக்கையிலான இலங்கை மாணவர்களை ஐக்கிய இராச்சியத்துக்கு வரவேற்க முடியும்,” என்றார்.

ஆயிரக்கணக்கான மாணவர்கள் பல உலகத் தரம் வாய்ந்த இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் ஒன்றில் தங்கள் கல்வியைத் தொடர தெரிவு செய்கின்றமையானது சர்வதேச மாணவர்களிடையே ஐக்கிய இராச்சியத்தின் புகழினை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. Higher Education Statistics Agency (HESA) இன் 2018/2019 புள்ளிவிபரங்களின் படி,  தற்போது  485,645 சர்வதேச மாணவர்கள் ஐக்கிய இராச்சியத்தில் தமது பட்டப்படிப்பை மேற்கொண்டு வருகின்றனர். உலகளாவிய தொற்றுநோய் மற்றும் மூடப்பட்ட சர்வதேச எல்லைகளை அடுத்து, ஐக்கிய இராச்சியத்தில் பல்கலைக்கழகங்களும் அவற்றின் சர்வதேச கற்றல் நிலையங்களும் இந்த ஆண்டு மாணவர்களுக்கு கலப்பு கற்பித்தலை முன்னெடுத்து வருவதுடன், இது நேருக்கு நேர் மற்றும் மெய்நிகர் ஆசிரியர் தலைமையிலான கற்பித்தல் ஆகும். Pfizer/BioNTech தடுப்பூசிக்கான அணுகலுடன், இலங்கை மாணவர்களுக்கு தற்போது  உறுதியளிக்க முடியுமென்பதுடன்,  அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் பல்கலைக்கழகத்துக்கு திரும்ப முடியுமென்று எதிர்பார்க்க முடியும்.

Share

You may also like...