இலங்கையர்களுக்கு சூரிய சக்தியை முதலீடாக மாற்ற உதவும் Hayleys Solar ஒன்லைன் சேமிப்புக் கணிப்பான்
Hayleys Fentons இன் புதுப்பிக்கத்தக்க வலுசக்திப் பிரிவான Hayleys Solar, இலங்கையிலுள்ள குடும்பங்களின் மின்சக்தித்தேவைகளை கையாள்வதற்கான கருவிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
சூரிய மின்சக்தி தொகுதியை கட்டுப்படியான விலையில் அனைவருக்கும் வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட ‘நயக் நொவென நயக்’ (கடன் ஆகாத கடன்) எனும் பிரத்தியேகமான நிதி வழிகாட்டல் திட்டத்தை அண்மையில் அறிமுகப்படுத்திய Hayleys Solar நிறுவனம், சூரிய மின்சக்தி மூலம் சாத்தியமான சேமிப்பை மதிப்பீடு செய்ய எளிதானதாகவும் வெளிப்படையானதாகவும் இருக்கும் வகையில், தற்போது இத்திட்டத்தின் கீழ் சேமிப்புக் கணிப்பானை (Savings Calculator) அறிமுகப்படுத்தியுள்ளது. சூரிய சக்திக்கான மாற்றத்தை அனைவருக்கும் இலகுவாக்கவும், பயனுள்ளதாகவும் மாற்றுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
‘நயக் நொவென நயக்’ திட்டமானது, மக்கள் தமது தற்போதைய மாதாந்த மின்சார கட்டணத்திலும் குறைந்த மாதாந்த கடன் தவணையைத் தெரிவு செய்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது. நுகர்வோர் மற்றும் முதலீட்டாளர்கள், முதல் மாதத்திலிருந்தே தங்களுடைய சூரிய மின்சக்தி தொகுதி மூலம் பெறப்படும் பண சேமிப்பை அனுபவிக்க முடியும். இது 20 வருடங்களுக்கான இலவச மின்சாரத்தை பெறுவதற்கு உதவும். அதே வேளையில், தங்கள் குடும்பத்தின் எதிர்காலத்திற்கு உதவுகின்ற மாற்று வழிகளில் அப்பணத்தை மீள் முதலீடு செய்ய வழிவகுக்கின்றது.
இந்த புதிய கணிப்பான் ஆனது, சூரிய மின்சக்தி தொகுதியில் முதலீடு செய்வதன் மூலமான உண்மையான நிதிப் பலன்களைப் புரிந்துகொள்வதற்கான தனியான, வசதியான தகவல் ஆதாரமாக செயற்படும். அதே நேரத்தில், பயனர்கள் தங்கள் மின்சாரக் கட்டணத்தின் அடிப்படையில் சிறந்த பொதியை தெரிவு செய்ய வழி வகுக்கிறது.
- படி 1: உங்களது தற்போதைய மாதாந்த மின்சார கட்டணத்தை உள்ளீடு செய்யவும்.
- படி 2: உங்கள் மின்சார இணைப்பு வகையைத் தெரிவு செய்யவும்.
- படி 3: உங்களுக்கு விருப்பமான வங்கி மற்றும் கடன் கால எல்லையைத் தெரிவு செய்யவும்.
அதன் பின் நீங்கள் Submit (சமர்ப்பி) என்பதை அழுத்தியதும், தொகுதியின் கொள்ளளவு, எதிர்பார்க்கப்படும் மாதாந்த மின்சார உற்பத்தி, மொத்த முதலீடு, மாதாந்த கடன் தவணை மற்றும் மிக முக்கியமாக நீங்கள் எதிர்பார்க்கும் மாதாந்த சேமிப்பு உள்ளிட்ட விரிவான தொகுப்புடனான பரிந்துரையை இந்த கணிப்பான் வழங்கும்.
இந்த பரந்த தகவல் கொண்ட கருவியைப் பயன்படுத்தி, சூரிய மின்சக்திக்கு மாறுவதன் மூலம் நீண்ட கால நிதிப் பலன்களை நுகர்வோர் அனுபவிக்க முடியும்.
‘நயக் நொவன நயக்’ மூலம் முதலீடு செய்வதற்கான சாத்தியமான மாதாந்த சேமிப்பு மற்றும் மிகவும் பொருத்தமான பொதிகள் பற்றி அறிய, https://loancalculator.hayleyssolar.com/ எனும் இணையத்தளத்தைப் பார்வையிடவும் அல்லது 0112 102 102 எனும் இலக்கத்தைத் தொடர்பு கொள்ளவும்.
END
Image Caption: Hayleys Solar சேமிப்புக் கணிப்பான்
Recent Comments