எதிர்கால தலைவர்களை வலுப்படுத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டணியை அமைக்கும் Hemas Consumer Brands (HCB) மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்

இலங்கையின் வீட்டுப் பராமரிப்பு மற்றும் தனிநபர் பராமரிப்புத் துறையில் முன்னோடியாக திகழும் Hemas Consumer Brands (HCB) நிறுவனம், அண்மையில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்துடன் (USJ) ஒரு முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கைச்சாத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் மாணவர்களை வேலைவாய்ப்புகளுக்காக மட்டுமன்றி, தேசிய முன்னேற்றத்திற்காகவும் நிலைபேறான வளர்ச்சியைம் உருவாக்கும் அர்த்தமுள்ள தொழில்துறையாளர்களாகவும் தயார் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தேசிய அபிவிருத்தி குறிக்கோள்களுடன் இணைந்தவாறு, வேலைவாய்ப்புத் திறன்களை ஆதரிப்பதன் மூலம், தங்கள் துறைகளில் நிரூபிக்கப்பட்ட சாதனைகளைக் கொண்ட இரு நம்பகமான நிறுவனங்களை இக்கூட்டாண்மை ஒன்றிணைத்துள்ளது. கல்வித் துறையும் கைத்தொழில் துறையும் இணையும் இந்த மூலோபாய கூட்டாண்மையானது, இலங்கையின் அடுத்த தலைமுறை தொழில்முறை நிபுணர்கள், புத்தாக்க கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் தலைவர்களுக்கு புதிய வாய்ப்புகளுக்கான பாதையை திறக்கிறது. புத்தாக்கம் மற்றும் சமூகப் பொறுப்புடன் எதிர்காலத்தை நோக்காகக் கொண்டு சிந்திக்கும் ஒரு நிறுவனமான Hemas Consumer Brands இன் உறுதியான அர்ப்பணிப்பை இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் எடுத்துக் காட்டுகிறது.
மிக முக்கியமாக, இந்த தனித்துவமான கூட்டணியானது பல்கலைக்கழக மாணவர்களுக்கு பரந்துபட்ட அறிவுப் பகிர்வு, திறன் மேம்பாடு மற்றும் நேரடியான கைத்தொழில் துறை அனுபவத்தின் மாறுபட்ட விடயங்களை அடைவதற்கு வழிவகுக்கும். மாணவர்கள் தொழிலுக்கான முன்பயிற்சிகள், நிறுவன திட்டங்கள், வழிகாட்டல் மற்றும் தொழில்துறையின் சிறந்த நடைமுறைகளில் ஈடுபடக்கூடிய உண்மையான பாதைகளுக்கான அணுகல் உள்ளிட்ட விடயங்களை இதன் மூலம் பெறுவார்கள். தேசிய ரீதியில் திறமையாளர்களை அடையாளம்கண்டு வெளிப்படுத்துவதை வலுப்படுத்தவும், அதன் மூலம் பொருளாதார முன்னேற்றத்தை முன்னெடுக்கவும், நிறுவனக் கூட்டாண்மைகள் எவ்வாறு முன்மாதிரியாக இருக்க முடியும் என்பதற்கான சிறந்த உதாரணமாக இந்த கூட்டாண்மையை குறிப்பிடலாம்.
இலங்கையின் மிக வெற்றிகரமான மற்றும் மதிப்பிற்குரிய நிறுவனங்களில் ஒன்றாகத் திகழும் Hemas Consumer Brands நிறுவனம் கோடிக்கணக்கான இலங்கையர்கள் நம்பிக்கையுடன் பயன்படுத்தும் வீட்டு பயன்பாட்டு வர்த்தகநாமங்களின் ஒப்பிட முடியாத தயாரிப்பு வரிசைகளை உருவாக்கியுள்ளது. பெருமைக்குரிய உள்நாட்டு நிறுவனமாகத் திகழும் HCB, உள்நாட்டுக்கு ஏற்ற விடயங்களை அடிப்படையாக் கொண்ட, புத்தாக்கம், சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனைத் துறைகளில் அதன் வலிமையை தொடர்ச்சியாக நிரூபித்து வருகின்றது. இலங்கையர்களின் வாழ்க்கை முறைகளுடன் ஒத்திசைவான, நுகர்வோரை ஆழமாக புரிந்து, துரிதமான தயாரிப்பு முன்னேற்றம் மற்றும் உறுதியான, படைப்பாற்றல்மிக்க பிரசாரத் திட்டங்களின் மூலம் அதன் வர்த்தகநாமங்கள் அந்தந்த பிரிவுகளில் முன்னோடியாக திகழ்கின்றன. எனவே, பல்கலைக்கழகத்தில் இருந்து நிறுவனத் தலைவர்களாக உருவாகவுள்ள அடுத்த தலைமுறையினருக்கு இந்த அறிவை பகிர்ந்து கொள்ளும் ஒரு சிறந்த நிறுவனமாக இருப்பதை இந்த கூட்டாண்மை உறுதிப்படுத்துகிறது. அத்துடன் HCB இன் இந்த முயற்சியானது, நிறுவனங்கள் வெறுமனே இலாப நோக்கமுடையதாக மாத்திரம் செயற்படாமல், எதிர்கால தலைவர்களிலும், நிலைபேறான வளர்ச்சியிலும் முதலீடு செய்பவர்களாக மாறும் துணிச்சலான எண்ணப்பாட்டிற்கான மாற்றத்தையும் பிரதிபலிக்கிறது.
Hemas Consumer Brands பற்றி
60 வருடங்களாக வீடு மற்றும் தனிநபர் பராமரிப்புத் தயாரிப்புகளின் இலங்கையின் முன்னணி உற்பத்தி நிறுவனமான Hemas Consumer Brands, குடும்பங்கள் சிறந்த நாளைய தினத்தை அனுபவிப்பதற்கு வலுவூட்டுவதில் கவனம் செலுத்துகிறது. வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட முன்மொழிவுகளில் புத்தாக்கத்தை ஏற்படுத்தவும், மேம்படுத்தவும் உள்ளூர் தகவல் தரவுகளைப் பயன்படுத்துவதில் பெருமை கொள்வதோடு, இது இலங்கையில் நம்பகமான வீட்டுப் பெயர் வர்த்தக நாமமாக தன்னை நிறுவுதல் எனும் அவர்களது நோக்கத்தை அடைய உதவுகின்றது. இலங்கையின் நுகர்வோர் பற்றிய ஆழமான புரிதல் மற்றும் அதன் தயாரிப்புகளில் உயர் தரம் மற்றும் பெறுமதியை வழங்குவதற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பினால் உந்தப்பட்டுள்ள Hemas Consumer Brands, நாடு முழுவதும் உள்ள சமூகங்களின் வாழ்க்கையை தொடர்ச்சியாக வளப்படுத்துகிறது.
Recent Comments