அன்பின் மரபிற்கு கௌரவம்: SLIM KANTAR People’s Awards 2026 இல் விருது பெற்ற ‘பேபி செரமி’
இலங்கை முழுவதும் உள்ள மக்கள் வர்த்தக நாமத்தின் மீது வைத்துள்ள ஆழ்ந்த அன்பு மற்றும் நம்பிக்கையை பறைசாற்றும் வகையில், அண்மையில் நடைபெற்ற SLIM KANTAR People’s Awards 2026 நிகழ்வில் பேபி செரமி (Baby Cheramy) ஆண்டின் சிறந்த ‘குழந்தை பராமரிப்பு வர்த்தக நாமம்’ (Baby Care Brand of the Year) என மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மதிப்புமிக்க வெற்றியானது, நுகர்வோருடன் கொண்டுள்ள வலுவான உணர்வுபூர்வமான பிணைப்பை வெளிப்படுத்துவதுடன், இலங்கையின் மிகவும் நம்பகமான குழந்தை பராமரிப்பு வர்த்தக நாமமாக பேபி செரமியின் முன்னிலை நிலையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. 64 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றை கொண்டுள்ள பேபி செரமி, இலங்கை குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவதற்கு தொடர்ச்சியாக பணியாற்றி வருவதுடன், தலைமுறை தலைமுறையாக பெற்றோரின் பயணத்தில் ஒரு நிம்மதியான துணையாக இருந்து வருகின்றது.
இது குறித்து, Hemas Consumer Brands நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சப்ரினா யூசுபலி கருத்துத் தெரிவிக்கையில், “மதிப்புமிக்க SLIM KANTAR People’s Awards 2026 இல் வருடத்தின் சிறந்த குழந்தை பராமரிப்பு வர்த்தக நாமமாகத் தெரிவு செய்யப்பட்டதில் நாம் பெருமையடைகிறோம். இந்த அங்கீகாரம் மக்களால் நேரடியாக தெரிவு செய்யப்பட்டதால் மிகவும் அர்த்தமுள்ளதாக அமைகிறது. அவர்களது இந்த தெரிவானது பல தசாப்தங்களாக இலங்கை நுகர்வோர் மத்தியில் கட்டியெழுப்பப்பட்ட ஆழமான நம்பிக்கை, தலைமுறை ரீதியான விசுவாசம் மற்றும் நிபுணத்துவத்தை பிரதிபலிக்கிறது. பாதுகாப்பு மற்றும் மென்மையான பராமரிப்புடனான வர்த்தக நாமத்தின் நீண்டகால தொடர்பை அங்கீகரித்தமைக்காக நாடு முழுவதும் உள்ள குடும்பங்களுக்கு பேபி செரமி நன்றி தெரிவித்துக் கொள்கிறது. இந்த கௌரவமானது, அதீத நம்பிக்கையுடனும் அன்புடனும் பேபி செரமியை தெரிவு செய்த ஒவ்வொரு இலங்கையருக்கும் உரித்தானதாகும்.” என்றார்.
பேபி செரமி வர்த்தக நாமத்தை தமது வாழ்வின் ஓர் அங்கமாக மாற்றியமைக்காக, சந்தைப்படுத்தல் பணிப்பாளர் ஷியான் ஜயவீர நாடு முழுவதும் உள்ள நுகர்வோருக்கு தனது நன்றிகளை தெரிவித்ததுடன், வர்த்தக நாமத்தின் நிலையான பாரம்பரியத்தை கட்டியெழுப்பப் பங்களித்த ஊழியர்கள் மற்றும் கூட்டாளர்களின் கூட்டு முயற்சியையும் பாராட்டினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த முதன்மையான விருதானது, எமது வளர்ச்சியை ஊக்கப்படுத்துவதுடன், புத்தாக்கம் மற்றும் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கான ஒரு வலுவான உந்துதலாக அமைகிறது. இதன் மூலம் குழந்தை பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் தரம் ஆகியவற்றில் பேபி செரமி புதிய தரநிலைகளை தொடர்ச்சியாக உருவாக்குவதை உறுதி செய்வோம். இந்த அர்ப்பணிப்புக்கு அமைய, இலங்கை தாய்மார்களின் மாற்றமடைந்து வரும் தேவைகளுக்கு ஏற்ப, அண்மையில் தனது தயாரிப்பு வரிசையை பேபி செரமி மீளமைத்துள்ளது. தாய்மார்களது எதிர்பார்ப்புகளை, புத்தாக்கத்தின் மையமாக கொண்டு, மேம்பட்ட குழந்தை பராமரிப்பு தீர்வுகள் மூலம் பாதுகாப்பு தரங்களை உயர்த்த நாம் பாடுபடுகிறோம்.” என்றார்.
Hemas Consumer பற்றி
இலங்கையின் வீட்டு மற்றும் தனிநபர் பராமரிப்புத் துறையில் 60 வருடங்களுக்கும் மேலாக முன்னணியில் உள்ள Hemas Consumer Brands, குடும்பங்கள் ஒரு சிறந்த எதிர்காலத்தை நோக்கி பயணிப்பதை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்துகிறது. உள்ளூர் மக்கள் தொடர்பான நுண்ணறிவுத் தகல்களை பயன்படுத்தி, புத்தாக்கமான மற்றும் நுகர்வோரை மையமாகக் கொண்ட தீர்வுகளை உருவாக்குவதில் நிறுவனம் பெருமிதம் கொள்கிறது. இது இலங்கையின் நம்பகமான வீட்டுப் பெயர்களாக அதன் வர்த்தக நாமங்களை நிலைநிறுத்த உதவியுள்ளது. இலங்கை நுகர்வோர் குறித்த ஆழமான புரிதல் மற்றும் தனது தயாரிப்புகள் மூலம் சிறந்த தரம் மற்றும் மதிப்பினை வழங்குவதற்கான தளராத அர்ப்பணிப்புடன், Hemas Consumer Brands ஆனது நாடு முழுவதும் உள்ள மக்களின் வாழ்க்கையை தொடர்ச்சியாக வளப்படுத்தி வருகின்றது.
Photo Caption
SLIM KANTAR People’s Awards 2026 நிகழ்வில், இலங்கை நுகர்வோரின் நம்பிக்கை மற்றும் விசுவாசத்தை பிரதிபலிக்கும் வகையில், ‘ஆண்டின் சிறந்த குழந்தை பராமரிப்பு வர்த்தக நாமம்’ எனும் விருதைப் பெற்றுக் கொண்ட பேபி செரமி குழுவினர்.

Recent Comments