Unity Plaza வில் புதிய உயர் ரக காட்சியறையை திறந்த Creative Information Technologies
18 ஆண்டுகளுக்கும் மேலான, நம்பகமான தொழில்துறை விசேடத்துவத்தைக் கொண்ட இலங்கையின் முன்னணி தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப (ICT) தீர்வு வழங்குநர்களில் ஒன்றான Creative Information Technologies (Pvt) Ltd நிறுவனம், இலங்கையின் முதன்மையான ICT மற்றும் தொழில்நுட்ப சந்தையான Unity Plaza வளாகத்தில் 2026 மே 25 ஆம் திகதி தனது புதிய காட்சியறையை திறந்துள்ளதாக அறிவித்துள்ளது. இது நாட்டின் தொழில்நுட்பச் சந்தையில் தனது வாடிக்கையாளர் இருப்பை மேலும் வலுப்படுத்துகிறது.
நாடெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு புத்தாக்கமான மற்றும் உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்ப தீர்வுகளை வழங்கும், நிறுவனத்தின் தொடர்ச்சியான பயணத்தில் இந்த புதிய காட்சியறையானது மற்றுமொரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது. 2008ஆம் ஆண்டு முதல் இலங்கையின் ICT துறையில் நம்பகமான பெயராக அங்கீகாரம் பெற்றுள்ள Creative Information Technologies நிறுவனம், தரம், வாடிக்கையாளர் திருப்தி மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகளுக்கான தனது அர்ப்பணிப்பு மூலம் வலுவான நற்பெயரை கட்டியெழுப்பியுள்ளது.

Creative Information Technologies நிறுவனம் சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட வர்த்தகநாமங்களான Amida, HAVIT, PNY ஆகியவற்றின் உத்தியோகபூர்வ விநியோகஸ்தராகவும் அவற்றின் முகவராகவும் செயற்படும் அதே வேளையில், அதன் விரிவடைந்து வரும் விற்பனை மற்றும் விநியோக வலையமைப்பின் ஊடாக HP, Dell, Asus, MSI உள்ளிட்ட ஏனைய முன்னணி உலகளாவிய தொழில்நுட்ப வர்த்தகநாமங்களையும் வழங்கி வருகிறது. இந்நிறுவனம் மடிகணனிகள், தனிநபர் கணனிகள், பிரிண்டர்களுக்கு அவசியமான பொருட்கள், கேமிங் உபகரணங்கள், CCTV தீர்வுகள், நெட்வொர்க்கிங் தொகுதிகள், தரவு சேமிப்பு சாதனங்கள், கையடக்க தொலைபேசிகளுக்கான பாகங்கள் உள்ளிட்ட விரிவான ICT தயாரிப்புகள் மற்றும் அது தொடர்பான சேவைகளையும் வழங்குகிறது.
இந்த விரிவாக்கம் குறித்து Creative Information Technologies நிறுவனத்தின் தலைவர் சுப்ரமணியம் சுரேஷ் கருத்துத் தெரிவிக்கையில், இந்த புதிய காட்சியறையானது, மனிதர்களை தொழில்நுட்பத்துடன் இணைப்பதில் ஒரு விருப்பத்திற்குரிய மற்றும் நம்பகமான பங்காளராக மாறுவது தொடர்பான, நிறுவனம் கொண்டுள்ள நீண்டகால தொலைநோக்குப் பார்வையைப் பிரதிபலிக்கிறது என்றார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “Creative Information Technologies நிறுவனத்தில், மனிதர்களை தொழில்நுட்பத்துடன் இணைக்கின்ற, விருப்பத்திற்குரிய மற்றும் நம்பகமான விநியோகஸ்தராக மாறுவதே எமது தொலைநோக்குப் பார்வையாகும். எமது புதிய காட்சியறையின் திறப்பானது, இலங்கை முழுவதிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த ICT தயாரிப்புகள் மற்றும் தீர்வுகளை எளிதாக கிடைக்கச் செய்வதன் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் எமது இலக்குடன் ஒத்துப்போகும் அதே நேரத்தில் புத்தாக்கம், நம்பகத்தன்மை மற்றும் சிறந்த சேவையை நாம் தொடர்ச்சியாக வழங்குவோம்.” என்றார்.
இந்நிறுவனத்தின் தொலைநோக்குப் பார்வை, “மனிதர்களை தொழில்நுட்பத்துடன் இணைக்கின்ற, விருப்பத்திற்குரிய மற்றும் நம்பகமான விநியோகஸ்தராக இருத்தல்” என்பதாகும். அதே நேரத்தில் அதன் குறிக்கோளானது, உலகத்தரம் வாய்ந்த ICT தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கான பரந்த அணுகல் மூலம் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.
நாடளாவிய ரீதியில் அதிகரித்து வரும் வாடிக்கையாளர் தளம், வலுவான சர்வதேச கூட்டாண்மைகள் மற்றும் தொடர்ச்சியான புத்தாக்கத்திற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றுடன், இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் முற்போக்கான ICT நிறுவனங்களில் ஒன்றாக தனது நிலையை Creative Information Technologies நிறுவனம் தொடர்ச்சியாக பலப்படுத்தி வருகிறது.
மேலதிக விபரங்களுக்கு, Creative Information Technologies இணையத்தளத்தை பார்வையிடவும்.

Recent Comments