இலங்கையின் முதலாவது ஹைப்ரிட் மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்திய Yamaha; செயல்திறன், சிக்கனத்தில் புதிய மைல்கல்

Yamaha மோட்டார் சைக்கிள்களின் இலங்கையிலுள்ள உத்தியோகபூர்வ விநியோகஸ்தரான அசோசியேட்டட் மோட்டார்வேஸ் (Associated Motorways (Private) Limited – AMW) நிறுவனம், அண்மையில் கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் இடம்பெற்ற விசேட நிகழ்வில் ‘Yamaha FZ-S Fi Hybrid’ மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அறிமுகமானது நாட்டின் மோட்டார் சைக்கிள் வாகனத் துறையில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைவதுடன், நவீன மோட்டார்சைக்கிள் பயன்பாட்டளர்களுக்கு அதிநவீன தீர்வுகளை வழங்குவதில் Yamaha நிறுவனம் கொண்டுள்ள தொழில்நுட்பத் தலைமைத்துவத்தை மீள உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த அறிமுகமானது வெறுமனே ஒரு புதிய மாதிரியின் வருகை மட்டுமல்லாது, இலங்கை மோட்டார் சைக்கிள் சந்தையில் ஒரு புதிய பிரிவையே உருவாக்கியுள்ளது. Yamaha Motor நிறுவனத்தின் உலகளாவிய ஆராய்ச்சி மற்றும் பொறியியல் அனுபவத்தின் மூலம் உருவாக்கப்பட்ட ‘Hybrid Assist’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, நாளாந்த பயணங்களை அதிக வினைத்திறன் மற்றும் வேகம் கொண்டதாக இந்த மோட்டார் சைக்கிள் மாற்றுகிறது. குறிப்பாக நகர்ப்புற நெரிசல்களில் சீரான வேகத்தையும் சிறந்த ஆற்றலையும் வழங்குவதோடு மட்டுமல்லாமல், தற்போதைய எரிபொருள் விலை உயர்வைக் கருத்திற்கொண்டு அதிக எரிபொருள் சிக்கனத்தையும் உறுதி செய்கிறது.

இலங்கையில் ஏற்கனவே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள ‘FZ’ வர்த்தகநாமத்தின் பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய ஹைப்ரிட் மாதிரி உருவாக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களைக் கவர்ந்த அதன் கம்பீரமான தோற்றம், செலுத்துபவரின் வசதி மற்றும் நீடித்த உழைப்பு ஆகியவற்றை தொடர்ந்தும் பேணியவாறு, ‘Intelligent Energy Assistance’ வசதியை இணைத்துள்ளது. இதன் மூலம், இது வெறுமனே ஒரு பயணத்திற்கான வாகனம் என்ற நிலையிலிருந்து மாறி, சூழல் விழிப்புணர்வு கொண்ட, தொழில்நுட்பத்தை விரும்புகின்ற வாடிக்கையாளர்களுக்கான ஒரு மேம்பட்ட தீர்வாக உருவெடுத்துள்ளது.

இந்த அறிமுக விழா, நாடு முழுவதிலுமிருந்து வருகை தந்த விநியோகஸ்தர்கள், நிறுவனப் பங்குதாரர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினர்களின் பங்குபற்றுதலுடன் கோலாகலமாக நடைபெற்றது. ஒரு உயர்தரமான இடமொன்றில் இந்த நிகழ்வை நடத்தியதன் மூலம், இலங்கைச் சந்தைக்கு உலகத் தரம் வாய்ந்த அனுபவங்களை வழங்குவதில் Yamaha கொண்டுள்ள அர்ப்பணிப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த அறிமுக விழாவில் உரையாற்றிய AMW Yamaha நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ஜவஹர் கணேஷ், “இலங்கையில் Yamaha வர்த்தகநாமத்திற்கு இன்று ஒரு பெருமைமிக்க நாளாகும். Yamaha FZ-S Fi Hybrid ஊடாக நாம் வெறுமனே ஒரு மோட்டார் சைக்கிளை மாத்திரம் வெளியிடவில்லை; மாறாக மிகவும் புத்திசாலித்தனமான மற்றும் வினைத்திறன் கொண்ட ஒரு பயண அனுபவத்தை அறிமுகப்படுத்துகிறோம். நாட்டின் முதலாவது ஹைப்ரிட் மோட்டார் சைக்கிளான இது, புத்தாக்கம் மற்றும் நிலைபேறான போக்குவரத்து தொடர்பில் Yamaha கொண்டுள்ள நீண்டகால இலக்கை பிரதிபலிக்கிறது. எமது வாடிக்கையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் வகையில் உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பங்களை இலங்கைக்கு தொடர்ச்சியாக கொண்டு வருவதில் நாம் ஆர்வமாக உள்ளோம்.” என்றார்.

Yamaha வர்த்தகநாமத்தின் உலகளாவிய பொறியியல் விசேடத்துவம் மற்றும் AMW நிறுவனத்தின் நாடளாவிய ரீதியிலான விநியோக மற்றும் சேவை வலையமைப்பு ஆகியன இந்த புதிய தொழில்நுட்பத்தின் மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளன. இலங்கையின் மோட்டார் சைக்கிள் சந்தை பரிணமித்து வரும் நிலையில், வழக்கமான வாகனங்களிலிருந்து மாறி, எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய புத்திசாலித்தனமான மற்றும் அதிக செயல்திறன் கொண்ட வாகனங்களை நோக்கி நகர்வதை இந்த ஹைப்ரிட் அறிமுகம் உறுதிப்படுத்துகிறது.

இலங்கையில் Yamaha மோட்டார் சைக்கிள்களின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர் என்ற வகையில், AMW நிறுவனம் அதன் நீண்டகால செயல்திறன், புத்தாக்கம், நம்பகத்தன்மை ஆகியவற்றை தொடர்ச்சியாக பேணி வருகிறது. நாடு முழுவதும் பரந்து விரிந்துள்ள தமது கிளைகளின் ஊடாக, இலங்கையின் மோட்டார் சைக்கிள் கலாசாரத்தை தொழில்நுட்ப ரீதியாக அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதில் நிறுவனம் உறுதியாக உள்ளது.

மேலதிக விபரங்களுக்கு Yamaha Sri Lanka உத்தியோகபூர்வ இணையத்தளத்தை பார்வையிடவும் அல்லது நாடளாவிய ரீதியில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட Yamaha விற்பனை நிலையங்களை தொடர்பு கொள்ளவும்.

END

Share

You may also like...