2025 CMTA வாகன கண்காட்சியில் 1000cc Turbocharged ATIVA Compact SUV மற்றும் 1300/1500cc MYVI Hatchback இனை வெளியிட்ட Unimo Enterprises

United Motors Lanka PLC நிறுவனத்திற்கு முழுமையாக சொந்தமான துணை நிறுவனமும், இலங்கையில் Perodua (பெரோடுவா) வாகனங்களின் பிரத்தியேக விநியோகஸ்தருமான Unimo Enterprises Limited, CMTA Motor Show 2025 இல், புத்தம் புதிய Perodua ATIVA மற்றும் MYVI ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளதை பெருமையுடன் அறிவித்துள்ளது. இந்த மகத்தான சந்தர்ப்பமானது, தரம், புத்தாக்கம் மற்றும் வாடிக்கையாளர் திருப்திக்கான Unimo மற்றும் Perodua ஆகியவற்றின் பகிரப்பட்ட அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துவதுடன், அவற்றுக்கிடையிலான சுமார் மூன்று தசாப்த பங்காளித்துவத்தில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குகிறது. அது மாத்திரமன்றி, இந்த மைல்கல் நிகழ்வை நினைவுகூரும் வகையில் Hilton Colombo ஹோட்டலில் ஒரு விசேட காட்சி நிகழ்வையும் Unimo நிறுவனம் முன்னெடுத்திருந்தது. இந்த அறிமுக நிகழ்வில், இலங்கை மற்றும் மாலைதீவுக்கான மலேசிய உயர் ஸ்தானிகர் Badli Hisham Adam, Perodua நிறுவனத்தின் மலேசிய பிரதம செயற்பாட்டு அதிகாரி Datuk JH Rozman Jaafar மற்றும் Perodua நிறுவன சிரேஷ்ட நிறைவேற்று அதிகாரிகளுடன், வாகன தொடர்களின் உரிமையாளர்கள், ஊடகப் பிரதிநிதிகள் மற்றும் Perodua வாடிக்கையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

மலேசியாவின் முதலிடத்திலுள்ள வாகன வர்த்தகநாமமான Perodua, சுமார் 30 வருடங்களாக Unimo Enterprises Limited ஊடாக இலங்கையில் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது. இது உள்ளூர் நுகர்வோருக்கு நம்பகமான, திறனான மற்றும் உலகத் தரம் வாய்ந்த தயாரிப்புகளை இலங்கைச் சந்தைக்கு வழங்கியுள்ளதுடன், 17,000 இற்கும் மேற்பட்ட திருப்திகரமான வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது. ATIVA மற்றும் MYVI அறிமுகத்தின் மூலம், இலங்கையில் உள்ள அனைத்து முக்கிய பயணிகள் வாகனப் பிரிவுகளையும் உள்ளடக்கியவாறு Perodua அதன் வாகன வகையை விரிவுபடுத்தியுள்ளது. இந்த மாதிரிகள், Perodua கொண்டுள்ள தனித்துவமான மதிப்பு, நீடித்து நிலைக்கும் தன்மை மற்றும் தரம் ஆகியவற்றை கொண்டுள்ளதுடன், புத்திசாலித்தனமான, நவீன போக்குவரத்துக்கான வர்த்தகநாமத்தின் முன்னேற்றத்தையும் உள்ளடக்கியுள்ளது.  

Perodua ATIVA ஆனது, அடுத்த தலைமுறை compact SUV இனை பிரதிபலிக்கிறது. இது நவீன வாகன செலுத்துனர்களுக்கான புத்திசாதுர்யமான பாதுகாப்பு, மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் அன்றாட பல்துறை பயன்பாடு ஆகியவற்றை ஒன்றிணைக்கிறது. எரிபொருள் திறன்மிக்க 1.0L Turbocharged எஞ்சின் மற்றும் D-CVT பரிமாற்றம் மூலம் இயக்கப்படுவதுடன், இது சிறந்த எரிபொருள் திறனை வழங்குகிறது. Perodua ஸ்மார்ட் டிரைவ் அசிஸ்ட் (Perodua Smart Drive Assist) பொருத்தப்பட்ட ATIVA, நிலைமைக்கேற்ற வாகன கட்டுப்பாடு (Adaptive Cruise Control) மற்றும் மோதலுக்கு முன் நிறுத்தல் (Pre-Collision Braking) போன்ற முக்கிய பாதுகாப்புத் தொழில்நுட்பங்களை கொண்டுள்ளது. குரல் வழி செயற்பாடுகள் மற்றும் Smart Link இணைப்புடன் கூடிய 9 அங்குல பொழுதுபோக்கு அம்சங் கொண்ட திரையானது, சாரதியின் பயண அனுபவத்தை மேம்படுத்துகின்றது. அதே நேரத்தில், நெகிழ்வான பின் ஆசனங்களைக் கொண்ட அதன் விசாலமான உட்புறம் எந்தவொரு பயணத்திற்கும் ஏற்ற நடைமுறைத் தன்மையை வழங்குகிறது. ஸ்டைலான, கச்சிதமாக அமைக்கப்பட்ட மற்றும் சாகசத்திற்கு தயார் நிலை கொண்ட ATIVA கார் ஆனது, நகர்ப்புற பயணங்கள் மற்றும் கிராமப்புற பயணங்கள் ஆகிய இரண்டிற்கும் ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆசியாவின் மிக விருப்பமான Hatchback தெரிவான Perodua MYVI, புதுப்பிக்கப்பட்ட நேர்த்தியுடனும் திறனுடனும் வெளி வந்துள்ளது. இது அதன் பிரிவில் உள்ள வாகனங்கள் மத்தியில் ஒரு புதிய தரநிலையை அமைக்கிறது. மேம்பட்ட Dual VVT-i எஞ்சின் மற்றும் D-CVT transmission மூலம் இயக்கப்படும் இது, மிருதுவான செயல்திறன் மற்றும் ஒப்பிட முடியாத எரிபொருள் சிக்கனத்தை வழங்குகிறது. குரல் வழி செயற்பாடு, Smart Link இணைப்பு மற்றும் Display Audio போன்ற நவீன வசதிகளை MYVI கொண்டுள்ளது. இது ஒரு தடையற்ற மற்றும் தொடர்பாடல் இணைப்பு கொண்ட பயணத்தை வழங்குகிறது. Perodua வின் மேம்பட்ட பாதுகாப்பு உதவி அமைப்பானது (Advanced Safety Assist) பாதுகாப்பு தொடர்பான கவலையை நீக்குவதோடு, நடைமுறை ரீதியான திறனுடன் ஸ்டைலை இணைக்கும் ஒரு நேர்த்தியான, இளமை ததும்பும் வடிவமைப்பை கொண்டுள்ளது. MYVI இன் செயல்திறன், அது கொண்டுள்ள வசதி மற்றும் அன்றாடப் பயன்பாடு ஆகியவற்றின் சரியான சமநிலையை உள்ளடக்கியுள்ளது.

இது குறித்து, United Motors Lanka PLC இன் குழும பிரதம செயற்பாட்டு அதிகாரியும் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளருமான சானக்க யட்டவர குறிப்பிடுகையில், “30 வருடங்களுக்கும் மேலாக இலங்கையில் ஒரு நம்பகமான வீட்டுப் பெயராக Perodua இருந்து வருகிறது. 17,000 இற்கும் மேற்பட்ட வாகனங்களை அது விற்பனை செய்துள்ளது. மீள விற்கும் போது அதிக பெறுமதியை கொண்டிருத்தல், சிறந்த எரிபொருள் சிக்கனம் மற்றும் குறைந்த பராமரிப்புச் செலவுகளுக்குப் பெயர் பெற்ற Perodua, நுகர்வோர் மற்றும் நிதி நிறுவனங்கள் ஆகிய இரு தரப்பினராலும் தொடர்ச்சியாக விரும்பப்படும் தெரிவாக விளங்குகின்றது. நாடு முழுவதும் உள்ள 10 பட்டறைகளுடன், நாம் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து வர்த்தக நாமங்களிலும் வருடாந்தம் சுமார் 40,000 வாகனங்களை நாம் பேணுகின்றோம். கடந்த ஆறு முதல் ஏழு மாதங்களில் மாத்திரம் Perodua வின் மூன்று மாதிரிகளில் 1,000 இற்கும் மேற்பட்ட வாகனங்களை நாம் ஏற்கனவே விற்பனை செய்துள்ளோம். ஒரு வாகனத்தை கொள்வனவு செய்வதானது, இலங்கையர்களுக்கு ஒரு முக்கிய முதலீடாக காணப்படுகின்றது. அதற்கமைய, பணத்திற்கான நீடித்த மதிப்பை Perodua வழங்குகிறது. இந்த அறிமுகமானது எமது வாடிக்கையாளர்களுக்கு தரம், நம்பகத் தன்மை மற்றும் மதிப்பு சார்ந்த போக்குவரத்துத் தீர்வுகளை வழங்குவது தொடர்பான எமது உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது.” என்றார்.

இந்த இரண்டு மாதிரிகளும் 5 வருடங்கள் அல்லது 150,000 கிலோமீற்றர் எனும் உத்தரவாதத்துடன் சிறந்த மதிப்பு மற்றும் நீண்ட கால மன அமைதியை வழங்குகின்றன.

மேலதிக தகவல்களுக்கு, www.peroduasl.lk ஐப் பார்வையிடவும் அல்லது Perodua உடனடி தொலைபேசி இலக்கத்தை 0117 565 170 தொடர்பு கொள்ளவும்.

END

Photo Caption

2025 CMTA மோட்டார் வாகன கண்காட்சி மற்றும் ஹில்டன் கொழும்பு ஹோட்டலில் இடம்பெற்ற ஒரு விசேட கண்காட்சியில் முற்றிலும் புதிய Perodua ATIVA மற்றும் MYVI ஆகியவற்றை Unimo Enterprises Limited நிறுவனம் வெளியிட்டது. இந்நிகழ்வில், இலங்கை மற்றும் மாலைதீவுக்கான மலேசிய உயர் ஸ்தானிகர் Badli Hisham Adam மற்றும் Perodua மலேசியா நிறுவனத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரி Datuk JH Rozman Jaafar உடன் நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், வாடிக்கையாளர்கள் மற்றும் ஊடகப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Share

You may also like...