‘GlobalHealth Sri Lanka 2026’ நிகழ்வில் கண் மருத்துவ சேவைகளின் சிறப்பம்சத்திற்காக Vasan Eye Care மருத்துவமனைக்கு கௌரவம்

இலங்கையின் முதலாவது மிகச் சிறப்பு வாய்ந்த கண் பராமரிப்பு மையமான ‘Vasan Eye Care Hospital‘ (வாசன் கண் மருத்துவமனை), ‘GlobalHealth Sri Lanka Conference & Awards 2026’ நிகழ்வில் ‘Ophthalmology Service Provider of the Year in Sri Lanka – 2026’ (இலங்கையின் ஆண்டின் சிறந்த கண் மருத்துவ சேவை வழங்குநர் – 2026) என பெயரிடப்பட்டுள்ளது. இது நாட்டில் நிபுணத்துவம் மிக்க கண் மருத்துவம் மற்றும் நோயாளிகளை மையமாகக் கொண்ட கண் பராமரிப்பிற்காக மருத்துவமனை வழங்கிய பங்களிப்பிற்கான அங்கீகாரமாக அமைகிறது.
சிங்கப்பூரை தளமாகக் கொண்ட பிராந்திய சுகாதாரத் தளமான ‘GlobalHealth Asia-Pacific’ நிறுவனத்தினால் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதானது வாசனின் நிபுணத்துவம் வாய்ந்த கண் பராமரிப்பு சேவைகளை, ஒரு பிராந்திய சுகாதார அங்கீகாரத் தளத்திற்குள் கொண்டு சேர்ப்பதுடன், இலங்கையில் விரிவான கண் பராமரிப்புக்கான அணுகலை தொடர்ச்சியாக விரிவுபடுத்தி வரும் இம்மருத்துவமனைக்கு ஒரு முக்கிய மைல்கல்லாகவும் அமைந்துள்ளது.
Vasan Eye Care மருத்துவமனை 2010 ஆம் ஆண்டு தனது செயற்பாடுகளை ஆரம்பித்தது முதல், கண் பராமரிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறது. 15 ஆண்டுகளுக்கும் மேலாக, இம்மருத்துவமனை நிபுணத்துவம் வாய்ந்த கண் மருத்துவர்கள், மேம்பட்ட நோயறிதல் உள்ளிட்ட பரிசோதனைத் தொழில்நுட்பங்கள், நவீன அறுவை சிகிச்சை கூடங்கள் மற்றும் பயிற்சி பெற்ற மருத்துவ மற்றும் ஆதரவுக் குழுக்களை ஒன்றிணைத்து, ஒரு பிரத்தியேக கண் மருத்துவ சூழலில் நோயறிதல், சிகிச்சை, அறுவை சிகிச்சை மற்றும் சிகிச்சைக்குப் பிந்தைய ஆதரவை நோயாளிகளுக்கு வழங்கி வருகிறது.
கண்புரை நோய் (Cataract) அறுவை சிகிச்சை, விழித்திரை (Retina) சிகிச்சைகள், கருவிழி (Cornea) சார்ந்த நடைமுறைகள், குளுக்கோமா (Glaucoma) முகாமைத்துவம், குழந்தைகளுக்கான கண் மருத்துவம் மற்றும் கண்குறைபாடு அறுவை சிகிச்சைகள் (Refractive surgery) ஆகியன மருத்துவமனையினால் வழங்கப்படும் பிரத்தியேக கண் மருத்துவ சேவைகளில் உள்ளடங்கும் சேவைகளாகும். துணைப் பிரிவு நிபுணத்துவ கண் மருத்துவர்களும் இச்சேவைகளுக்கு ஆதரவளிக்கின்றனர், இதனால் நோயாளிகள் தமது தனிப்பட்ட மருத்துவத் தேவைகளுக்கு ஏற்ப பிரத்தியேக மதிப்பீட்டையும் சிகிச்சையையும் பெற முடிகிறது.
கண் பராமரிப்பை நோக்கிய நோயாளியின் பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் எடுக்கப்படும் முயற்சிகளை இந்த கௌரவம் பிரதிபலிக்கிறது என்பதையும் இம்மருத்துவமனை வலியுறுத்துகிறது. துல்லியமான நோயறிதல் மற்றும் நிபுணத்துவம் வாய்ந்த சிகிச்சை முதல் அறுவை சிகிச்சை மற்றும் தொடர்ச்சியான பராமரிப்பு வரை, நோயாளிகளுக்கு அவசியமான நிபுணத்துவம் மற்றும் பராமரிப்பை வழங்குவதே எப்போதும் அதன் இலக்காக இருந்துள்ளது. GlobalHealth அமைப்பு வழங்கிய இந்த அங்கீகாரமானது இலங்கையில் வழங்கப்படும் நிபுணத்துவ கண் பராமரிப்பின் தரத்தைத் தொடர்ச்சியாக மேம்படுத்துவதற்கான ஒரு ஊக்கமாக அமைகிறது.
நிபுணத்துவம் வாய்ந்த கண் பராமரிப்பு தொடர்பில் அதிகரித்து வரும் தேவைகளைக் கருத்தில் கொள்ளும்போது, விரிவான கண் மருத்துவத்தில் வாசன் மருத்துவமனை செலுத்தும் கவனமானது, பொருத்தமானதாக அமைந்துள்ளது. கண்புரை நோய், குளுக்கோமா, நீரிழிவு விழித்திரை நோய் (Diabetic retinopathy), விழித்திரை அசாதாரண நிலைமைகள் மற்றும் வயது தொடர்பான கண் நோய்கள் போன்ற நிலைகள், பார்வையையும் வாழ்க்கைத் தரத்தையும் பாதிக்கலாம். ஆரம்பகால கண்டறிதல் மற்றும் சரியான நேரத்தில் மேற்கொள்ளப்படும் சிகிச்சை ஆகியன பார்வை இழப்பைத் தடுக்க உதவும். இதன் விளைவாக, வழக்கமான கண் பரிசோதனைகளுக்கு, குறிப்பாக 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு தொடர்ந்து அதிக முக்கியத்துவம் அளிக்கிறது.
அது மாத்திரமன்றி, இம்மருத்துவமனையானது நோயறிதல் சேவைகள், நிபுணர் ஆலோசனைகள், அறுவை சிகிச்சை மற்றும் சிகிச்சைக்குப் பிந்தைய ஆதரவு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு ஒருங்கிணைந்த பார்வை தொடர்பான பராமரிப்பு அணுகுமுறையை நோயாளர்களுக்கு வழங்குகிறது. முக்கிய பெருநிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு காப்புறுதித் திட்டங்களையும் மருத்துவமனை ஏற்றுக்கொள்கிறது. இது தேவை கொண்ட நோயாளர்களுக்கு பிரத்தியேக கண் மருத்துவ சேவைகளுக்கான அணுகலை இலகுபடுத்துகிறது.
மருத்துமனைக்கு கிடைத்துள்ள இந்த அங்கீகாரமானது கண் மருத்துவ நிபுணத்துவம், தொழில்நுட்பம் மற்றும் நோயாளர் பராமரிப்பு ஆகியவற்றில் Vasan Eye Care மருத்துவமனையின் தொடர்ச்சியான கவனத்திற்கான சான்றாக அமைகிறது. இலங்கையில் உள்ள நோயாளர்களுக்கு சிறந்த கண் பராமரிப்பு, சிறந்த பார்வை மற்றும் சிறந்த பெறுபேறுகளை வழங்குவது தொடர்பில் தனது முன்னோக்கிய சிந்தனையின் மூலம் அதன் கவனத்தில் இம்மருத்துவமனை தெளிவாக இயங்கி வருகின்றது.
END

Recent Comments