இலங்கையின் முச்சக்கர வண்டி சாரதிகளுக்காக புதிய Orient டுக் லீசிங் திட்டத்தினை அறிமுகப்படுத்திய ஒரியன்ட் பைனான்ஸ்

தினசரி பல மில்லியன் இலங்கையர்களுக்கு சிக்கனமான போக்குவரத்து வசதியை வழங்கும், இலங்கையின் போக்குவரத்துக் கட்டமைப்பில் மிகவும் முக்கிய பங்கைக் கொண்டுள்ள முச்சக்கர வண்டிகளை கொள்வனவு செய்வதற்காக ஒரியன்ட் பைனான்ஸ் புதிய லீசிங் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. Orient Tuk லீசிங் திட்டத்தினூடாக முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு முதலாவது மாத வாடகைத் தவணைiய செலுத்துவதற்கு இரு மாத கால அவகாசம் வழங்கப்படுகிறது. அத்துடன், குறைந்த மாதாந்த தவணைகள் மற்றும் உயர்ந்த பெறுமதியை பெறுவதற்கான வாய்ப்பும் வழங்கப்படுகின்றது. சாரதிகளுக்கு நிதிவசதியை கால தாமதமின்றி பெற்றுக் கொடுப்பதை உறுதி செய்யும் வகையில், துரித அனுமதி வழங்கும் செயன்முறையும் பின்பற்றப்படுகிறது.
நாடு தொடர்ந்தும் பொருளாதார பின்னடைவிலிருந்து மீண்டு வரும் நிலையில், முச்சக்கர வண்டி சாரதிகள் எதிர்நோக்கும் சவால்களும் முழுமையாக மறைந்துவிடாத நிலையில், அவர்கள் நாளாந்தம் எதிர்கொள்ளும் நிதிச் சவால்களை கவனத்தில் கொண்டு, அவற்றுக்கு சிறந்த முறையில் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதாக இந்த Orient Tuk லீசிங் திட்டம் அமைந்துள்ளது. சாரதிகளுக்கு ஏற்படக்கூடிய பழுதுபார்ப்பு செலவுகள், வீடுகளில் எழக்கூடிய செலவுகள் மற்றும் பராமரிப்பு செலவுகள் போன்ற பல அம்சங்களைக் கவனத்தில் கொண்டு இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வழமையான போக்குவரத்து தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு மேலாக, அவசர நிலைகளிலும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் உதவிக்கு வருவது முச்சக்கர வண்டி சாரதிகளாகவே அமைந்துள்ளனர். வீதி விபத்துகளுக்கு உள்ளானால் அவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வது, வீதிகளில் வாகனம் பழுதடைந்தால், அவர்களுக்கு உதவ முன்வருவது அல்லது இரவு வேளைகளிலும் சவாரிக்கு வருவது போன்ற பல வழிகளில் முச்சக்கர வண்டி சாரதிகளின் சமூகத்துக்கான பங்களிப்பு அளப்பரியதாக அமைந்துள்ள போதிலும், அவர்களுக்கான வசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் பெருமளவில் கவனம் செலுத்தப்படுவதில்லை.
அவ்வாறான ஒரு சூழலில், ஒரியன்ட் பைனான்ஸ் பிஎல்சி அறிமுகம் செய்த தொலைக்காட்சி விளம்பரத்தில், முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் தினசரி எதிர்கொள்ளும் சவால்கள், கடின உழைப்பு, அவர்களின் பொறுப்பான செயற்பாடு போன்ற அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. இந்தத் விளம்பரத்தினூடாக, அவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான அர்த்தமுள்ள நிதித் தீர்வுகளை வழங்குவதில் ஒரியன்ட் பைனான்ஸ் கொண்டுள்ள அர்ப்பணிப்பு மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் தொடர்பாக ஒரியன்ட் பைனான்ஸ் பிஎல்சியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி கே.எம்.எம். ஜபீர் கருத்துத் தெரிவிக்கையில், “எமது உள்நாட்டு போக்குவரத்து வலையமைப்பின் முதுகெலும்பாக இந்த நபர்கள் அமைந்துள்ளனர். அவசர போக்குவரத்து தேவைகள் அல்லது நாளாந்த பயணங்கள் போன்ற அவசிய தேவைகளை நிறைவேற்ற பலர் தங்கியிருக்கும் முக்கியமான சேவையை கடினமான சூழல்களில் இவர்கள் வழங்குகின்றனர். அவர்களின் பங்களிப்பை ஒரியன்ட் பைனான்ஸ் ஐச் சேர்ந்த நாம் மிகவும் மதிக்கிறோம். நிதிச் சேவைகளுக்கு அப்பாற்பட்டதாக எமது நிலை அமைந்துள்ளது. அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த நாம் முன்வந்துள்ளோம். அவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் நாம் முன்னெடுக்கத் திட்டமுள்ள பல செயற்பாடுகளில் ஒன்றாக முதலாவது மாத வாடகை தவணை விலக்கு அமைந்துள்ளது.” என்றார்.
இந்தத் திட்டத்தில் ஆயுள் காப்புறுதித் திட்டமொன்றும் உள்ளடக்கப்பட்டுள்ளது. சாரதி எதிர்பாராதவிதமாக உயிரிழக்கும்பட்சத்தில், குடும்பத்தாருக்கு ரூ. 500,000 தொகை செலுத்தப்படும். இந்த பாதுகாப்பு வலையினூடாக ஏற்கனவே பத்துக்கும் அதிகமான குடும்பங்கள் பயன்பெற்றுள்ளன. ஷரியா முறையிலான நிதித் தீர்வுகளை எதிர்பார்ப்பவர்களுக்கு, ஒரியன்ட் பைனான்ஸ், இஜாரா Tuk லீசிங் திட்டம் வழங்கப்படுகிறது. சகல சமூகங்களுக்கும் உள்ளடக்கமான மற்றும் அணுகக்கூடிய சேவைகள் வழங்கப்படுவதை இது மீளுறுதி செய்கிறது.
பல சாரதிகள் தமது வாழ்நாள் சேமிப்பை, ஆரம்பக் கொடுப்பனவில் முதலீடு செய்வதை கவனத்தில் கொண்டு, அவர்களுக்கு குறுங்கால நிவாரணத்தையும், நீண்ட கால நிதிசார் உறுதித் தன்மையையும் பெற்றுக் கொடுப்பதை உறுதி செய்வதாக ஒரியன்ட் பைனான்ஸ் லீசிங் திட்டம் அமைந்துள்ளது. சாரதிகளின் வாழ்வாதாரம், அவர்களின் அன்புக்குரியவர்கள் மற்றும் அவர்களின் எதிர்காலம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, வலுவூட்டுவது நிறுவனத்தின் இலக்காக அமைந்துள்ளது. இந்தத் திட்டத்தினூடாக, இலங்கையின் முச்சக்கர வண்டி சாரதிகளுடன் ஒரியன்ட் பைனான்ஸ் பிஎல்சி ஒரு நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக மாத்திரமன்றி, சக தோழனாக தொடர்ந்தும் இணைந்துள்ளது.
Recent Comments