2026 கூட்டாளர் மாநாட்டில் முற்றிலும் புதிய பிரின்டர் தீர்வுகளை அறிமுகப்படுத்தும் PANTUM

IT Gallery Computers (Pvt) Ltd hosted the PANTUM Partner Summit 2026 by officially launching its latest printer lineup, including the Smart Classic Series, BM2300 Series Mono Laser Multifunction Printer, BP2300 Series Mono Laser Printer, CP2100 Series Colour Laser Single Function Printer, and CM2100 Series Colour Laser Multifunction Printer.

IT Gallery Computers (Pvt) Ltd நிறுவனம் அண்மையில் ‘PANTUM Partner Summit 2026’ நிகழ்வை முன்னெடுத்திருந்தது. இது இலங்கையில் PANTUM வர்த்தக நாமத்தின் 14 ஆண்டு கால வெற்றிகரமான பயணத்தை குறிக்கின்றது. ‘தொடர்ச்சியான புத்தாக்கம்’ எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இந்த மாநாட்டின் ஒரு முக்கிய சிறப்பம்சமாக, PANTUM நிறுவனத்தின் புதிய ரக Printers (பிரின்டர்கள்) உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டன. இதன்போது, Smart Classic Series, BM2300 Series Mono Laser Multifunction Printer, BP2300 Series Mono Laser Printer, CP2100 Series Colour Laser Single Function Printer, CM2100 Series Colour Laser Multifunction Printer ஆகியன அறிமுகம் செய்யப்பட்டன. இதன் மூலம் இலங்கையின் போட்டித்தன்மை வாய்ந்த அச்சிடல் தீர்வுகள் சந்தையில் PANTUM இன் நிலையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

இந்த புதிய பிரின்டர்கள் வணிக நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் மாறிவரும் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. வினைத்திறன், நம்பகத்தன்மை, செலவு குறைவான தன்மை ஆகியவற்றில் கவனம் செலுத்தி, இலங்கை சந்தைக்கு ஏற்ற உயர்தர பிரின்டர் தீர்வுகளை வழங்குவதற்கான வர்த்தக நாமத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இந்த புதிய தயாரிப்புகள் வெளிப்படுத்துகின்றன.

வளர்ச்சியை மேம்படுத்துவதில் கூட்டாண்மைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, IT Gallery Computers (Pvt) Ltd நிறுவனத்தின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான டிலந்த பெரேரா கருத்துத் தெரிவிக்கையில், “கடந்த 14 வருடங்களில் PANTUM நிறுவனத்துடனான எமது பயணம் வலுவான உறவுகள், பகிரப்பட்ட விழுமியங்கள் மற்றும் சிறந்த சேவையை வழங்குவதற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மூலம் அடையாளப்படுத்தப்படுகிறது. இந்த மாநாடானது நாம் கடந்து வந்த தூரத்தை கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல், எமது பங்காளர்கள் எம் மீது வைத்துள்ள நம்பிக்கையின் பிரதிபலிப்பாகவும் அமைகிறது. நாம் முன்னோக்கிச் செல்லும் வேளையில், புத்தாக்கமான தீர்வுகளை அறிமுகப்படுத்துவதிலும், இலங்கை முழுவதும் உள்ள எமது பங்காளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு மேலதிக மதிப்பை உருவாக்குவதிலும் நாம் தொடர்ச்சியாக கவனம் செலுத்தி வருகிறோம்.” என்றார்.

இந்நிகழ்வின் சிறப்பம்சமாக, PANTUM நிறுவனத்தின் சந்தைப் பிரசன்னத்தை வலுப்படுத்துவதில் முக்கிய பங்களிப்பை வழங்கி, சிறந்த முறையில் செயற்பட்ட 20 விற்பனையாளர்கள் (Top 20 Dealers) கௌரவிக்கப்பட்டனர். நம்பிக்கை, நிலைத்தன்மை மற்றும் நீண்ட கால ஒத்துழைப்பின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட பகிரப்பட்ட வெற்றியின் சான்றாக இந்த விருது விழா அமைந்தது.

முன்னணி தொழில்நுட்ப வர்த்தக நாமங்களை விநியோகிப்பதில் சிறந்த அனுபவத்தை கொண்டுள்ள IT Gallery நிறுவனம், 150 இற்கும் மேற்பட்ட விற்பனையாளர்களைக் கொண்ட ஒரு பரந்த வலையமைப்பின் மூலம் நாட்டின் தகவல் தொழில்நுட்பத் துறையில் முக்கிய பங்கு வகிக்கின்றது. PANTUM பங்காளர் மாநாடு 2026’ ஆனது, ஒரு நம்பகமான விநியோகஸ்தர் எனும் வகையில் தனது பங்காளர்களை ஊக்குவிக்கும் அதேவேளை அச்சிடல் துறையில் புத்தாக்கத்தை ஊக்குவிக்கும் நிறுவனம் எனும் வகையில் IT Gallery நிறுவனத்தின் நிலையை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.

எதிர்காலத்தில், IT Gallery மற்றும் PANTUM நிறுவனங்கள் இணைந்து இலங்கையில் தமது வர்த்தக எல்லைகளை விரிவுபடுத்தவும், பங்காளர் கட்டமைப்பை வலுப்படுத்தவும், அச்சிடல் தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தை மீள்வரையறை செய்யவும் தயாராக உள்ளன.

Share

You may also like...