மக்களால் தெரிவு செய்யப்பட்டு, பல தலைமுறைகளின் நம்பிக்கையை வென்ற – பேபி ஷெரமி மக்கள் அபிமான விருதுகள் 2025 இல் கௌரவிப்பைப் பெற்றது!

இலங்கையில் அதிகளவு விரும்பப்படும் குழந்தைகள் பராமரிப்பு வர்த்தக நாமமான பேபி ஷெரமி, SLIM Kantar மக்கள் அபிமான விருதுகள் 2025 வழங்கும் நிகழ்வில், மக்கள் அபிமானம் பெற்ற ஆண்டின் சிறந்த குழந்தைகள் பராமரிப்பு வர்த்தக நாமம் எனும் பெருமைக்குரிய விருதை வென்றுள்ளது. அதனூடாக, தேசத்தின் நம்பிக்கையை வென்ற மற்றும் அதிகளவு விரும்பப்படும் குழந்தைகள் பராமரிப்பு வர்த்தக நாமம் எனும் தனது நிலையை உறுதி செய்துள்ளது. குழந்தைகளுக்கு அன்பு, அரவணைப்பு மற்றும் நம்பிக்கையூட்டுவதில் 60 வருடங்களுக்கு மேலாக இயங்குவதை கொண்டாடும், வர்த்தக நாமத்தின் பயணத்தில் மிகவும் முக்கியத்துவம் மைல்கல்லாக இந்த கௌரவிப்பு அமைந்துள்ளது. SLIM இனால் முதன் முறையாக இந்தப் பிரிவு அறிமுகம் செய்யப்பட்டிருந்த நிலையில், சிறந்த குழந்தைகள் பராமரிப்பு வர்த்தக நாமம் எனும் இந்த கௌரவிப்பை பேபி ஷெரமி பெற்றுள்ளமை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. இலங்கையர்களிடையே Kantar முன்னெடுத்த சுயாதீன ஆய்வின் பெறுபேறுகளின் அடிப்படையில் இந்தத் தெரிவை மேற்கொண்டிருந்தது. இந்த ஆண்டின் விருதுகளின் தொனிப்பொருளாக ‘Heart Share’ அமைந்திருந்ததுடன், இலங்கை பல தலைமுறைகளாக குடும்பங்களுடன் பேபி ஷெரமி கட்டியெழுப்பியுள்ள உணர்வுபூர்வமான இணைப்பை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது,

ஹேமாஸ் கன்சியுமர் பிரான்ட்ஸ் முகாமைத்துவ பணிப்பாளர் சப்ரினா யூசுபலி கருத்துத் தெரிவிக்கையில், “பெருமைக்குரிய SLIM Kantar மக்கள் அபிமான விருதுகள் 2025 இல் பேபி ஷெரமி வர்த்தக நாமத்துக்கு கௌரவிப்பைப் பெற்றுக் கொண்டுள்ளதையிட்டு நாம் மிகவும் பெருமையடைகிறோம். இலங்கையின் குடும்பங்களுடன் நாம் பேணும் பந்தத்தின் கொண்டாட்டமாகவும், இலங்கையில் பேபி ஷெரமி கொண்டுள்ள ஆழமான பிரசன்னத்தின் பிரதிபலிப்பாகவும் இந்த விருது அமைந்துள்ளது. ஒவ்வொரு பிள்ளைக்கும் மிருதுவான அரவணைப்பு மற்றும் பராமரிப்பை பெற்றுக் கொடுப்பதற்காக புத்தாக்கமான வழியில் பயணிக்க இந்த கௌரவிப்பு எம்மை மேலும் ஊக்குவிக்கும்” என்றார்.

ஹேமாஸ் கன்சியுமர் பிரான்ட்ஸ் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் ஷியான் ஜயவீர கருத்துத் தெரிவிக்கையில், “மக்களால் வாக்களிக்கப்பட்டு தெரிவு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ள இந்த கௌரவிப்பினூடாக, இலங்கையில் அதிகளவு விரும்பப்படும் குழந்தைகள் பராமரிப்பு வர்த்தக நாமமாக அமைந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் தொடர்ச்சியாக பேபி ஷெரமி தயாரிப்புகளை பயன்படுத்தி வரும் அனைத்து இலங்கையர்களுடனும் பேபி ஷெரமியின் இந்த உணர்வுபூர்வமான வெற்றி பகிரப்பட்டுள்ளது. இலங்கை மக்களுடன் முழு பேபி ஷெரமி குடும்பமும் தமது மனமார்ந்த நன்றியை பகிர்ந்து கொள்கின்றது.” என்றார்.

குழந்தைகள் பராமரிப்பு பிரிவில் சந்தை முன்னோடிஎனும் வகையில் பேபி ஷெரமி கொண்டுள்ள மங்கா புகழுக்கான மிகவும் முக்கியமான காரணங்களில், “குழந்தைகளுக்கு பாதுகாப்பான உலகை கட்டியெழுப்புவது” எனும் தனது உறுதி மொழிக்கமைவாக ஒப்பற்ற அர்ப்பணிப்புடன் செயலாற்றுகின்றமை அடங்கியுள்ளது. கடந்த காலங்களில் பேபி ஷெரமி உயர் தரம் வாய்ந்த குழந்தைகள் பராமரிப்பு தயாரிப்புகளை வழங்கியுள்ளதுடன், அவை பாதுகாப்பு நியமங்களை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளன. ஆய்வு மற்றும் அபிவிருத்தி நிலையத்தைச் சேர்ந்த பேபி ஷெரமி பாதுகாப்பு நிலையத்தின் வழிகாட்டல்களிலமைந்த 8 படிமுறை பாதுகாப்பு செயன்முறைகளுடன், பாதுகாப்புக்கான தனது அர்ப்பணிப்பை பேபி ஷெரமி உறுதி செய்துள்ளது. சகல தயாரிப்புகளும் சருமவியல் ரீதியில் பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன், குழந்தைகளுக்கு மிருதுவான, மென்மையான மற்றும் பாதுகாப்பை உறுதி செய்துள்ளது. குழந்தைநல மருத்துவர்களால் “குழந்தைக்கு பாதுகாப்பானது” என உறுதி செய்யப்பட்டுள்ள பேபி ஷெரமி, பாதுகாப்புக்கான தனது அர்ப்பணிப்புக்காக இலங்கை கட்டளைகள் நிறுவகத்திடமிருந்து பெருமைக்குரிய SLS சான்றிதழைப் பெற்றுள்ள முதலாவது குழந்தை பராமரிப்பு சவர்க்காரமாக திகழ்கின்றது. பாதுகாப்பை கவனத்தில் கொண்டு, paraben இல்லாத தயாரிப்புகளை பேபி ஷெரமி அறிமுகம் செய்துள்ளது. அதன் சூரியகாந்தி எண்ணெயை கொண்டுள்ள பேபி ஒயில் மற்றும் பேபி திரவ சவர்க்காரம் ஆகியன குழந்தைகளின் மென்மையான, ஈரப்பதனுடைய சருமத்துக்கான அரவணைப்பையும் பராமரிப்பையும் வழங்குகின்றன.

வர்த்தக நாமத்தின் தயாரிப்பு விருத்தி முதல் சமூக செயற்பாடுகள் வரையில் ஒவ்வொரு பிரிவிலும் இந்த நம்பிக்கை பின்பற்றப்படுகிறது. நாடளாவிய ரீதியில் “குழந்தைக்கு பாதுகாப்பான உலகு” போன்ற புதிய பெற்றோருக்கு விழிப்புணர்வூட்டும் திட்டங்களினூடாக, பெற்றோரின் பொறுப்பு, ஆரம்ப குழந்தைப்பராய விருத்தி மற்றும் குழந்தை பாதுகாப்பு தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்த உதவிகளை வழங்கியுள்ளன. மேலும், இலங்கை குழந்தைநல மருத்துவ சங்கத்துடன் பேபி ஷெரமி கைகோர்த்து, இல்லங்களில் குழந்தைகளின் விபத்துகளை தவிர்ப்பது பற்றிய வழிகாட்டல்களை வழங்கும் “வீட்டு விபத்துகள் தவிர்ப்பு வழிகாட்டல் கையேடு” என்பதை அறிமுகம் செய்ய முன்வந்துள்ளது.

மக்கள் அபிமான விருதுகள் 2025 இல் பேபி ஷெரமி கௌரவிப்பைப் பெற்றுள்ளமை, வர்த்தக நாமத்தின் பிரதான பெறுமதிகளான அரவணைப்பு, பராமரிப்பு மற்றும் இலங்கையின் ஒவ்வொரு குழந்தையின் நலனுக்கான ஒப்பற்ற அர்ப்பணிப்பு ஆகியவற்றை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.

ஹேமாஸ் கன்சியுமர் பற்றி

60 வருடங்களுக்கு மேலாக இலங்கையின் இல்ல மற்றும் பிரத்தியேக பராமரிப்பு பிரிவில் முன்னோடியாக ஹேமாஸ் கன்சியுமர் பிரான்ட்ஸ் திகழ்வதுடன், குடும்பங்களுக்கு சிறந்த எதிர்காலத்தை நோக்கி பயணிக்க வலுவூட்டுகிறது. இலங்கையில் நம்பிக்கையை வென்ற வர்த்தக நாமங்களை கட்டியெழுப்புவதில் உள்நாட்டு கருத்துகளை பயன்படுத்தி புத்தாக்கமான மற்றும் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய தயாரிப்புகளை வடிவமைப்பதில் வியாபாரங்கள் பெருமை கொள்கின்றன. இலங்கையின் நுகர்வோர் பற்றிய ஆழமான புரிந்துணர்வை கொண்டு மற்றும் தனது தயாரிப்புகளினூடாக உயர் தரம் மற்றும் பெறுமதியை வழங்குவதற்கான ஒப்பற்ற அர்ப்பணிப்பு போன்றவற்றினூடாக ஹேமாஸ் கன்சியுமர் பிரான்ட்ஸ் தொடர்ந்தும் நாட்டின் சமூகங்களின் வாழ்வுகளுக்கு வளமூட்டுகிறது.

Share

You may also like...