Groundworth Group இடமிருந்து மாலபே, பிட்டுகல பிரதேசத்தில் ‘Urban One’ – உயர் தர காணி அபிவிருத்தித் திட்டம் அறிமுகம்
Groundworth Group, மாலபே – பிட்டுக்கல பிரதேசத்தில் முன்னேற்றம் பெற்று வரும் தகவல் தொழில்நுட்ப மற்றும் கல்வி மையப் பகுதியில் மூலோபாய ரீதியாக அமையப்பெற்றுள்ள Urban One by Groundworth எனும் உயர்தர காணி அபிவிருத்தித் திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது. 17 குடியிருப்பு நிலப்பகுதிகளை மட்டும் கொண்ட Urban One, வெளிச் சுற்றுவட்ட அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டு நுழைவாயில்கள், கல்வி நிறுவனங்கள், சுகாதார மையங்கள், வர்த்தக நிலையங்கள் மற்றும் அன்றாட அத்தியாவசிய சேவைகளுக்கான அணுகலை எளிதாக வழங்குகிறது. இதனால், குடியிருப்பு மேம்பாட்டிற்கும் நீண்டகால முதலீட்டிற்கும் ஏற்ற ஒரு முதன்மையான வாய்ப்பாக இது அமையும்.
வேகமாக வளர்ச்சியடைந்து வரும் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள Urban One, மாலபேயின் முக்கிய வர்த்தக மற்றும் கல்வி மையங்களை எளிதில் சென்றடைவதற்கான அணுகல் வசதியை வழங்குகிறது. புதிய கண்டி வீதியையும், Low-Level வீதியையும் கொழும்புடன் இணைக்கும் கடுவெல அதிவேக நெடுஞ்சாலை இடம்மாறல், இத்திட்டத்திலிருந்து சுமார் 4 கி.மீ தொலைவிலும், தெற்கு அதிவேக நெடுஞ்சாலைக்கு நேரடி அணுகலை வழங்கும் வெளிச் சுற்றுவட்ட அதிவேக நெடுஞ்சாலையின் (E02) அத்துருகிரிய நுழைவாயில் சுமார் 2 கி.மீ தொலையிலும் அமைந்துள்ளன.
இந்த அறிமுகம் தொடர்பில் Groundworth Group இன் முகாமைத்துவப் பணிப்பாளரும், இணை-ஸ்தாபகருமான கசுன் அந்தரஹென்னாதி கருத்துத் தெரிவிக்கையில், “வாழ்வதற்கும், முதலீட்டுக்கும் ஒரு இடத்தை மிகவும் நடைமுறைச் சாத்தியமானதாக மாற்றும் முக்கிய காரணிகளான இலகுவான அணுகல், கல்வி நிறுவனங்கள் மற்றும் அன்றாட வசதிகளுக்கான அருகாமை, மேலும் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வரும் சூழல் ஆகிய அனைத்தையும் Urban One ஒன்றிணைத்து வழங்குகிறது. மாலபேயின் வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்ப மற்றும் கல்விச் சூழல் அமைப்பின் ஆதரவோடு, வாடிக்கையாளர்கள் தங்கள் சொந்த வீடொன்றைக் கட்டுவதற்கும் அல்லது முதலீடு செய்வதற்கும் ஏற்ற ஒரு வரையறுக்கப்பட்ட வாய்ப்பை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.” என்றார்.

SLIIT கல்வியகம் சுமார் 1.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளதுடன், Urban One பிட்டுகல சந்திப்பு மற்றும் மாலபே நகரத்திலிருந்து சுமார் 1 கி.மீ தொலையில் அமைந்து, இப்பகுதியின் முக்கிய பல்கலைக்கழகங்களில் ஒன்றிற்கு எளிதான அணுகலை வழங்குவதுடன், தொழில்முறையாளர்கள் மற்றும் மாணவர்களுக்கான தங்குமிடத் தேவைகளுக்கும் ஆதரவளிக்கிறது. இத்திட்டத்திலிருந்து மாலபேயில் விரைவில் திறக்கப்படவுள்ள Gateway College சுமார் 3.5 கி.மீ தொலையில் உள்ளது. மெடிஹெல்ப் அத்துருகிரிய மற்றும் வைத்தியர் நெவில் பெர்னாண்டோ போதனா மருத்துவமனை ஆகியவை சுமார் 2.5 – 3 கி.மீ தொலைவிலும், SPAR, Keells மற்றும் GLOMARK போன்ற சூப்பர் மார்க்கெட்கள் அனைத்தும் சுமார் 1.2 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளன. முன்னணிப் பாடசாலைகள், வங்கிகள், உணவகங்கள் மற்றும் இதர அன்றாட அத்தியாவசியச் சேவைகள் அனைத்தும் இத்திட்டத்திற்கு மிகவும் அருகாமையிலேயே உள்ளன.
6 பேர்ச் முதல் ஆரம்பிக்கும் காணி அளவுகளுடன், Urban One குடியிருப்பு மேம்பாட்டிற்கு ஏற்ற நிலப்பகுதிகளை வழங்குவதுடன், நன்கு அமைக்கப்பட்ட 30 அடி அகல வீதி அணுகல், மின்சாரம் மற்றும் குழாய் நீர் இணைப்புகள், மற்றும் உறுதியான காணி உறுதிப் பத்திரங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மாலபேயின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் கல்வித் துறைப் பகுதியைச் சுற்றி அதிகரித்து வரும் காணித் தேவைகளுக்கான அணுகலை இத்திட்டம் வழங்குவதுடன், அமைதியான மற்றும் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் குடியிருப்புச் சூழலில் இது அமையப்பெற்றுள்ளது. இங்கு நிலம் ஒன்றின் ஆரம்ப விலை பேர்ச் ஒன்றுக்கு 1.85 மில்லியன் ரூபாயாகும்.
Urban One by Groundworth ஐ நேரடியாக விஜயம் செய்து பார்வையிட முடியும் என்பதுடன், மட்டுப்படுத்தப்பட்டளவு காணித் துண்டுகள் மாத்திரமே எஞ்சியுள்ளன.


Recent Comments