சரிவுநிலையிலும்தனதுசமூகத்துடன்உறுதியாகநிற்கும் Bybit: நிலையானதன்மை, நிலையானவருமானம், நீண்டகாலஅர்ப்பணிப்பு

கிரிப்டோ தொடர்பான அச்சம் மற்றும் கேள்விச் சுட்டெண் (Crypto Fear and Greed Index) ஆனது, வரலாற்று ரீதியான சரிவைக் கண்டுள்ள நிலையிலும், Bitcoin அதன் உச்சகட்ட விலையிலிருந்து பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ள சூழலிலும், வர்த்தகக் கொள்ளளவின் அடிப்படையில் உலகின் இரண்டாவது பெரிய கிரிப்டோ பரிமாற்ற (Exchange) நிறுவனமான Bybit, அதன் நம்பிக்கையை மீள உறுதிப்படுத்துகிறது. நிலையான தன்மை, தெளிவு, நிலையான வருமானம் ஈட்டுவதற்கான உண்மையான வாய்ப்புகளுமே நிச்சயமற்ற தருணங்களில் சமூகத்திற்கு தேவையாகும். சந்தையின் ஏற்ற இறக்கங்களின் போது பின்வாங்காமல், புதிய வாய்ப்புகளை விரிவுபடுத்துவதன் மூலமும், நிலையான வருமானம் தரும் முதலீட்டுத் தயாரிப்புகளை வலுப்படுத்துவதன் மூலமும், Bybit தனது உலகளாவிய பயனர்களுடன் தோளோடு தோள் நின்று செயற்படுகிறது.

Bybit நிறுவனத்தின் இணை பிரதம நிறைவேற்று அதிகாரி (Co-CEO) ஹெலன் லியூ (Helen Liu) தெரிவிக்கையில், “நிச்சயமற்ற இந்த நேரத்தில் எமது பயனர்கள் அதிகம் விரும்புவது நிலையான தன்மையே என நாம் நம்புகிறோம். சந்தை மீண்டெழும் என்பதில் எமக்கு சந்தேகமில்லை. அது வரை பயனர்களின் நிதி அழுத்தத்தைக் குறைப்பதும், நிலையான வருமானம் ஈட்டுவதற்கான உண்மையான வாய்ப்புகளை வழங்குவதும், பயனர்களுடன் Bybit இருக்கிறது என்பதை உறுதிப்படுத்துவதுமே எமது கடமையாகும்.” என்றார்.

அவசியமான தருணத்தில் நிலையான தன்மை

சந்தை மாற்றத்தின் போது முதலீட்டாளர்களின் மனநிலை எவ்வளவு விரைவாக மாறுகிறது என்பதையும், சந்தையின் ஏற்ற இறக்கங்கள் அன்றாட முதலீட்டாளர்களை எவ்வளவு ஆழமாகப் பாதிக்கும் என்பதையும் Bybit அவதானித்துள்ளது. எனவே, நிச்சயமற்ற காலங்களில் பயனர்கள் தங்கள் முதலீட்டுப் பெறுமதியை பாதுகாக்கவும், கணிக்கக்கூடிய வருமானத்தை பெறவும் உதவும் வகையில், ‘Stablecoin’ வருமான வாய்ப்புகள் மற்றும் மூலதன வினைத்திறன் மிக்க கருவிகளுக்கான அணுகலை நிறுவனம் தற்போது துரிதப்படுத்தி வருகிறது.

இது குறித்து ஹெலன் மேலும் தெரிவிக்கையில், “எமது பயனர்கள் நிலையான வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் அனைத்தையும் கண்டறிய நாம் விரும்புகிறோம். ‘Mantle Vault’ மூலமான ‘On-chain’ வருமானமாகவோ, ‘BYUSDT’ மூலமான மூலதன வினைத்திறனாகவோ இருந்தாலும், எமது நோக்கம் ஒன்றுதான். எமது சமூகம் குறைந்த மன அழுத்தத்துடனும் அதிக நம்பிக்கையுடனும் இந்தக் காலத்தை கடக்க உதவும் வகையில், ஒவ்வொரு டொலரையும் வினைத்திறனாக செயற்பட வைப்பதே எமது இலக்காகும்.” என்றார்.

தற்போதைய சந்தை நிலைமையானது முதலீட்டாளர்களின் நடத்தையில் ஏற்பட்டுள்ள ஆழமான கட்டமைப்பு மாற்றத்தை வெளிப்படுத்துவதாக Bybit கருதுகிறது.

“இந்த சந்தை மாற்றமானது முற்றிலும் மாறுபட்டது. பயனர்கள் தற்போது 100 மடங்கு இலாபத்தை தேடி அலையவில்லை மாறாக, அவர்கள் தங்களது மூலதனத்தை பாதுகாப்பதையும் நிலையான வருமானத்தை உருவாக்குவதையுமே நோக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த மாற்றம் உணர்வுபூர்வமானது அல்ல, அது ஒரு கட்டமைப்பு ரீதியான மாற்றமாகும்.”

சமூகத்துடன் இணைந்த பயணம்

சந்தையின் ஏற்ற இறக்கங்களின் போது பயனர்கள் கணிக்க்கூடிய வருமானத்தைப் பெறுவதற்கான மேலதிக வழிகளை வழங்கும் வகையில், ‘stablecoins’ மூலம் ஆதரவளிக்கப்படும் 10 மில்லியன் டொலர் வரையிலான நிலையான வருமான வாய்ப்புகளை Bybit அறிமுகப்படுத்தவுள்ளது.

“தனது சமூகத்திற்கு stablecoin வருமானத்தை வழங்குவதற்காக மார்ச் மாதம் முழுவதும் Bybit பல்வேறு திட்டங்களை முன்னெடுக்கின்றது. இந்தத் துறையில் நாம் நீண்டகாலம் நிலைத்து நிற்கவே வந்துள்ளோம்.” என ஹெலன் மேலும் தெரிவித்தார். “சந்தையின் ஏற்றத்தின் போதும் சரிவின் போதும் எமது சமூகத்தை ஆதரிப்பதில் நாம் எப்போதும் முன்னிற்கிறோம். நிச்சயமற்ற காலங்களில் எமது பயனர்கள் எதிர்கொள்ளும் நிதி அழுத்தத்தை தணிக்க உதவும் வகையில் stablecoin முயற்சிகளை நாம் ஆதரிக்கிறோம். ஒரு செழிப்பான தொழில் துறையானது அனைவருக்கும் பயனளிக்கும் என்பதால், நாம் சமூகப் பொறுப்புணர்வு (CSR) மற்றும் சூழல் மேம்பாட்டு திட்டங்களுக்கு நிதியளிக்கிறோம். இந்த அர்ப்பணிப்பானது, எமது நிறுவனத்தின் அடையாளத்தின் ஒரு அடிப்படையாகும்.” என்றார்.

நிச்சயமற்ற தருணங்களே ஒரு தொழில்துறை உண்மையானது எனும் தன்மையை எடுத்துக் காண்பிக்கும் என Bybit நம்புகிறது. நிறுவனத்தின் குழுக்கள் 24 மணிநேரமும் விழிப்புடன் செயற்பட்டு, பங்காளர்கள் மற்றும் பயனர்களுடன் வெளிப்படையான தொடர்புகளை பேணுவதுடன், சமூகத்திற்கு தகவல்களை உடனுக்குடன் வழங்கி அவர்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கின்றனர்.

#Bybit / #TheCryptoArk

Share

You may also like...