SLIM Brand Excellence விருது விழாவில் இந்த வருடத்தின் சிறந்த புதிய நுழைவாளராக பிரகாசித்த தீவா திரிய

20 ஆண்டுகளுக்கும் மேலாக Hemas Consumer Brands நிறுவனத்தின் முதன்மையான சலவை பராமரிப்பு வர்த்தகநாமமாக திகழும் தீவா, 23ஆவது SLIM Brand Excellence விருது நிகழ்வில் அதன் துணை வர்த்தகநாமமான தீவா திரியவிற்காக (Diva Diriya) Best New Entrant of the Year (வருடத்தின் சிறந்த புதிய நுழைவாளருக்கான) வெண்கல விருதை வென்றதன் மூலம் அதன் விசேடத்துவத்தை மீண்டும் நிரூபித்துள்ளது. இலங்கை சந்தைப்படுத்தல் தொடர்பான முதன்மையான அமைப்பாக விளங்கும் Sri Lanka Institute of Marketing (SLIM) நிறுவனத்தினால் வழங்கப்படும் இந்த மதிப்புமிக்க விருதானது, இலங்கைச் சந்தையில் தீவா திரிய கொண்டுள்ள சிறந்த தாக்கத்தை எடுத்துக் காட்டுகிறது.

2022 இல் சவாலான பொருளாதார நிலைமைகளுக்கு மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்ட தீவா திரிய, தரம் மற்றும் கட்டுப்படியான விலை ஆகியவற்றிற்காக கொண்டுள்ள அதன் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்காக ஒப்பிட முடியாத நற்பெயரைப் பெற்றுள்ளது. தீவா எனும் வர்த்தக நாமத்தின் நோக்கத்தின் அடிப்படை அம்சத்தை பேணியவாறு, இவ்வர்த்தகநாமம் தூய்மைப்படுத்தலில் உயர் செயற்றிறனுடன் சந்தையில் கட்டுப்படியான விலையில் தொடர்ச்சியாக இடம்பிடித்து வருவதன் மூலம், இலங்கை நுகர்வோருக்கு நம்பிக்கைக்குரிய, நம்பகமான தெரிவாக தீவா திரிய மாறியுள்ளது.

இவ்விருது குறித்து Hemas Consumer Brands சந்தைப்படுத்தல் பணிப்பாளர் ஷியான் ஜயவீர கருத்துத் தெரிவிக்கையில், “தீவா பெற்றுள்ள இந்த மதிப்புமிக்க அங்கீகாரம் தொடர்பில் நாம் மிகவும் பெருமையடைகிறோம். ஒரு துணை வர்த்தகநாமமாக, குடும்பத்தின் சலவைத் தேவைகளுக்கான கொள்வனவு செய்யும் பணத்திற்கு அதிக பெறுமதியை வழங்கும் தீர்வாக, தீவாவின் பெருமைக்குரிய நற்பெயரை தீவா திரிய தொடர்ந்து கொண்டு செல்கிறது. ஒரு முன்னணி உள்ளூர் சலவை பராமரிப்பு வர்த்தகநாமம் எனும் வகையில், இலங்கையர்கள் சிறந்த வாழ்க்கையை வாழ்வதற்கு வலுவூட்டுவதில் அர்ப்பணிப்புடன் இருக்கும் அதே வேளையில் புத்தாக்க கண்டுபிடிப்புகளால் ஊக்குவிக்கப்பட்டு, அனைவரும் அணுகக்கூடிய தயாரிப்புகளை வழங்க தீவா உறுதி பூண்டுள்ளது. இந்த விருது எமது நுகர்வோர் எம் மீது வைத்திருக்கும் பெரும் நம்பிக்கைக்கு ஒரு சான்று என்பதோடு, அவர்களின் விசுவாசத்திற்கும் ஆதரவிற்கும் நாம் உண்மையிலேயே நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.” என்றார்.

தொடர்ச்சியாக வளர்ந்து வரும் சந்தை நிலைமைகள் மற்றும் நுகர்வோர் தேவைகளுக்கு ஏற்ப தனது திறனை வெளிப்படுத்துவதே தீவா திரியவின் வெற்றியாகும். தீவாவின் செழுமையான பாரம்பரியம் மற்றும் உயர்தரம், கட்டுப்படியான விலை, நிலைபேறான தயாரிப்புகளை வழங்குவதில் அது கொண்டுள்ள கவனம் ஆகியவற்றின் மூலம், இலங்கை குடும்பங்களின் பலமாகவும் ஆதரவாகவும் தனது பயணத்தைத் தொடர தீவா திரிய உறுதியாக உள்ளது.

Share

You may also like...