Tata Motors, அதன் கூட்டாளரான DIMO உடன் இணைந்து, இலங்கையில் அதன் புதிய பயணிகள் வாகன வகைகளின் அறிமுகம் தொடர்பில் அறிவிப்பு

இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தியாளரும், நிலைபேறான போக்குவரத்தின் முன்னோடியுமான Tata Motors மற்றும் 85 ஆண்டுகளுக்கும் மேலாக வாகனம் தொடர்பான விசேடத்துவத்தை கொண்ட இலங்கையில் Tata Motors இன் ஒரேயொரு அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தருமான DIMO நிறுவனத்துடன் இணைந்து, உள்ளூர் சந்தையில் புதிய பயணிகள் வாகனங்களை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த அறிமுக நிகழ்வில் Tata Motors நிறுவனத்தின் பெரிதும் பேசப்படும் வெற்றிகரமான SUV வரிசையான Tata Punch, Tata Nexon, and the Tata Curvv ஆகியன அறிமுகப்படுத்தப்பட்டன. அதன் மின்சார வாகன வகைகளான, Tiago.ev, Punch.ev, Nexon.ev, Curvv.ev ஆகியவற்றையும் இந்நிகழ்வில் Tata Motors அறிமுகப்படுத்தியுள்ளது. Tata Motors பயணிகள் மற்றும் மின்சார வாகனங்களின் தற்போதைய வரிசையானது, புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல், தனித்துவமான வடிவமைப்பு, சிறந்த வகை பாதுகாப்பு மற்றும் புரட்சிகரமான செயற்றிறன் ஆகியவற்றுடன் வளர்ந்து வரும் போக்குவரத்து தொடர்பான போக்குகளை வாடிக்கையாளர்களுக்கு கொண்டு வருகிறது.
Tata Passenger Electric Mobility Ltd நிறுவனத்தின் சர்வதேச வணிகத் தலைவர் Yash Khandelwal இது பற்றி கருத்து வெளியிடுகையில், “எமது சர்வதேச வணிக உத்தியில் ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தும் வகையில் நாம் இலங்கையில் எமது பயணத்தை தொடர்வதில் மகிழ்ச்சியடைகிறோம். பல வருடங்களாக Tata Motors முக்கிய மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளது. அந்த வகையில் எமது மீள்வருகையை எமது புதிய, புரட்சிகரமான தயாரிப்பு வகைகள் மூலம் எடுத்துக் காட்டுவதைத் தவிர சிறந்த வழி எதுவுமில்லை. எமது தயாரிப்புகள் இலங்கை சந்தையை கவரும் வகையில் மாத்திரமன்றி, உறுதியான வடிவமைப்பு, அதிநவீன அம்சங்கள், உயர்மட்ட பாதுகாப்பு மற்றும் ஒப்பிடமுடியாத விற்பனைக்குப் பின்னரான ஆதரவு ஆகியவற்றை இணைத்து புதிய தரநிலைகளை அமைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. எமது புகழ்பெற்ற SUV களுடன், Tiago.ev இனை அறிமுகப்படுத்துவதில் நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இது மின்சார போக்குவரத்திற்கான அணுகலையும் அதனை அபிலாஷைக்குரியதாகவும் மாற்றுவதன் மூலம் இந்தியா, நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகளில் ஏற்கனவே அலைகளை உருவாக்கியுள்ளது. எமது நீண்டகால கூட்டாளியான DIMO உடன் இணைந்து, இலங்கையின் போக்குவரத்துத் துறையை புதிய உயரத்திற்கு உயர்த்தவும், ஒப்பிட முடியாத வாகனம் செலுத்தும் அனுபவத்தை அனைவருக்கும் வழங்கவுமான எமது திறனில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.” என்றார்.
DIMO நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஜீவ் பண்டிதகே தெரிவிக்கையில், “புத்தம் புதிய Tata பயணிகள் வாகன வகைகள், வாகனத் துறையில் புதிய தரநிலைகளை அமைக்கிறது. புத்தாக்கம், பாதுகாப்பு, நிலைபேறான தன்மையை மிகவும் கட்டுப்படியான விலையில் அவை உள்ளடக்கியுள்ளது. வாகன இறக்குமதிக்கு இலங்கை சந்தை மீண்டும் திறக்கப்பட்ட பின்னர் அறிமுகப்படுத்தப்பட்ட வாகன வரிசையாக இந்த Tata பயணிகள் வாகன வரிசையைக் குறிப்பிட முடியும்.DIMO நிறுவனத்தின் ஒப்பிடமுடியாத விற்பனைக்குப் பிந்தைய நிபுணத்துவ ஆதரவுடன், சிறந்த சேவை மற்றும் ஒத்துழைப்புடன் ஒப்பிட முடியாத வாகன உரிமை தொடர்பான அனுபவத்தை நாம் உறுதி
செய்வதோடு, இலங்கை வாடிக்கையாளர்கள் மத்தியில் சிறந்து விளங்க வேண்டுமென்பது தொடர்பான எமது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம். நீண்ட காலமாக Tata Motors உடன் இணைந்துள்ளதன் மூலம், நாம் எப்போதும் எமது வாடிக்கையாளர்களுக்காக முன்னிற்போம் என்பதை உறுதி செய்துள்ளோம்.” என்றார்.
Tata Motors இன் அனைத்து பெற்றோல் கார்களும் 3 வருட உற்பத்தியாளர் உத்தரவாதத்துடன் வரும் அதே நேரத்தில், மின்சார கார்களுக்கு 8 வருட உயர் மின்னழுத்த மின்கல உத்தரவாதம் கிடைக்கின்றது. வாடிக்கையாளர்கள் பயண வேளையின் போதான 24/7 இலவச உதவி, Tata பயிற்சி பெற்ற நிபுணர்களிடமிருந்தான நிபுணர் தொழில்நுட்ப ஆதரவு மற்றும் அர்ப்பணிப்புள்ள விற்பனை மற்றும் சேவை ஆலோசகர்களின் சேவைகளையும் பெற்றுக் கொள்ளலாம். இது தடையற்ற மற்றும் நம்பகமான வாகன உரிமை தொடர்பான அனுபவத்தை உறுதி செய்கிறது.
வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்த Tata Motors இனால் பரிந்துரைக்கப்பட்ட மென்பொருள் புதுப்பிப்புகள், கருவிகள் மற்றும் உபகரணங்களை கொண்டிருப்பதில் DIMO முதலீடு செய்துள்ளதோடு, அனைத்து பழுதுபார்ப்புகளும் மிக உயர்ந்த தொழில் தரங்களை பேணுவதை உறுதி செய்கிறது. Tata Motors இன் பழுதுபார்ப்பது தொடர்பான கையேடுகள், நடைமுறைகள் மற்றும் சிறந்த சேவைக்கான கட்டமைப்புகளுக்கான பிரத்தியேக அணுகலையும் வாடிக்கையாளர்களால் பெற முடியும்.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வாகன வரிசை மூலம் Tata Motors மற்றும் DIMO ஆகியன, வாகனம் தொடர்பான விசேடத்துவத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதோடு, புத்தாக்கமான வாகனங்கள், தொழில்நுட்பம் மற்றும் வாடிக்கையாளர் மையப்படுத்தப்பட்ட தீர்வுகள் மூலம் இலங்கையின் வாகனத் துறையில் புரட்சியை ஏற்படுத்துகின்றன. Tata Motors இடமிருந்தான இந்த அற்புதமான பயணிகள் வாகன வரிசையானது, DIMO கிளை வலையமைப்பின் ஊடாக ரூ. 8.7 மில்லியன் என்ற ஆரம்ப விலையில் கிடைக்கும்.
இந்த தயாரிப்புகள் பற்றி மேலும் அறிய, நுழையுங்கள்: cars.tatamotors.lk
Annexure – Product Notes
Dive deep into Tata Motors’ All – new Passenger and Electric Vehicle portfolio:
Tiago.ev: Built on three key pillars—fun, smart, and easy—the Tiago.ev delivers a hassle-free, quick, and convenient EV driving experience. With multi-mode regen, City & Sport drive modes, a peppy motor, and a tight turning radius, it’s designed for effortless mobility. Features like automatic climate control, LED headlamps, rain-sensing wipers, a 10.25” touchscreen infotainment system, and cruise control add a touch of premiumness. Its 24kWh battery offers a near-real-world C75 range of 190-210 km and fast-charges from 10% to 80% in just 58 minutes.
Tata Punch: India’s largest selling passenger vehicle YTD, the Tata Punch has redefined the sub-compact SUV segment by offering the perfect blend of SUV attributes in a compact footprint. Built on the advanced ALFA-ARC platform, the Punch embodies a stunning, bold SUV design with a tall stance. Powered by a petrol engine mated to an AMT gearbox, the Punch offers a 26.03 cm digital infotainment screen, voice assisted sunroof, along with 90-degree door opening, and a 5-star GNCAP safety rating.
Tata Nexon: Tata Nexon’s distinctive design allowed it to break away from the conventional boxy SUV look, attracting a wide range of customers, especially young and tech-savvy buyers seeking a modern and premium SUV experience. Available with a 1.2l Turbocharged petrol engine, the Nexon offers two automatic gearbox options in the form of 6 speed AMT and 7 speed DCA transmission. Scoring high on technology, it is equipped with features like Panoramic Sunroof, 26.03 cm Harman Infotainment touchscreen, ventilated driver and co-driver seats, wireless charger and more.
Tata Curvv: Built on the cutting-edge ATLAS architecture, the Curvv is powered by the 1.2L Revotron petrol engine coupled with a DCA gearbox. With a sporty coupe silhouette and luxurious interiors, it features a 10.25” infotainment screen, a voice assisted panoramic sunroof, JBL branded speaker system, hill descent control, amongst others.
Recent Comments