ஒன்லைன் வீசா வழங்கல் முறைமை மீதான விசேட கணக்காய்வு அறிக்கை தொடர்பான விளக்கம்

கணக்காய்வாளர் நாயகத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டு, தற்போது பொதுவெளியில் பகிரப்பட்டு வருகின்ற, 2025 ஒக்டோபர் 03ஆம் திகதியிடப்பட்ட, ‘குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் ஒன்லைன் வீசா வழங்கல் முறைமை’ குறித்த விசேட கணக்காய்வு அறிக்கை தொடர்பான விளக்கமளிப்பே இந்த ஊடக அறிக்கையாகும்.

GBS Technology Services & IVS Global FZCO (“IVS-GBS”)  ஆனது ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாயில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு நிறுவனமாகும். இது சிங்கப்பூரைத் தலைமையகமாகக் கொண்ட GBS Technology Services Pte Ltd இன் முழுமையான உரிமை கொண்ட துணை நிறுவனமாகும். இந்த நிறுவனம் அரசாங்கங்கள் மற்றும் பொதுமக்களுக்கு பாதுகாப்பான மற்றும் புத்தாக்கமான தொழில்நுட்ப தீர்வுகளை வழங்குகிறது.

GBS Technology Services Pte Ltd ஆனது, 2005 ஆம் ஆண்டு முதல் வீசா தொடர்பான 10 மில்லியனுக்கும் அதிகமான விண்ணப்பங்களை செயற்படுத்தியுள்ள ஒரு முன்னணி வெளியக வளங்கள் வழங்கும் நிறுவனமான (outsourcing company) IVS Global Services Private Ltd உடன் அனுமதிப்பத்திரம் பகிரும் ஒரு ஒப்பந்தத்தில் நுழைந்துள்ளது.

2023 டிசம்பர் 21ஆம் திகதி, IVS-GBS, V F Worldwide Holdings Ltd (“VFS”) மற்றும் இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்துடன் இணைந்து, eVisa மற்றும் அது தொடர்பான சேவைகளை வழங்குவதற்காக ஒரு வெளியக வளங்கள் சேவைக்கான ஒப்பந்தத்தை முன்னெடுத்திருந்தது. இதில் IVS-GBS ஆனது பிரதான ஒப்பந்ததாரராகவும், VFS அதன் தொழில்நுட்பப் பங்காளராகவும்செயற்பட்டது.

2025 ஒக்டோபர் 03ஆம் திகதியிடப்பட்ட குறித்த விசேட கணக்காய்வு அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள பல அவதானிப்புகள் குறித்து விளக்கங்கள் அவசிமாகும். பிரதான ஒப்பந்ததாரர் எனும் வகையில், வீசா வருமானத்தை சேகரித்து, திணைக்களத்திற்கு அனுப்புவதற்கு நாம் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்துடன் உடன்பட்டோம் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம். இந்த விடயம் நீதிமன்ற பரிசீலனையில் (sub judice) இருப்பதால், இந்த மட்டுப்படுத்தப்பட்ட அறிக்கையை மாத்திரமே தற்போதைய நிலையில் வெளியிட விரும்புகிறோம். தேவைப்படும்போது பொருத்தமான வெளியில் உரிய பிரதிநிதித்துவத்துவடன், விளக்கங்கள் வழங்கப்படுமென எமக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் வெளியிடப்பட்ட விடயங்கள், IVS-GBS ஆகிய எமக்கு விளக்கங்களை வழங்க எவ்வித வாய்ப்பையும் வழங்காமல் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். அத்தகைய ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தால், கணக்காய்வாளர் நாயகத்தின் அலுவலகம் அறிக்கை தயாரிப்பதற்கு உதவும் வகையில் பொருத்தமான ஆதாரங்கள் மற்றும் விளக்கங்களை நாம் சமர்ப்பித்திருக்க முடியுமென் நாம் உறுதியாக நம்புகிறோம்.

இதேவேளை, குறித்த அறிக்கையில் மேற்கொள்ளப்பட்ட சில அவதானிப்புகள் குறித்து தெளிவுபடுத்தவும் விளக்கங்களை வழங்கவும் கணக்காய்வாளர் நாயகத்தின் அலுவலகத்துடன் நேரடியாக தொடர்பை ஏற்படுத்த IVS-GBS உத்தேசித்துள்ளது.

இலங்கை அரசாங்கத்துடனான எமது பங்காளித்துவத்தை நாம் மதிப்பதுடன், தொடர்புடைய அனைத்து அதிகாரிகளுடனும் முழுமையான வெளிப்படைத்தன்மை, ஒத்துழைப்பு மற்றும் இணக்கத்தைப் பேணுவதற்கு நாம் உறுதியாக உள்ளோம்.

ENDS

Share

You may also like...