இலங்கையில் புத்தம் புதிய Lenovo வணிக தயாரிப்புகளை வெளியிட்ட IT Gallery Pvt Ltd

ThinkPad X1 Carbon series மற்றும் P16 Gen 2 ஆகியன உள்ளடக்கம்

IT Gallery Computers (Pvt) Ltd. நிறுவனமானது, 2011 ஆம் ஆண்டு முதல் தகவல் தொழில்நுட்ப (IT) விநியோகச் சந்தையில் முக்கிய பங்கு வகிக்கின்ற ஒரு நிறுவனமாக இருந்து வருகின்றது. அந்த வகையில், உலகளாவிய தொழில்நுட்ப சக்தியாக விளங்கும் Lenovo வர்த்தகநாமத்தின் புதிய உற்பத்தித் திறன் கொண்ட மடிகணனிகளை நிறுவனம் தற்போது இலங்கையில் அறிமுகம் செய்து வைத்துள்ளது. இந்த வெளியீட்டில், வணிக வல்லுநர்களிடையே பிரபலமான தெரிவான ThinkPad X1 Carbon தொடர் மற்றும் சக்திவாய்ந்ததும் சிறிய ரகத்திலானதுமான ThinkPad P16 Gen 2 workstation ஆகியவனவும் அடங்குகின்றன. இந்த அறிமுகத்தின் மூலம், IT Gallery Group ஆனது, இலங்கைச் சந்தையில் தற்போது வரையான Lenovo வர்த்தகநாமத்தின் மிகவும் புத்தாக்கமான புதிய தயாரிப்புகளை வெளியிட்டுள்ளதால், இலங்கையை அதி வேக மட்டத்தை நோக்கி அழைத்துச் செல்ல தயார் நிலையில் உள்ளது. வெளிநாட்டு சந்தையில் அதிநவீன தொழில்நுட்பத்தை கொண்டு சேர்ப்பது தொடர்பில் Lenovo வர்த்தகநாமம் கொண்டுள்ள உறுதிப்பாட்டை இந்த கூட்டாண்மை எடுத்துக் காட்டுகிறது. சமீபத்திய புத்தாக்க கண்டுபிடிப்புகள் மற்றும் சிறந்த செயல்திறன்களுடன் ஒப்பிட முடியாத தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குவதற்கு இவ்வர்த்தகநாமம் அர்ப்பணிப்புடன் இருந்து வருகின்றது.

இந்த வெளியீட்டு நிகழ்வில் ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த ThinkPad X1 Carbon Gen 9 2-in-1 மற்றும் அதிநவீன செயற்பாட்டுத்திறன் மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பங்களையும் நேர்த்தியான, இலகுரக வடிவமைப்பைக் கொண்ட ThinkPad X1 Carbon G12 ஆகியன வெளியிடப்பட்டுள்ளன. இந்த அல்ட்ரா-லைட் இலகு ரக வணிக மடிகணனிகளில் நீடித்த ஆயுளைக் கொண்ட காபன் பைபர் சட்டகம் காணப்படுவதோடு, இது 14 அங்குல திரையுடன் Intel processors மூலம் இயக்கப்படுகிறது. நீண்ட மின்கல ஆயுள் மற்றும் வணிகத் தரத்திலான பாதுகாப்பை அது வழங்குகிறது. இங்கு மற்றுமொரு சிறப்பம்சமாக Lenovo ThinkPad P16 Gen 2 இன் அறிமுகம் அமைகின்றது. இது தொழில்முறை பணிகளை மேற்கொள்வதற்காக வடிவமைக்கப்பட்ட உயர் செயல்திறன் கொண்ட நடமாடும் பணிநிலையமாக விளங்குகின்றது. இது Intel 13th Gen processors, சக்திவாய்ந்த NVIDIA RTX Graphics மற்றும் 128GB வரையிலான சேமிப்பகம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது 3D rendering, CAD மற்றும் data analysis போன்ற பணிகளுக்கு ஏற்றதாக அமைகிறது. அனைத்து Lenovo மடி கணனிகளிலும் Microsoft Copilot (Preview) அமைப்பு முன்கூட்டியே நிறுவப்பட்டிருப்பதால், பயனர்கள் தங்குதடையற்ற பல்பணி அம்சம் மற்றும் மேம்பட்ட செயல்திறன் ஆகியவற்றை அனுபவிக்க முடியும்.

இங்கு கருத்துத் தெரிவித்த IT Gallery Computers Private Limited பணிப்பாளரும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான டிலந்த பெரேரா, “தகவல் தொழில்நுட்ப விநியோகத் துறையில் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நம்பகமான பெயராக நாம் இருந்து வருகிறோம். அந்த வகையில், இந்த நிகழ்வானது எமது பங்காளர்கள் மற்றும் இலங்கையின் தொழில்நுட்ப ஆர்வலர்கள் தொடர்பான எமது அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும். Lenovo உடன் இணைந்திருப்பதில் நாம் பெருமிதம் கொள்வதோடு, எல்லையற்ற சாத்தியக்கூறுகளை அடைவதற்கான புதிய சகாப்தத்தை அறிமுகப்படுத்துவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம்.” என்றார்.

Lenovo வணிக மற்றும் டெப் கணனிகளுக்கான வெளிநாட்டு சந்தைகளுக்கான, வர்த்தக நுகர்வோர் பிரிவின் பொது முகாமையாளர் நவீன் கெஜ்ரிவால் இங்கு தெரிவிக்கையில், “Lenovo மற்றும் IT Gallery ஆகியவற்றுக்கு இடையேயான ஒருங்கிணைப்பானது, புத்தாக்கமான தொழில்நுட்பத்தை இலங்கைக்கு கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இலங்கைச் சந்தையில் எமது சமீபத்திய தயாரிப்புகளை வெளியிடுவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம்.” என்றார்.

IT Gallery Computers (Pvt) Ltd. நிறுவனமானது, Lenovo தயாரிப்புகளின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தராக விளங்குகின்றது. இலங்கை நுகர்வோருக்கு உயர்மட்ட தொழிநுட்பத்தை வழங்குவதில் Lenovo கொண்டுள்ள உறுதிப்பாட்டை அதன் வணிகத் தயாரிப்புத் தொடர்கள் மற்றும் நுகர்வோர் தயாரிப்புத் தொடர்களில்  காணலாம். இது நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட பயனர்களின் வளர்ந்து வரும் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட பல்வேறு வகையான தயாரிப்புகளைக் கொண்டுள்ளது.

இலங்கையில் Lenovo தயாரிப்புகள் தொடர்பான IT Gallery இன் வணிகத்தை மேம்படுத்துவதில் அதன் பங்குதாரர்கள் கொண்டுள்ள ஒப்பிட முடியாத அர்ப்பணிப்பை அங்கீகரித்து கௌரவிக்கும் வகையில், தங்களது பரஸ்பர வெற்றிக்கு பாரிய பங்களிப்பை வழங்கிய முதலிடத்தில் உள்ள 10 பங்காளர்களுக்கு IT Gallery விருதுகளை வழங்குகின்றது. இந்த நிகழ்வானது மேலும் வலுவான, கூட்டாளர் வலையமைப்பை உருவாக்கும் நிறுவனத்தின் பயணத்தில் ஒரு முக்கிய தருணத்தைக் குறிக்கிறது.

Lenovo பற்றி

Lenovo நிறுவனமானது, 57 பில்லியன் டொலர் வருமானம் ஈட்டும் உலகளாவிய தொழில்நுட்ப அதிகார மையமாகும். இது Fortune Global 500 இனால் #248ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளதோடு, தினமும் 180 உலகளாவிய சந்தைகளில் மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்து வருகிறது. அனைவருக்கும் மிக ஸ்மார்ட்டான தொழில்நுட்பத்தை வழங்குவது தொடர்பான அதன் உறுதியான தொலைநோக்குப் பார்வையில் கவனம் செலுத்தியவாறு, pocket-to cloud தயாரிப்புகளான AI இனால் இயக்கப்படும், AI தயார் நிலை மற்றும் AI உகந்த சாதனங்கள் (PCs, workstations, smartphones, tablets), உட்கட்டமைப்பு (server, storage, edge, உயர் செயல்திறன் கணனி மற்றும் மென்பொருளால் வரையறுக்கப்பட்ட உட்கட்டமைப்பு), மென்பொருள், தீர்வுகள் மற்றும் சேவைகளை வழங்கும் உலகின் மிகப்பெரிய தனிநபர் கணனி நிறுவனமாக தனது வெற்றியைக் கட்டமைத்துள்ளது. உலகை மாற்றத்திற்குள்ளாக்கும் புத்தாக்க கண்டுபிடிப்புகளில் Lenovo நிறுவனத்தின் தொடர்ச்சியான முதலீடுகள், அனைவருக்கும், அனைத்து இடங்களிலும் மிகவும் சமமான, நம்பகமான மற்றும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குகிறது. Lenovo நிறுவனமானது, Lenovo Group Limited (HKSE: 992) (ADR: LNVGY) இன் கீழ் ஹொங்கொங் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. இவை தொடர்பான மேலதிக விபரங்களை அறிய https://www.lenovo.com எனும் இணையத்தளத்தை பார்வையிடுவதோடு, எமது  StoryHub ஊடாக புதிய செய்திகளையும் அறிந்து கொள்ளுங்கள்.

Share

You may also like...