‘Superbrands’ அந்தஸ்துடன் பஜாஜ் உயர்ந்து நிற்கிறது

பஜாஜ் (Bajaj) நிறுவனத்திற்கு, 2025 ஆம் ஆண்டின் இலங்கையின் புகழ்பெற்ற ‘Superbrands’ (சூப்பர் வர்த்தகநாமம்) அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இது இலங்கைச் சந்தையில் இவ்வர்த்தக நாமத்தின் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது. இந்த அங்கீகாரமானது பஜாஜ் நிறுவனத்தின் நீடித்த வர்த்தகநாம வலிமை, சந்தையில் அதன் தலைமைத்துவம், பல ஆண்டுகளாக இலங்கை மக்களிடையே அது பெற்றுள்ள ஆழமான நம்பிக்கைக்கு ஒரு சான்றாகும்.

‘சூப்பர் பிராண்ட்ஸ்’ திட்டமானது, சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு வர்த்தகநாம மதிப்பீட்டு முயற்சியாகும். இத்திட்டமானது, ஒப்பிட முடியாத செயல்திறன், தொடர்ச்சியான நிலை, தரம், நுகர்வோர் விசுவாசத்தை வெளிப்படுத்தும் வர்த்தகநாமங்களைக் கண்டறிந்து கௌரவிக்கிறது. ‘சூப்பர் பிராண்ட்ஸ்’ அந்தஸ்தைப் பெற்றுக் கொண்டதன் மூலம், அந்தந்தப் பிரிவுகளில் சிறந்து விளங்கும் வர்த்தகநாமங்களின் உயர்மட்டக் குழுவில் பஜாஜ் நிறுவனமும் இணைகிறது.

நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக பஜாஜ் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளின் இலங்கையின் ஒரேயொரு விநியோகஸ்தராக விளங்கும் டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி (பிரைவேட்) லிமிடெட் (DPMC), நாடு முழுவதும் இவ்வர்த்தகநாமத்தின் பிரசன்னத்தை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. விற்பனை, உதிரிப் பாகங்கள் மற்றும் சேவை வசதிகளை உள்ளடக்கிய 2,000 இற்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்கள் மற்றும் சேவை மையங்களைக் கொண்ட ஒரு நிகரற்ற வலையமைப்பை DPMC நிறுவனம் கொண்டுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு தங்குதடையற்ற அணுகலையும், ஆதரவையும் உறுதி செய்கிறது.

இந்த சாதனை குறித்து, DPMC நிறுவனத்தின் வாகன விற்பனைப் பிரிவு பிரதம அதிகாரி லக்மால் டி சில்வா கருத்து வெளியிடுகையில்; “DPMC இன் வழிகாட்டலின் கீழ், இலங்கையில் பஜாஜ் , முதன்மையான மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி வர்த்தகநாமமாக தொடர்ச்சியாக இருந்து வருகிறது. ‘சூப்பர் பிராண்ட்ஸ்’ அங்கீகாரமானது, கடந்த நான்கு தசாப்தங்களாக இந்தப் பிரிவில் முன்னணி வர்த்தகநாமமாக எமது நிலையை மேலும் உறுதிப்படுத்துகிறது.” என்றார்.

பஜாஜ் வர்த்தகநாமம் தொடர்பான வலுவான மதிப்பு, புத்தாக்கமான தயாரிப்புகள், இலங்கை வாடிக்கையாளர்களின் அதிகரித்து வரும் போக்குவரத்து தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இந்த விருது பிரதிபலிப்பதாக அவர் இங்கு மேலும் குறிப்பிட்டார். வர்த்தகநாம முகாமைத்துவம், வாடிக்கையாளர் திருப்தி, நீண்டகால சந்தை தலைமைத்துவம் ஆகியவற்றில் DPMC கொண்டுள்ள அசைக்க முடியாத கவனத்தையும் இந்த அங்கீகாரம் எடுத்துக் காட்டுகிறது.

தனது சாதனைகளின் பட்டியலில் இணைந்துள்ள இந்த மற்றுமொரு கௌரவத்துடன், Brand Finance Lanka அமைப்பினால் இலங்கையின் ‘மிகவும் விரும்பப்படும் மோட்டார் சைக்கிள் வர்த்தகநாமம்’ எனும் அந்தஸ்துடன் பஜாஜ் ஏற்கனவே உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 2019, 2020, 2021, 2022, 2023 ஆகிய ஆண்டுகளில் தொடர்ச்சியாக இந்த பட்டத்தை BAJAJ வர்த்தகநாமம் வென்றுள்ளது. இந்த ஐந்து ஆண்டு கால வெற்றிப் பயணமானது, இலங்கையில் வாகனம் செலுத்துபவர்களிடையே உள்ள வலுவான நுகர்வோர் விருப்பத்தையும் நீடித்த வர்த்தகநாம விசுவாசத்தையும் பிரதிபலிக்கிறது.

Share

You may also like...