David Pieris Automobiles இலங்கையின் முதலாவது GWM Flagship Experience Centre ஐ திறந்துள்ளது

கொழும்பு, யூனியன் பிளேஸில் Premium Mobility இன் புதிய யுகம் ஆரம்பம்

David Pieris Group இன் நான்கு சக்கர வாகன விற்பனைப் பிரிவான David Pieris Automobiles (Private) Limited (DPA), தனது நவீன வசதிகள் படைத்த GWM Flagship Experience Centre ஐ  No 250, Access Tower 03, Union Place, Colombo 02 எனும் முகவரியில் திறந்துள்ளது. இது இலங்கையின் வாகன விற்பனைத் துறையில் முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல்லாக அமைந்துள்ளது.

புதிதாகத் திறக்கப்பட்டுள்ள இந்த Flagship நிலையம், உலகின் முன்னணி வாகன உற்பத்தியாளர்களில் ஒன்றான GWM நிறுவனத்தின் அதிநவீன கண்டுபிடிப்புகளையும் தொழில்நுட்பங்களையும் உள்ளடக்கி, உண்மையான உலகத்தரம் வாய்ந்த வாகன அனுபவத்தை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் முதன்முறையாகவும், தனித்துவமாகவும் அமைக்கப்பட்டுள்ள இத்தகைய Experience Centre, வாடிக்கையாளர்களுக்குப் பாரம்பரியக் காட்சியறை கருத்தாக்கத்திற்கு அப்பாற்பட்ட ஒரு சிறந்த அனுபவப் பயணத்தை வழங்குகின்றது. இங்கு வருகை தருவோர் HAVAL H6 HEV, HAVAL H6 PHEV, HAVAL H6 GT PHEV, TANK 300 HEV மற்றும் TANK 500 HEV உள்ளிட்ட GWM நிறுவனத்தின் பிரீமியம் ரக SUV மற்றும் மின்சார வாகனங்களை பற்றிய தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும். அத்துடன், இதற்கென அர்ப்பணிக்கப்பட்ட வாகன விளக்கமளிப்புப் பகுதிகள், Test-drive வாய்ப்புகள் மற்றும் வாகனக் கொள்வனவுப் பயணத்தை மறுவரையறை செய்யக்கூடிய வகையிலான பல புதுமையான வாடிக்கையாளர்களைக் கவரும் அம்சங்களையும் அவர்கள் இங்கு அனுபவிக்கலாம். மேலும், எதிர்வரும் மாதங்களில் முழுமையான மின்சார வாகனத் தெரிவு உள்ளிட்ட பல புதிய மாதிரிகளின் அறிமுகத்துடன், இலங்கையில் GWM இன் தயாரிப்புத் தெரிவுகள் மேலும் விரிவுபடுத்தப்படவுள்ளது.

நான்கு தசாப்தங்களுக்கும் மேலான வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்ட David Pieris Group, இலங்கையின் மிகவும் நம்பகமான வாகன விற்பனை நிறுவனங்களில் ஒன்றாகப் புகழ்பெற்ற விளங்குகின்றது. குறிப்பாக, அதன் விரிவான விற்பனைக்குப் பின்னரான சேவை மற்றும் வாடிக்கையாளர் சேவைச் சிறப்பிற்காக இது பெரிதும் அறியப்படுகிறது. GWM வாடிக்கையாளர்களுக்கான தனது அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்தும் முகமாக, DPA நிறுவனம் No. 75, Hyde Park Corner, Colombo 02 என்ற முகவரியில் இதற்காக அர்ப்பணிக்கப்பட்ட, அதிநவீன GWM சேவை நிலையம் ஒன்றை ஏற்கனவே நிறுவியுள்ளது. மேலும், வாடிக்கையாளர்களுக்குத் தடையற்ற மற்றும் நம்பகமான சேவையை உறுதி செய்வதற்காக, நாடு முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட சேவை முகவர்களின் விரிவடைந்து வரும் வலையமைப்பொன்றின் ஆதரவையும் இது வழங்குகின்றது.

இந்த நிலையத்தின் திறந்து வைப்பு தொடர்பில் David Pieris Automobiles பணிப்பாளர் திரு. மஹேஷ் குணதிலக கருத்துத் தெரிவிக்கையில், “GWM Flagship Experience Centre, இலங்கையில் GWM வர்த்தக நாமத்துடனான எமது பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைப் பிரதிபலிக்கின்றது. GWM வாகனங்களுக்காக நாட்டினுள் அர்ப்பணிக்கப்பட்ட முதலாவது அதிநவீன Experience Centre இது என்பதுடன், உலகத்தரம் வாய்ந்த வாகனத் தொழில்நுட்பம், பிரீமியம் ரக வசதிகள் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களை வாடிக்கையாளர்கள் நேரில் அனுபவிப்பதற்கான வாய்ப்பையும் இது வழங்குகின்றது. உயர் சொகுசுத் தன்மையையும், புதுமையையும் மலிவு விலையில் வழங்குவதன் மூலம், நவீன mobility தீர்வுகளை, GWM வெற்றிகரமாக மறுவரையறை செய்துள்ளது. இத்தகைய அனுபவத்தை இலங்கை வாகன ஓட்டிகளுக்கு வழங்குவதில் நாங்கள் பெருமையடைகின்றோம்.” என்றார்.

இந்த Flagship நிலையம், இலங்கையில் GWM வர்த்தக நாமத்தின் இருப்பை விரிவுபடுத்துவதற்கான David Pieris Automobiles நிறுவனத்தின் அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்துகின்றது. அத்துடன், இக்குழுமத்தின் புகழ்பெற்ற விற்பனை மற்றும் விற்பனைக்குப் பின்னரான நிபுணத்துவத்தின் ஆதரவுடன், வாடிக்கையாளர்களுக்கு இணையற்ற அனுபவத்தை வழங்குகின்றது.

GWM வாகனத் தொடர் பற்றிய மேலதிக விபரங்களை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்கள், test drive முற்பதிவு செய்வதற்கு அல்லது வாகனமொன்றை Pre-booking செய்வதற்கு 011 7888 866 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம், www.gwmsrilanka.lk  எனும் இணையத்தளத்தை பார்க்கலாம் அல்லது GWM Sri Lanka by DPA என்ற Facebook பக்கத்தைப் பின்தொடர்ந்து தகவல்கள் மற்றும் தள்ளுபடிகள் பற்றிய தகவல்களைப் பெறலாம்.

Share

You may also like...