வெற்றி கண்டுவரும் அமெரிக்காவிலுள்ள NCHS மாணவர்கள்

அமெரிக்க பட்டங்கள் உலகளாவிய அங்கீகாரம் மற்றும் ‘அமெரிக்க கனவை’ அடைவதற்கான உத்தரவாதத்தை கொண்டுள்ளதன் காரணமாக, இலங்கை மாணவர்களுக்கு அவை ஒரு சக்திவாய்ந்த தெரிவாக தொடர்ந்தும் விளங்குகின்றன.

அமெரிக்க பல்கலைக்கழக பட்டதாரிகள், உலகம் முழுவதும் உயர்வாக மதிக்கப்படுகிறார்கள். இது உலகளாவிய தொழில் வாய்ப்புகள், முதுகலை கற்கைகள் மற்றும் நீண்டகால வெற்றிக்கான கதவுகளைத் திறக்கிறது. இலங்கையில் அல்லது வெளிநாட்டில் எதிர்காலத்தைத் தேடும் இலங்கை மாணவர்களுக்கு, அமெரிக்கப் பட்டம் என்பது ஒரு மதிப்புமிக்க மற்றும் நிலையான முதலீடாகும்.

NCHS ஊடாக கனவை நனவாக்குங்கள்
இலங்கை மாணவர்கள் தங்களது அமெரிக்க கனவுகளை நனவாக்கி வருவதோடு, அவர்களின் வெற்றியில் நவலோக உயர்கல்வி நிறுவகம் (NCHS) முக்கிய பங்கு வகிக்கிறது. அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்தல் மற்றும் வீசா பெறுதல் போன்ற சிக்கலான செயன்முறைகளில் மாணவர்களுக்கு வழிகாட்டுவதில் சிறந்த வரலாற்றைக் கொண்டுள்ள NCHS கல்வி நிறுவகம், அமெரிக்காவில் உயர் கல்வியைத் தொடர விரும்பும் மாணவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக தொடர்ச்சியாக விளங்கி வருகின்றது. NCHS மாணவர்கள் தொடர்ச்சியாக கல்வியில் சிறந்து விளங்குவதோடு, புதிய சூழலுக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக்கொள்ளும் திறனையும் வெளிப்படுத்தி வருகின்றனர். பலர் தற்போது உயரிய அமெரிக்க பட்டங்களை பெறும் பாதையில் உள்ளனர்.

NCHS இன் முன்னாள் மாணவர்கள் இருவர் அண்மையில் தங்களது பல்கலைக்கழக கற்கையை வெற்றிகரமாக நிறைவு செய்து ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளனர். மலிந்து ஜயசேகர அமெரிக்காவின் கலிபோர்னியாவிலுள்ள Fresno State University இல் இயந்திரவியல் பொறியியலில் (Mechanical Engineering) பட்டம் பெற்றுள்ளதோடு, மெலிண்டா அடம்ஸ் அமெரிக்காவின் மேரிலாந்திலுள்ள Salisbury University இல் உயிரியல் மருத்து விஞ்ஞானத்தில் (Biomedical Science – Pre Med) பட்டம் பெற்றுள்ளார். மலிந்து தனது கற்கை பிரிவில் முதலிடத்தைப் பெற்று (Batch Top), முதல் வகுப்பு கௌரவப் பட்டம் (First Class Honours) வென்றதன் மூலம் NCHS இற்கும் இலங்கைக்கும் மேலும் பெருமை சேர்த்துள்ளார்.

வெற்றிக்காக NCHS இல் செதுக்கப்பட்டவர்கள்
மலிந்து தனது பயணத்தின் போது மதிப்புமிக்க அனுபவங்களையும் பல தொழில் வாய்ப்புகளை பெற்றமை தொடர்பான அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். தனது அமெரிக்க கனவை அடைந்தமையானது, உண்மையிலேயே ஒரு முக்கிய தருணம் என்றும், தனது பயணத்தில் ஆதரவளித்த NCHS நிறுவனத்திற்கு தனது நன்றியைத் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது குறித்து மேலும் தெரிவித்த அவர், “அமெரிக்காவில் இயந்திரப் பொறியியல் கற்கையை முன்னெடுப்பதானது, எனது கனவாக இருந்து வந்ததது. இந்த தருணத்தை எட்டியமையானது உண்மையிலேயே அதில் நான் அடைந்த பலன் மிக்க விடயமாகும். NCHS நிறுவகத்தில் நான் பெற்ற வழிகாட்டலானது, என்னை கல்வி ரீதியாக தயார்படுத்தியதுடன், எனது கற்கையை திட்டமிடுவது முதல் அமெரிக்காவில் பல்கலைக்கழக வாழ்க்கையை முன்னெடுப்பது வரையான பயணத்தின் ஒவ்வொரு படியிலும் எனக்கு உதவியது. எனது இலக்கை நனவாக்குவதற்காக தொடர்ச்சியான ஆதரவை வழங்கியமைக்கு NCHS இற்கு நான் நன்றியுடையவனாக உள்ளேன்.” என்றார்.

இது குறித்து மெலிண்டா தெரிவிக்கையில், NCHS – USA இடமாறும் திட்டம் தனக்கு Salisbury University இற்கு மாறுவதற்கான வாய்ப்பை வழங்கியதாகவும், பெறுமதிவாய்ந்த கல்வி மற்றும் பல்கலை வாழ்க்கை அனுபவத்தைப் பெறவும், உயிரியல் மருத்துவ விஞ்ஞான கற்கையில் தனது அமெரிக்கக் கனவை நோக்கி நம்பிக்கையுடன் முன்னேறவும் உதவியதாக குறிப்பிட்டார்.

மேலும் குறிப்பிட்ட மெலிண்டா, “NCHS – USA இடமாற்றத் திட்டமானது அமெரிக்காவில் உயிரியல் மருத்துவ விஞ்ஞான பட்டப்படிப்பை நிறைவு செய்து வெற்றி பெற எனக்கு அவசியமான நம்பிக்கையையும் அடித்தளத்தையும் வழங்கியது. கல்விக்கான தயார்படுத்தல் முதல் பல்கலைக்கழக வாழ்க்கைக்கு ஏற்றவாறு தயார்படுத்திக் கொள்வது வரையான செயன்முறை முழுவதும் NCHS எனக்கு ஆதரவளித்ததுடன், மருத்துவ துறையில் ஒரு தொழிலைத் தொடர வேண்டும் எனும் எனது கனவை நெருங்குவதற்கு எனக்கு உதவியது.” என்றார்.

அடுத்த தலைமுறை தலைவர்களுடன் இணையுங்கள்
அமெரிக்காவில் உலகத்தரம் வாய்ந்த கல்வியை பெறுவதற்கான வாய்ப்புகளை வழங்குவதன் மூலம், தொடர்ச்சியாக இலங்கை மாணவர்களை NCHS வலுவூட்டி வருகிறது. கல்வி ஆலோசனை முதல் வீசா தயார்படுத்தல் வரை, நிறுவனம் வழங்கும் விரிவான ஆதரவு கட்டமைப்பானது, மாணவர்கள் வெளிநாட்டில் கற்பதற்கான தயார்படுத்தல்களுக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், அவர்கள் தெரிவு செய்த துறைகளில் வெற்றி பெறறுவதற்கான தயார்படுத்தலையும் உறுதி செய்கிறது.

அமெரிக்க பட்டங்களை பெறும் கனவுகளை தொடர விரும்புகின்ற மாணவர்களுக்கு, தங்கு தடையற்ற பாதையை NCHS கல்வியகம் வழங்குகிறது. நீங்கள் உங்கள் கற்கையை இலங்கையில் ஆரம்பித்து அமெரிக்க பல்கலைக்கழகத்திற்கு மாற விரும்பினாலோ அல்லது முழுச் செயன்முறையிலும் வழிகாட்டல் தேவைப்படும் பட்சத்திலோ, அதை எளிதாக்க NCHS தயாராக உள்ளது.

அடுத்த கட்ட மாணவர் சேர்க்கையில் நீங்களும் எவ்வாறு இணையலாம் என்பது குறித்து அறிய, இன்றே NCHS கல்வியகத்தை தொடர்பு கொள்ளுங்கள். மேலதிக விபரங்களுக்கு 0777 799 997 அல்லது [email protected] ஊடாக தொடர்பு கொள்ளவும்.

Share

You may also like...