EV Batteries vs ICE Engines: வாகனங்களின் ஆயுட்காலம் குறித்த விவாதத்தை மீள்வரையறை செய்யும் Evolution Auto

இலங்கையின் மிகப்பெரிய மின்சார வாகனத் தெரிவுகளை வழங்கும் நிறுவனமான Evolution Auto நிறுவனம், மின்சார வாகன உரிமைத்துவத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றான மின்கல ஆரோக்கியம் மற்றும் ஆயுட்காலம் தொடர்பான உண்மைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு தேசிய விவாதத்தை ஆரம்பித்துள்ளது.

மின்சார வாகனங்கள் மீதான ஆர்வம் அதிகரித்து வருகின்ற போதிலும், பெற்றோல் மற்றும் டீசல் வாகனங்களில் இருந்து மாறுவதற்கு நுகர்வோர் இன்னும் தயக்கம் காட்டி வருகின்றனர். மின்கலம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது எப்போதும் கேட்கப்படும் பொதுவான கேள்வியாக உள்ளது. Evolution Auto நிறுவனத்தின் கருத்துப்படி, இந்த உரையாடல் அனுமானங்களிலிருந்து விடுபட்டு சான்றுகள் அடிப்படையிலான ஒப்பீட்டிற்கு மாற வேண்டும்.

Internal Combustion Engine (ICE) உள்ளக எரிபொருள் தகன வாகனங்களுடன் ஒப்பிடும்போது, நவீன மின்சார வாகனங்கள் (EVs) அவற்றின் எஞ்சினின் எளிமையான அமைப்பு, நீடித்த உழைப்பு மற்றும் முன்கூட்டியே கணிக்கக்கூடிய தன்மையை சீராக நிரூபித்து வருகின்றன. இன்று மின்சார வாகன மின்கலங்களை, நிச்சயமற்ற தன்மையுடன் ஒப்பிடுவதை விட, ICE எஞ்சின்களுடன் தொடர்புடைய ஒட்டுமொத்த எஞ்சின் தேய்மானத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்பது மிகவும் பொருத்தமானதாகும்.

பல்வேறு வர்த்தக நாமங்கள் மற்றும் புவியியல் ரீதியாக 22,700 இற்கும் மேற்பட்ட மின்சார வாகனங்களின் தரவுகளின் அடிப்படையில் ‘Geotab’ நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட உலகளாவிய ஆராய்ச்சியானது, இது தொடர்பான தெளிவான விளக்கத்தை வழங்குகிறது. இந்த ஆய்வின்படி, மின்சார வாகன மின்கலங்களின் சராசரி வருடாந்த தேய்மான வீதம் வெறுமனே 2-3% மட்டுமே ஆகும். இந்த வீதத்தின் படி, எட்டு வருட பயன்பாட்டிற்குப் பின்னர் பெரும்பாலான மின்கலங்கள் அவற்றின் அசல் கொள்ளளவில் 80% இற்கும் அதிகமான நிலையை பேணுகின்றன.

முக்கியமாக, மின்கலங்களின் தரம் குறைதல் என்பது திடீரென ஏற்படுவதை விட படிப்படியாகவே நிகழ்கிறது என ஆராய்ச்சி காட்டுகிறது. அவதானிக்கப்பட்ட தேய்மானப் போக்குகளின் அடிப்படையில், பல நவீன மின்சார வாகன மின்கலங்கள் 15 முதல் 20 ஆண்டுகள் வரை 70% இற்கும் அதிகமான கொள்ளளவைத் தக்கவைத்திருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த அளவுகோலானது பெரும்பாலும் வாகனத்தின் பயன்பாட்டிற்கு தேவையான செயற்பாட்டுத் திறனாகக் கருதப்படுகிறது. நடைமுறையில் கூறப்போனால், ஒரு வாகனம் அதன் உரிமையாளரிடம் இருக்கும் காலத்தை விட மின்கலத்தின் ஆயுட்காலம் அதிகமாக இருக்கலாம் என்பதை இது உணர்த்துகிறது.

மிதமான காலநிலை மற்றும் பயனுள்ள வெப்ப முகாமைத்துவ தொகுதிகள் மின்கல ஆரோக்கியத்தைப் பெரிதும் பாதுகாக்கின்ற போதிலும், அதிக வெப்பத்திற்கு நீண்டகாலம் முகம் கொடுப்பதானது, அதன் தேய்மானத்தை துரிதப்படுத்தலாம் என ஆய்வு மேலும் சுட்டிக்காட்டுகிறது. மின்கல இரசாயனக் கட்டமைப்பு மற்றும் முகாமைத்துவ மென்பொருளில் தற்போதுள்ள முன்னேற்றங்கள் காரணமாக, முந்தைய மாதிரிகளை விட அண்மைக்கால மின்சார வாகனங்கள் சிறந்த நீண்டகாலம் நீடித்த தன்மையைக் கொண்டுள்ளன.

இந்தக் கண்டுபிடிப்புகள், நவீன மின்சார வாகன மின்கல அமைப்புகள் நிலையான செயல்திறன், கணிக்கக்கூடிய தேய்மானம் மற்றும் நீண்ட கால பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன என்ற கருத்தை ஆதரிக்கின்றன. இது ஆயுட்காலம் குறித்த விவாதத்தை கவலைப்படும் நிலையிலிருந்து அளவிடக்கூடிய பொறியியல் சான்றுகளுக்கு மாற்றுகிறது.

இதற்கு நேர்மாறாக, ICE எஞ்சின் வாகனங்களானவை எஞ்சின்கள், கியர்பொக்ஸ்கள், புகை வெளியேற்ற (exhaust) அமைப்புகள் , எரிபொருள் உட்செலுத்தும் தொகுதிகள் (fuel injection systems), கிளட்ச்கள் மற்றும் குளிரூட்டும் வழிமுறைகள் உள்ளிட்ட ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட பல கட்டமைப்புகளில் தவிர்க்க முடியாத தேய்மானத்தை கொண்டுள்ளன. இந்த தொகுதிகள் பழமையடையும் போது, பராமரிப்புச் சிக்கல்களும் செலவுகளும் பொதுவாக அதிகரிக்கின்றன. பெரும்பாலும் படிப்படியாகவும் அளவிடக்கூடியதாகவும் இருக்கும் மின்கலத் தேய்மானத்தைப் போலன்றி, ICE வாகனங்களில் உள்ள சிக்கலான இயந்திர அமைப்புகளின் தேய்மானம் ஒரே நேரத்தில் பல பாகங்களில் ஏற்படக்கூடும்.

மின்சார வாகனங்களில், ICE எஞ்சின் வாகனங்களின் நீண்டகால இயந்திரத் தேய்மானத்திற்கு காரணமானது போன்ற பல பாகங்கள் கிடையாது. மின்சார வாகனங்கள் கணிசமான அளவு குறைவான அசையும் பாகங்களைக் கொண்டிருப்பதாலும், அங்கு தகன செயன்முறை (combustion process) இல்லாததாலும், அவை ஒட்டுமொத்த இயந்திர பிரச்சினைகளை விட படிப்படியான மற்றும் கணிக்கக்கூடிய மின்கலத் தேய்மானத்தை மையமாகக் கொண்ட முற்றிலும் மாறுபட்ட ஒரு விளக்கத்தை வழங்குகின்றன.

இந்தக் கட்டமைப்பு ரீதியான எளிமையானது, வாகனத்தின் ஆயுட்கால மதிப்பீட்டை மாற்றியமைக்கிறது. மின்சார வாகன உரிமைத்துவத்தின் முக்கிய அம்சமாக, அதிக தேய்மானம் கொண்ட பல இயந்திர கட்டமைப்புகளைப் பராமரிப்பதற்குப் பதிலாக, காலப்போக்கில் மெதுவாகவும் சீராகவும் தேய்மானம் அடையும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு மின்கல தொகுதியை மையமாகக் கொண்டு அமைந்துள்ளது.

இது குறித்து Evolution Auto நிறுவனத்தின் விற்பனைக்குப் பின்னரான சேவைகளுக்கான தலைவர் நுரான் சில்வா தெரிவிக்கையில்: “இரண்டு தொழில்நுட்பங்களுக்குமான நீண்டகால உரிமையை நாம் மதிப்பிடும்போது ஒப்பீடு தெளிவாகத் தெரிகிறது. ICE வாகனங்கள் ஒரே நேரத்தில் பல இயந்திர கட்டமைப்புகளில் தொடர்ச்சியான தேய்மானத்தை எதிர்கொள்ளும் அதேவேளையில், மின்சார வாகன மின்கலங்கள் படிப்படியாகவும் கணிக்கக்கூடிய வகையிலும் தேய்மானம் அடைகின்றன. எமது இரண்டு தளங்கள் ஊடாகவும் வாடிக்கையாளர்களுக்கு நாம் வழங்கும் விற்பனைக்குப் பின்னரான நேரடி அனுபவத்தின் அடிப்படையில், நவீன மின்சார வாகனங்கள் மிகவும் நிலையான நீண்டகால செயல்திறனைக் கொண்டுள்ளன. மின்கலத்தின் ஆயுட்காலம் என்பது ஆரம்ப நாட்களில் கருதப்பட்டது போல இனி ஒரு தடையாக இருக்கப் போவதில்லை.” என்றார்.

Evolution Auto நிறுவனத்தின் விற்பனைக்குப் பின்னரான சேவைப் பிரிவானது பாரம்பரிய மற்றும் மின்சாரம் ஆகிய இரண்டு தளங்களிலும் வாகனங்களைக் கையாள்வதால், வெறுமனே கோட்பாட்டு மாதிரிகளை விட வாடிக்கையாளர் அனுபவத்தின் அடிப்படையில் நடைமுறை ரீதியான வாழ்க்கைச் சுழற்சி நுண்ணறிவுகளை வழங்குகிறது.

Evolution Auto நிறுவனம் பல்வேறு மின்சார வாகன வர்த்தகநாமங்கள் மற்றும் தளங்களில் இயங்கி வருவதால், இலங்கையில் வாகனம் செலுத்தும் பல்வேறு நிலைகளின் கீழ் வாகனங்களின் நிஜ உலகச் செயல்திறனை நேரடியாகக் கண்காணிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளது. இந்த முன்னோக்கானது, மின்சார வாகனப் பயன்பாடு என்பது ஆரம்பகால நிச்சயமற்ற தன்மையிலிருந்து அளவிடக்கூடிய, தரவு அடிப்படையிலான நீடித்த தன்மைக்கு மாறியுள்ளது எனும் ஒரு பொதுவான யதார்த்தத்தை ஆதரிக்கிறது.

நீண்ட காலத்திற்கு மின்கலங்கள் வலுவாகத் திறனைத் தக்கவைத்துள்ளன என்பதை சர்வதேச ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்துகின்றன. அத்துடன் உள்ளூர் செயற்பாட்டு அனுபவங்கள் நிலையான வாகன உரிமைக்கான முறைகளைக் காட்டுகின்றன. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, ஒரு வாகனத்தின் முழுமையான ஆயுட்காலத்தைத் தெளிவுபடுத்த இந்த காரணிகள் உதவுகின்றன.

இலங்கையின் போக்குவரத்து துறை மாறி வருகிறது. நுகர்வோர் மற்றும் வணிக நிறுவனங்கள் நீண்டகால வாகன முதலீடுகளை மதிப்பிடும்போது, நீடித்த உழைப்பு என்பது இயந்திர ரீதியான சிக்கல்களைக் கொண்டு அளவிடப்படாமல் பொறியியல் திறன் மற்றும் நீண்டகால செயல்திறனின் நிலையான தன்மையைக் கொண்டே அளவிடப்பட வேண்டும்.

இயந்திர எளிமையின் மூலம் நீண்ட ஆயுளை அடைய முடியும் என்பதை நவீன மின்சார வாகனங்கள் நிரூபித்து வருகின்றன. சீரான தேய்மானத்திற்காக வடிவமைக்கப்பட்ட மின்கல தொகுதிகள் மற்றும் குறைவான தேய்மானம் கொண்ட இயந்திரப் பாகங்கள் காரணமாக, மின்சார வாகனங்கள் ICE வாகனங்களின் ஆயுட்காலத்திற்கு இணையாகவும், பல சந்தர்ப்பங்களில் அதனை விட அதிகமாகவும் செயற்படக்கூடியவை எனவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

மின்சார வாகனப் பயன்பாடு என்பது இனி ஒரு பரீட்சார்த்தமான மாற்றீடு அல்ல; மாறாக அது நீண்ட கால உரிமையை தொடங்குவதற்குத் தயாராக உள்ள ஒரு நிறுவப்பட்ட மற்றும் நீடித்த தீர்வாகும்.

இது பற்றிய மேலதிக தகவல்களுக்கு, www.evolutionauto.lk இணையத்தளத்தைப் பார்வையிடவும் அல்லது 0777 553 355 எனும் இலக்கத்தைத் தொடர்பு கொள்ளவும்.

இந்தக் கட்டுரை ‘Geotab’ நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட உலகளாவிய மின்சார வாகன மின்கல செயல்திறன் ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டதாகும். முழுமையான ஆய்வு மற்றும் விரிவான கண்டுபிடிப்புகளை வாசகர்கள் இங்கே பார்வையிடலாம்: https://www.geotab.com/blog/ev-battery-health/

END

Share

You may also like...