அற்புதமான Crimson Eve கொண்டாட்டத்துடன் பண்டிகையை நிறைவு செய்த Pegasus Reef 2025 வருடத்தை ஆடம்பரமாக வரவேற்கிறது

எப்போதும் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு பிரபலமான இடமாக திகழும் Pegasus Reef ஹோட்டல், 2024 ஆம் ஆண்டை நிறைவு செய்து, 2024 டிசம்பர் 31ஆம் திகதி மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதன் Crimson Eve கொண்டாட்டத்துடன் புத்தாண்டை வரவேற்றது. இங்கு ஹோட்டலின் துடிப்பான வெப்பமண்டல கருப்பொருளின் கீழ் ஆடம்பரமான நிகழ்வுகள் இடம்பெற்றன. இது பண்டிகைக் கொண்டாட்ட நிகழ்வுகளில் பங்கேற்பாளர்களை கவர்ந்தது. ஒவ்வொரு நிகழ்வும் பண்டிகையை அரவணைப்புடன் கொண்டாடியதோடு, ஹோட்டலுக்கு உரித்தான புகழ்பெற்ற விருந்தோம்பல் மற்றும் உயர்ந்த சேவையை அனுபவிக்கும் வாய்ப்புடன் மறக்க முடியாத நினைவுகளை உருவாக்கி விருந்தினர்களை மகிழ்வித்தது.

Crimson Eve கொண்டாட்டமானது, சந்தேகத்திற்கு இடமின்றி பண்டிகையின் சிறப்பம்சமாக இருந்தது. இங்கு Freeze மற்றும் DJ Beats ஆகியோரின் அற்புதமான நேரடி கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. அவர்கள் மாலை முழுவதும் சூழலையையும் நடனத் தளத்தையும் உயிரோட்டமாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருந்தனர். விருந்தினர்கள் சுவையான buffet (புஃபே) இரவு உணவை அனுபவித்தனர். இதில் அனைத்து சுவைகளுக்கும் ஏற்றவாறு பல பாரம்பரிய உணவுகள் மற்றும் புத்தாக்கமான படைப்புகள் இடம்பெற்றிருந்தன. இவை யாவும் ஹோட்டலின் தனித்துவமான BYOB கொள்கையை பூர்த்தி செய்யும் வகையில் முன்னெடுக்கப்பட்டன. இது விருந்தினர்களுக்கு அவர்களின் சொந்த தெரிவில் மாலை நேரத்தை அனுபவிக்க ஒரு வாய்ப்பை வழங்கியது. குறிப்பாக பருவ கால கொண்டாட்டத்திற்காக அமைக்கக்கப்பட்ட வெப்பமண்டல கருப்பொருள் (tropical theme) ஆனது, கொண்டாட்டங்களுக்கு ஒரு கவர்ச்சியான மெருகூட்டலைச் சேர்த்தது.

இப்பருவகால கொண்டாட்டத்தை இத்தனை சிறப்பாக நிறைவு செய்ய முடிந்தமை தொடர்பில், Pegasus Reef ஹோட்டலின் பொது முகாமையாளர் ரேணுக் கொஸ்வத்த தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ஹோட்டலின் பருவகால கொண்டாட்ட வெற்றி பற்றி அவர் தனது கருத்தை வெளியிடுகையில், “Pegasus Reef ஹோட்டலில், எமது விருந்தினர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் தனித்துவமான, மகிழ்ச்சியான அனுபவங்களையும் தருணங்களையும் உருவாக்குவது எமது நெறிமுறைகளில் வேரூன்றியுள்ளது. இவ்வருடம் Crimson Eve கொண்டாட்டம் இதற்கு ஒரு சான்றாக அமைந்ததோடு, 2024 ஆம் ஆண்டை இத்தனை வேடிக்கையான, அற்புதமான இரவுடன் நிறைவு செய்ய முடிந்ததில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம். பபுதிய ஆண்டில் நாம் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், எமது விருந்தினர்கள் வாழ்க்கையின் மிக அருமையான தருணங்களை எம்முடன் இணைந்து கொண்டாடுவதை உறுதி செய்ய, அற்புதமான நிகழ்வுகளை நடத்துகின்ற எமது பாரம்பரியத்தைத் தொடர்ச்சியாக முன்னெடுக்க நாம் எதிர்பார்க்கிறோம்”. என்றார்.

Pegasus Reef ஹோட்டல் மறக்கமுடியாத நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதில் ஒப்பிட முடியாத நற்பெயரைக் கொண்டுள்ளதோடு, துடிப்பான, உயர்தர அனுபவங்களைத் தேடுபவர்களுக்கு விருப்பமான தெரிவாக இருந்து வருகிறது. விருந்தினர்களிடமிருந்து கிடைத்த பல்வேறு கருத்துகள் மற்றும் கடந்த கால நிகழ்வுகளின் வெளிப்பாடுகள் மூலம் இந்த நற்பெயர் மேலும் உறுதிப்படுத்தப்படுகிறது. இது விருந்தோம்பல் துறையில் ஹோட்டலின் நிலையை முன்னணியில் பேணுவதை உறுதிப்படுத்துகிறது.

எதிர்கால நிகழ்வுகள் தொடர்பான மேலதிக தகவலுக்கு, Pegasus Reef ஹோட்டலை 011 2049600 எனும் இலக்கத்தின் ஊடாக தொடர்பு கொள்வதோடு, facebook.com/Pegasusreefwattala மற்றும் instagram.com/pegasusreef_wattala ஆகிய சமூக ஊடகப் பக்கங்கள் ஊடாக அவர்களைப் பின்தொடரவும் அல்லது www.pegasusreefhotel.com எனும் அவர்களது இணையத்தளத்தைப் பார்வையிடவும்.

Image Caption
– Pegasus Reef ஹோட்டலின் Crimson Eve கொண்டாட்டம்

Share

You may also like...