மின்சார வாகனங்கள் மூலம் Radisson Hotels Sri Lankaவின் நிலைபேறான பயணத்தை துரிதப்படுத்தும் Evolution Auto
இலங்கையின் மிகப்பெரும் மின்சார வாகன (EV) சேவை வழங்குநரான Evolution Auto நிறுவனம், Radisson Hotels Sri Lanka நிறுவனத்திற்கு, பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட மின்சார வாகனங்களின் தொகுதியை கையளித்துள்ளது. இது பாரிய மட்டத்தில் அமைந்த விருந்தோம்பல் துறை செயற்பாட்டில் நிலைபேறான போக்குவரத்து வசதிகளை ஒருங்கிணைப்பதில் ஒரு முக்கிய மைல்கல்லாகும்.
இந்த ஒத்துழைப்பானது, Radisson Hotels இன் அன்றாட செயற்பாடுகளில் நிலைபேறான தன்மையை ஒரு அடையாளத்திற்காக மேற்கொள்ளம் முயற்சியாக அல்லாமல், செயற்பாட்டு ரீதியான மற்றும் வணிக மதிப்பினை வழங்கும் ஒரு உத்தியாக மாற்றுவதற்கான அர்ப்பணிப்பை வலுப்படுத்துகிறது. இதன் மூலம், வணிக ரீதியான மின்சார வாகன பயன்பாட்டை பாரிய அளவில் முன்னெடுப்பதில் Evolution Auto ஒரு நம்பகமான பங்காளியாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது.
இந்த வாகன தொகுதியில் அதிக இடவசதிக்கான கொள்ளளவு கொண்ட போக்குவரத்து மற்றும் பொருட்கள் கையாளுகை (logistics) தேவைகளுக்காக உருவாக்கப்பட்ட கிங் லோங் (King Long) மின்சார வேன்களும், நகர்ப்புற ஹோட்டல்களின் திறனான செயற்பாடுகளுக்காக வடிவமைக்கப்பட்ட KYC மின்சார வேன்களும் உள்ளடங்கியுள்ளன. கொழும்பு, கண்டி, காலி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள Radisson நிறுவனத்தின் இடங்கள் மட்டத்திலான போக்குவரத்து, ஊழியர் போக்குவரத்து, உள்நாட்டு பொருட்கள் கையாளுகை போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு செயற்பாட்டுப் பணிகளில் இந்த வாகனங்கள் தற்போது மும்முரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
குறிப்பிட்ட செயற்பாட்டுத் தேவைகளுக்கு ஏற்ப வாகனங்களின் திறன்களை சீரமைப்பதன் மூலம், விருந்தோம்பல் சூழலில் உற்பத்தித்திறன், நம்பகத்தன்மை, சேவை வழங்கலை மேம்படுத்தும் தீர்வுகளை Evolution Auto வழங்குகின்றது. இது ஹோட்டல்களுக்கு இடையே திறனான இணைப்பையும், செயற்பாட்டு ரீதியான ஒருங்கிணைப்பையும் உறுதி செய்கிறது.
செயற்பாட்டுத் திறன் மற்றும் ஐ.நா.வின் ESG (சூழல், சமூகம், ஆளுகை) இலக்குகள் ஆகிய இரண்டிற்கும் ஆதரவளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட தீர்வுகளை வழங்கும் இதன் திறன் காரணமாக, Radisson Hotels Sri Lanka தமது மின்சார வாகனப் பங்காளியாக Evolution Auto நிறுவனத்தை தெரிவு செய்துள்ளது. எவ்வாறு வாடிக்கையாளர் அனுபவத்தையும் சேவைத் தரத்தையும் நிலைபேறான தன்மை மூலம் நேரடியாக மேம்படுத்த முடியும் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாகும்.
இந்தக் கூட்டாண்மை குறித்து Evolution Auto நிறுவனத்தின் வணிக வாகன விற்பனை பிரிவுத் தலைவர் திவான் விஜேரத்ன கருத்துத் தெரிவிக்கையில், “முன்னணி விருந்தோம்பல் வர்த்தகநாமங்கள் நிலைபேறான தன்மையை அணுகும் முறையானது தெளிவாக மாற்றடைந்துள்ளது என்பதை Radisson Hotels Sri Lanka நிறுவனம் உடனான கூட்டாண்மை நிரூபிக்கிறது. இது தற்போது ஒரு தனிப்பட்ட திட்டம் அல்ல; மாறாக செயற்பாடுகள் எவ்வாறு கட்டமைக்கப்படுகின்றன, அவை எவ்வாறு வழங்கப்படுகின்றன என்பதில் இது ஒரு இன்றியமையாத பகுதியாக மாறி வருகிறது. உண்மையான வணிகத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட மின்சார வாகனத் தீர்வுகளை வழங்குவதே Evolution Auto நிறுவனத்தின் நோக்கமாகும். பொருட்கள் கையாளுகை (logistics), ஊழியர் போக்குவரத்து போன்ற முக்கிய செயற்பாடுகளில் KYC மற்றும் King Long மின்சார வேன்களை பயன்படுத்துவதன் மூலம், செயல்திறன் மற்றும் சேவையின் நம்பகத்தன்மையை வலுப்படுத்துவதிலான மாற்றத்தை நாம் ஏற்படுத்தியுள்ளோம்,” என்றார்.
இந்த முயற்சியானது, விருந்தோம்பல் மற்றும் சுற்றுலாத் துறையில் ஒரு பாரிய மாற்றத்தை எடுத்துக் காட்டுகிறது. இங்கு நிலைபேறான தன்மை என்பது ஒரு தனியான விடயமாக கருதப்படாமல், செயற்பாட்டு ரீதியாக நடைமுறைப்படுத்தும் விடயமாக முன்னெடுக்கப்படுகிறது. பல்வேறு சுற்றுலாத் தலங்களின் அன்றாட செயற்பாடுகளில் மின்சார வாகனங்களை இணைப்பதன் மூலம், சூழலுக்கு உகந்த போக்குவரத்து தெரிவுகள் எவ்வாறு சூழலையும் வணிக மதிப்பினையும் உருவாக்குகின்றன என்பதற்கு Radisson Hotels Sri Lanka ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறது.
இந்த நடவடிக்கையானது, மின்சார வாகனங்கள் தனிப்பட்ட பயன்பாட்டிற்கு மட்டுமே பொருத்தமானவை அல்லது மிகவும் விலையுயர்ந்தவை என நிலவி வருகின்ற கருத்துகளை சவாலுக்கு உட்படுத்தி, பல்வேறு தொழில்முறைத் தேவைகளுக்கு பொருத்தமான, வணிக ரீதியாக சாத்தியமான மின்சார வாகனத் தயாரிப்புகளை வழங்குகிறது.
பல்வேறு தொழில்துறைகளின் தேவைகளுக்கு ஏற்ற, வணிக ரீதியாக சாத்தியமான மற்றும் சிறந்த தீர்வுகளாக அமையும் மின்சார வாகனங்களை வழங்குவதன் மூலம், சூழலுக்கு உகந்த போக்குவரத்தை நோக்கிய இலங்கையின் மாற்றத்தில் Evolution Auto நிறுவனம் தொடர்ச்சியாக ஒரு முக்கிய பங்காளியாக திகழ்ந்து வருகிறது.
மேலதிக தகவல்களுக்கு: www.evolutionauto.lk அல்லது தொடர்புக்கு: 0777 553 355
END

Recent Comments