இலங்கையில் Master Trading Academy உடன்இணைந்துகிரிப்டோநிதிஅறிவுஇடைவெளியைநிவர்த்திசெய்யும் Bybit

வர்த்தக அளவின் அடிப்படையில் உலகின் இரண்டாவது மிகப் பெரும் கிரிப்டோகரன்சி (cryptocurrency) பரிமாற்ற நிறுவனமான Bybit, இலங்கையில் வேகமாக வளர்ந்து வரும் கிரிப்டோ கல்வி மற்றும் வர்த்தக சமூகமான Master Trading Academy (MTA) உடன் ஒரு புதிய கல்வித் திட்டத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறது. 2025 நவம்பர் 17ஆம் திகதி வரை இதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் வகையில் இந்தத் கல்வித் திட்டம் இடம்பெறவுள்ளது. தெரிவு செய்யப்பட்ட MTA பாடநெறிகளில், தகுதியுள்ள பங்கேற்பாளர்களுக்கு கிரிப்டோ தொடர்பான வர்த்தக அடிப்படைகள், நடைமுறை அறிவு மற்றும் கருவிகள் மற்றும் இடர் முகாமைத்துவம் ஆகியன தொடர்பில் கவனம் செலுத்துவதன் மூலம் இது பலனளிக்கிறது.

இலங்கையில் உள்ள கிரிப்டோ ஆர்வலர்களுக்கான புளொக்செயின் விழிப்புணர்வு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய அறிவைப் பரிமாறுவதற்கான பகிரப்பட்ட தூர நோக்குடன், MTA உடன் இணைந்து 120 மாணவர்களின் கற்றல் பயணத்திற்கு ஆதரவளிக்க Bybit உறுதி பூண்டுள்ளது. இதற்காக ஒரு பாடநெறிக்கு 120 USDT வரையான கட்டணம் மானியமாக வழங்கப்படுகிறது.

பிரத்தியேகமான Diploma in Cryptocurrency Trading & Market Analyst Mastery (கிரிப்டோகரன்சி வணிகம் மற்றும் சந்தை பகுப்பாய்வு தேர்ச்சி டிப்ளோமா) பாடநெறியானது, புளொக்செயின் தொழில்நுட்பம், நிதிச் சந்தை அடிப்படைகள், ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுத் திறன்கள், மற்றும் வர்த்தக தளங்களின் நடைமுறை அறிவு ஆகியவற்றின் முக்கிய கருத்துக்களை ஆழமாக உள்ளடக்கியுள்ளது. இந்தப் பாடநெறியானது, தொழில்நுட்பப் பகுப்பாய்வை வர்த்தக உளவியல் கொள்கைகளுடன் ஒருங்கிணைக்கிறது. இது புதியவர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த வர்த்தகர்கள் ஆகிய இரு தருப்பினருக்கும் ஒரு முழுமையான கட்டமைப்பை வழங்குகிறது.

பாடநெறிகளின் சிறப்பம்சங்கள்

  • தர உறுதிப்பாடு: MTA கற்றல் சமூகத்தால் முன்னெடுக்கப்படும் உள்ளூர்மயமாக்கப்பட்ட இந்தப் பாடத்திட்டமானது, புளொக்செயின், கிரிப்டோகரன்சிகள், வணிகம் மற்றும் சொத்து பாதுகாப்பு ஆகிய முக்கிய விடயங்களை அடிப்படை மட்டத்திலிருந்து மேம்பட்ட மட்டம் வரை வழங்கும்.
  • திறன் மேம்பாடு மற்றும் சான்றிதழ் அளிப்பு: இந்தப் பாடநெறிகள், உண்மையான வணிகச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப, நடைமுறை ரீதியான மற்றும் செயற்படுத்தல் ரீதியான பரந்த அறிவினை வழங்குகின்ற MTA இன் நடைமுறையை பின்பற்றுகின்றன. அத்துடன், பங்கேற்பாளர்கள் தங்கள் ஆராய்ச்சித் திறன்கள் மற்றும் அறிவுத் தளத்தை விரிவாக்கவும் ஊக்கம் அளிக்கின்றன. பூர்த்தி செய்யப்பட வேண்டிய தகைமைகள் மூலம் பாடநெறியில் இணைந்து, அதனை நிறைவு செய்வதன் மூலம் சான்றிதழ் வழங்கலுடன் பாடநெறி முழுமை பெறுகின்றது. Bybit இனால் ஆதரிக்கப்படும் இந்த பிரத்தியேக MTA பாடநெறியானது, அதிகரித்து வரும் சிக்கலான சந்தையில் வர்த்தகர்களை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • அணுகுவதற்கு இலகுவானது: பங்கேற்பாளர்கள் Zoom மூலம் ஒன்லைன் வகுப்புகளில் நேரடி தொடர்புடைய பங்குபற்றலுடனான பலன்களை பெறுவார்கள். அத்துடன், தேவைக்கேற்ற வகையில் 6 மாதங்கள் வரையான பார்வையிடும் காலத்திற்கு குறித்த வீடியோ பதிவுகளுக்கான அணுகலை பெறுவார்கள்.

பாடநெறிக் கட்டமைப்பு

இந்தப் பாடநெறிகள் மூன்று தொகுதியினர்களாக (batches) முன்னெடுக்கப்படும். அவை முறையே 2025 நவம்பர் 20, 2025 டிசம்பர் 23, 2026 ஜனவரி 21 ஆகிய தினங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளன.

  • கால எல்லை: 3 மாதங்களுக்கு வாரத்திற்கு 7 மணிநேர வகுப்புகள்
  • வகுப்பின் அளவு: ஒரு பிரிவில் 40 மாணவர்கள்

இது குறித்து, Bybit இன் பிராந்திய முகாமையாளர் Nazar Tymoshchuk (நசார் டிமோஷ்சுக்) கருத்து வெளியிடுகையில், “இலங்கையில் ஒரு வெற்றிகரமான கிரிப்டோ வர்த்தகப் பயிற்சி முகாம் மற்றும் போட்டித் தொடரை Bybit மற்றும் MTA இணைந்து அண்மையில் நிறைவு செய்திருந்தது. கிரிப்டோ கல்வியில் Bybit மற்றும் MTA கூட்டு முயற்சியானது எமது பங்காளித்துவத்தின் மற்றுமொரு அத்தியாயத்தின் ஆரம்பத்தைக் குறிக்கிறது. டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஒரு தொழிலை விரும்புபவர்கள் அல்லது அதைப் பற்றி மேலும் அறிய விரும்புபவர்களுக்கு வளங்கள் மற்றும் கல்வி ஆகியன எளிதில் அணுகக்கூடியதாக இருக்க வேண்டும் என்ற நம்பிக்கையை நாம் பகிர்ந்து கொண்டுள்ளோம். அத்துடன், இப்புதிய முயற்சி மூலம் இதை நிஜமாக மாற்ற நாம் பணியாற்றி வருகிறோம்.” என்றார்.

MTA இன் பணிப்பாளரும், அதன் முதலீட்டு ஆலோசகருமான கயான் அபேரத்ன தெரிவிக்கையில், “இலங்கையில் 1,500 இற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு 100 இற்கும் மேற்பட்ட கல்வி அமர்வுகளை வழங்கியதன் மூலம, 20,000 இற்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட பரந்த சமூகத்தை MTA உருவாக்கியுள்ளது. Bybit உடனான பங்காளித்துவமானது, தொடர்புடைய மாணவர்களுக்கு கிரிப்டோவின் புதிய போக்குகளுடன் இணையவும், நேரடிப் பயிற்சியை பெறவும், Bybit சூழல் கட்டமைப்பில் உள்ள உலகளாவிய கிரிப்டோ சமூகத்துடன் இணைவதற்கும் ஒரு தளத்தை வழங்குகிறது.” என்றார்.

நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டதாகும். இதற்கு தகுதி பெற, விண்ணப்பதாரர்களின் நியாயமான வாய்ப்பை உறுதிப்படுத்த ஒரு நேர்முக பரீட்சைக்கு உட்படுத்தப்படலாம். ஆர்வமுள்ளவர்கள் இங்கே பதிவு செய்து மேலதிக தகவல்களை பெறலாம்.

#Bybit / #CryptoArk 

Bybit பற்றி
Bybit ஆனது வர்த்தக அளவின் அடிப்படையில் உலகின் இரண்டாவது மிகப் பெரும் கிரிப்டோகரன்சி பரிமாற்ற நிறுவனமாகும். இது 70 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட உலகளாவிய சமூகத்திற்குச் சேவை செய்கிறது. 2018 இல் நிறுவப்பட்ட Bybit, அனைவருக்கும் எளிமையான, வெளிப்படையான மற்றும் சமமான சூழல் கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம், பரந்துபட்ட உலகில் வெளிப்படைத்தன்மையை மீள்வரையறை செய்கிறது. Web3 இல் ஒரு வலுவான கவனத்தை கொண்டவாறு, வலுவான உட்கட்டமைப்பை வழங்குவதற்கும் on-chain புத்தாக்கத்தை இயக்குவதற்கும் முன்னணி புளொக்செயின் நெறிமுறைகளுடன் மூலோபாய ரீதியாக Bybit பங்காளித்துவம் செய்கிறது. அதன் பாதுகாப்பான காப்பு நடைமுறை, மாறுபட்ட சந்தைகள், சிறந்த பயனர் அனுபவம், மேம்பட்ட புளொக்செயின் கருவிகள் ஆகியவற்றுக்குப் பெயர் பெற்று விளங்கும் Bybit ஆனது, TradFi மற்றும் DeFi இடையேயான இடைவெளியைக் குறைக்கிறது. இது நிர்மாணிப்பவர், படைப்பாளர்கள், ஆர்வலர்களுக்கு Web3 இன் முழுத் திறனையும் வழங்குவதற்கான அதிகாரத்தை வழங்குகிறது. பரவலாக்கப்பட்ட நிதியின் எதிர்காலத்தை Bybit.com இல் கண்டறியவும்.

MTA பற்றி

Master Trading Academy (MTA) ஆனது இலங்கையின் முன்னணி வர்த்தகக் கல்வித் தளமாகும். இது அந்நியச் செலாவணி மற்றும் கிரிப்டோகரன்சி சந்தைகள் குறித்த பரந்தளவிலான வளங்கள் மற்றும் பயிற்சியை வழங்குகிறது. 20,000 இற்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட ஒரு சுறுசுறுப்பான வர்த்தக சமூகத்தை கொண்டுள்ள MTA, உள்நாட்டு வர்த்தகர்களுக்கு நடைமுறை ரீதியான, செயல்படுத்தக்கூடிய திறன்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட பல்வேறு பட்டறைகள், நேரடி அமர்வுகள், வழிகாட்டல் திட்டங்களை முன்னெடுத்துள்ளது. ஆழ்ந்த மற்றும் அணுகக்கூடிய கற்றல் அனுபவங்கள் மூலம் நிதி அறிவை தனிநபர்களுக்கு வழங்கி அவர்களை ஊக்குவிப்பதே எமது நோக்கமாகும்.

Share

You may also like...