ABEC Premier: முன்னணி கல்வி ஆலோசனை நிறுவனம் அதன் இலக்குகளை உலகளாவிய வெற்றிக் கதைகளாக மாற்றிய 20 வருடத்தை கொண்டாடுகிறது

சர்வதேச கல்வி ஆலோசனையில் முன்னோடியாகத் திகழும் Australian Business Education Centre (ABEC Premier), தனது 20 வருட நிறைவை பெருமையுடன் கொண்டாடுகிறது. இந்நிறுவனம் பல ஆண்டுகளாக இலங்கை மாணவர்களின் அபிலாஷைகளை உலகளாவிய வெற்றிக் கதைகளாக மாற்றுவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வந்துள்ளது. கொழும்பில் இந்நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட காலகட்டத்தில், வெளிநாடுகளில் உயர்கல்வி வாய்ப்புகள் ஒரு சில சலுகை கொண்டவர்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்தன. இந்தக் குறைபாட்டை நீக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த ABEC, கணிசமான நிதி வசதி கொண்ட மாணவர்களுக்கும், வெளிநாட்டில் படிக்க ஆர்வமுள்ள இலட்சியமிக்க நடுத்தர வருமானம் கொண்ட மாணவர்களுக்கும் சர்வதேச கல்வியை அணுகக்கூடியதாக மாற்றும் நோக்கத்துடன் தனது பயணத்தை ஆரம்பித்தது.
ABEC ஆரம்பத்தில் சிங்கப்பூரில் தனது கவனத்தை செலுத்தி வந்தது. அங்கு சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட தகுதிகளையும், உலகளாவிய ரீதியிலான நடைமுறைப் பயிற்சியையும் வழங்கக்கூடிய விருந்தோம்பல் பாடநெறிகளில் (Hospitality Programmes) நிபுணத்துவம் கொண்டதாக இருந்தது. அதிகரித்து வந்த தேவை காரணமாக, இந்நிறுவனம் நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்களிடையே பிரபலமான இடமான ஜப்பானுக்குத் தனது கவனத்தை விரிவுபடுத்தியது. பின்னர், மலேசியாவில் உள்ள முன்னணிப் பல்கலைக்கழகங்களுடனும் கூட்டுறவை ஏற்படுத்தியது.
நிறுவனத்தின் நிபுணத்துவம் ஆழமடைந்ததைத் தொடர்ந்து, அது தனது நிகழ்ச்சிநிரலை மேலும் விரிவுபடுத்தியதோடு, இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவில் மதிப்பு மிக்க பல்கலைக்கழகங்களுடன் கூட்டணித்துவத்தை ஏற்படுத்தியது. வலுவான கூட்டாண்மைகளை உருவாக்குவதில் ABEC கொண்டுள்ள ஆழ்ந்த அர்ப்பணிப்பு, பல்வேறு துறைகளில் உலகத் தரம் வாய்ந்த கல்வியை உள்ளூர் மாணவர்களுக்கு அணுகக்கூடியதாக ஆக்கியுள்ளது. உள்நாட்டில், கொழும்பு, கண்டி, குருணாகல், காலி, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் தனது கால்தடத்தை ABEC நிறுவியுள்ளது. இதன் மூலம், நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் அதன் நிபுணத்துவ வழிகாட்டல் மற்றும் பிரத்தியேகமான ஆதரவு மூலம் பயனடைய முடியும் என்பது உறுதிப்படுத்தப்படுகிறது.
கடந்த 20 வருடங்களில், 10,000 இற்கும் மேற்பட்ட உள்ளூர் மாணவர்கள் வெளிநாடுகளில் உயர்கல்வியைத் தொடர ABEC உதவியுள்ளது. இவர்களில் பல பட்டதாரிகள் மேம்பட்ட அறிவு, உலகளாவிய வெளிப்படுத்தலுக்கான வாய்ப்பு மற்றும் மதிப்புமிக்க தொழில்முறை வலையமைப்புகளுடன் இலங்கைக்குத் திரும்பியுள்ளதோடு, உள்நாட்டு சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளனர். வெளிநாடுகளில் தங்கியவர்களும் உலகெங்கிலும் உள்ள முன்னணி நிறுவனங்களில் வெற்றிகரமான தொழில் வாழ்க்கையை பெற்றுள்ளனர். இதன் மூலம் அவர்கள் எமது தேசத்தை உலக அரங்கில் பெருமையுடன் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.
ஜப்பான், இங்கிலாந்து, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் மாணவர்கள் அதிக போட்டித் தன்மை கொண்ட உதவித்தொகைகளைப் (Competitive Scholarships) பெறுவதற்கு ABEC உதவியமையானது, அதன் பயணத்தில் ஒரு விசேட வெற்றியாகும். இந்த முக்கிய சாதனைகள் குடும்பங்களுக்கான நிதிச் சுமையைக் (Financial Burden) குறைத்ததோடு மட்டுமல்லாமல், தகுதியுள்ள மாணவர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த கல்வியைப் பெறுவதற்கான வாய்ப்புகளையும் வழங்கியுள்ளன.
நிறுவனத்தின் தூரநோக்கானது எப்போதுமே கல்வியைக் கடந்த பரந்துபட்டதாகவே இருந்து வந்துள்ளது. இலங்கையின் சுற்றுலாத் துறையை வலுப்படுத்தும் அரசாங்கத்தின் அழைப்பினால் உத்வேகம் பெற்ற ABEC, 2022 இன் பிற்பகுதியில் கண்டியில் தனது முதலாவது சொத்தான ‘Grand Serendib’ இனை அறிமுகப்படுத்தியதன் மூலம் விருந்தோம்பல் துறையிலும் (Hospitality Industry) விரிவடைந்தது. இது இலங்கையின் கலாசாரம், விருந்தோம்பல் மற்றும் சுற்றுலாவின் மகத்தான ஆற்றல் மீதான நிறுவனத்தின் நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது. வேலைகளை உருவாக்குதல், உள்ளூர் சமூகங்களுக்கு ஆதரவளித்தல் மற்றும் இலங்கையை உலகிற்குக் காட்சிப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டதாக ‘Grand Serendib’ இன் விருந்தோம்பல் தொடர்பான முயற்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு ஆகிய இரண்டின் மூலமும், உள்ளூர் பொருளாதார நடவடிக்கைகளுக்கு நிறுவனம் தொடர்ச்சியாக முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது. அத்துடன் விநியோகஸ்தர்கள், விவசாயிகள் மற்றும் உணவு உற்பத்தியாளர்களுக்கும் அது ஆதரவளித்து வருகிறது.
இந்த முக்கிய கொண்டாட்டமானது, 14 மில்லியன் டொலருக்கும் (ரூ. 4 பில்லியன்) அதிகமான பெறுமதி கொண்ட மற்றும் நேரடி வெளிநாட்டு முதலீடாக (Foreign Direct Investment) ஆரம்பிக்கப்பட்ட அதன் இரண்டாவது முதன்மைத் திட்டமான “Hotel Grand Serendib Colombo” என்ற ஆடம்பர ஹோட்டல் திட்டத்தின் உத்தியோகபூர்வ அறிமுகத்தையும் குறிக்கிறது.
கல்வி மற்றும் விருந்தோம்பல் ஆகிய இரு துறைகளிலும், நிலைபேறான தன்மைக்கு முன்னுரிமை அளிப்பதில் ABEC ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் உள்ளது. சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறைகளை ஊக்குவிப்பதன் மூலமும், பொறுப்பான சுற்றுலாவை ஊக்குவிப்பதன் மூலமும், இலங்கையின் இயற்கை மற்றும் கலாசாரப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்காக நிறுவனம் தொடர்ச்சியாக பணியாற்றி வருகிறது. இது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், எதிர்கால சந்ததியினருக்கான நீண்டகால வாய்ப்புகளையும் உறுதி செய்கிறது. இத்தருணத்தில் அதன் 20 ஆண்டுகாலப் பயணத்தை திரும்பிப் பார்க்கும்போது, வெளிநாடுகளில் கல்வி மற்றும் தொழில்சார் கனவுகளை அடைய முற்படும் உள்ளூர் மாணவர்களுக்கு ABEC Premier ஒரு நம்பகமான பங்காளர் எனும் பெருமையுடன் நிமிர்ந்து நிற்கிறது. எதிர்காலத்தை கருத்திற் கொண்டு, வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கும், இன்னும் வலுவான கூட்டாண்மைகளை உருவாக்குவதற்கும், இலங்கையின் மனித வலு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்குவதற்கும் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் ABEC உள்ளது
Recent Comments