சிறுவர் நல வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் 27ஆவது வருடாந்த விஞ்ஞான மாநாட்டில் முக்கிய பங்காற்றிய பேபி செரமி

இலங்கையில் மிகவும் விரும்பப்படும், மிக நம்பிக்கையுடன் பயன்படுத்தப்படும் குழந்தைகளுக்கான பராமரிப்பு வர்த்தகநாமமாக விளங்கும் பேபி செரமி (Baby Cheramy), இலங்கை சிறுவர் நல மருத்துவக் கல்லூரியுடன் (Sri Lanka College of Pediatricians) இணைந்து 27ஆவது வருடாந்த 2025 விஞ்ஞான மாநாட்டில் பெருமையுடன் பங்கேற்று, குழந்தைகளுக்கான பராமரிப்புத் துறையில் தனது தலைமைத்துவத்தையும், குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் சுகவாழ்வு தொடர்பான தமது அர்ப்பணிப்பையும் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இந்த மாநாடானது, நாடு முழுவதிலிருந்தும் சிறுவர் நல மருத்துவ நிபுணர்கள் மற்றும் மருத்துவ மாணவர்களை ஒன்று சேர்க்கும் சிறப்பு வாய்ந்த ஒரு மேடையாக அமைந்தது. தரமான, பாதுகாப்பான மற்றும் மருத்துவ ரீதியான பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட குழந்தை நல பராமரிப்பு தயாரிப்புகளையே வழங்க வேண்டும் என்பதை தனது நோக்கமாகக் கொண்ட பேபி செரமி, இம்மாநாட்டில் அதன் முக்கிய பங்களிப்பை வழங்கியது. மருத்துவ நிபுணர்களுடன் புத்தாக்க கண்டுபிடிப்புகள், மேம்பாடுகள் மற்றும் நோக்கங்களை பகிர்ந்துகொண்டதன் மூலம் பேபி செரமி அதன் பங்களிப்பை இங்கு வழங்கியது. தொழில்துறையில் சந்தைத் தலைவராக விளங்கும் பேபி செரமி, உயர் தரமான, பாதுகாப்பான மற்றும் மருத்துவ ரீதியாக சோதிக்கப்பட்ட சிறுவர் பராமரிப்புத் தயாரிப்புகள் ஒரு தேவையாக அல்லாமல், அது ஒரு அத்தியாவசிய தரநிலையாக மாற வேண்டும் என்பதில் மிக நீண்ட காலமாக உறுதி கொண்டுள்ளது. இந்த நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு, சிறுவர்களுக்கான பாதுகாப்பான உலகை உருவாக்கும் தனது தூரநோக்கை மருத்துவ நிபுணர்களுடன் இணைந்து பகிர்வதற்காக இம்முறை விஞ்ஞான மாநாட்டில் பேபி செரமி தனது பங்களிப்பை வழங்கியது.

இந்நிகழ்வில், Hemas Consumer Brands சந்தைப்படுத்தல் பணிப்பாளர், ஷியான் ஜயவீர கருத்து வெளியிடுகையில், “ஒவ்வொரு குழந்தைக்கும் வாழ்க்கையின் ஆரம்பம் பாதுகாப்பாக அமைய வேண்டும் என்பது பேபி செரமியின் நம்பிக்கையாகும். இலங்கை சிறுவர் நல வைத்திய நிபுணர்கள் கல்லூரியுடன் இவ்வருட விஞ்ஞான மாநாட்டில் இணைந்து செயற்படுவதன் மூலம், அந்த நோக்கத்தில் நாம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை வலியுறுத்துகிறோம். சந்தையின் முன்னணி தலைவர் எனும் வகையில், தயாரிப்பின் பாதுகாப்பு தொடர்பில் மாத்திரமல்லாமல், ஒவ்வொரு செயலின் பின்னாலிருக்கும் நோக்கத்திலும் நாம் மிக உயர்ந்த தரநிலைகளை கடைப்பிடிக்கிறோம். எமது இலக்கை பகிர்ந்து கொள்கின்ற நிபுணர்கள் மற்றும் நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுவதில் நாம் பெருமிதம் கொள்கிறோம். ஒவ்வொரு இலங்கைச் சிறுவர்களினதும் நலனுக்காக, பொறுப்புடனான புத்தாக்கத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்து, உற்சாகமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.” என்றார்.

பேபி செரமியின் கொள்கையின் மையக்கருவாக, பாதுகாப்பு மற்றும் தயாரிப்பின் நம்பகத்தன்மை உள்ளடக்கப்படுகின்றன. தங்கொட்டுவவில் உள்ள Baby Cheramy Safety Institute இல், அதன் அனைத்து தயாரிப்புகளும் 8 படிமுறை கொண்ட பாதுகாப்புச் செயன்முறையின் கீழ் சோதிக்கப்படுகின்றன. ஒவ்வொரு உற்பத்தியும் சரும வைத்திய நிபுணரால் சோதனை செய்யப்பட்டு, மருத்துவ ரீதியில் சிறந்தது என சான்றளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான பாதுகாப்பு தரங்கள் எப்படி பேணப்படுகின்றன என்பது குறித்து, இம்மாநாட்டில் பங்கேற்ற நிபுணர்களுக்கு பேபி செரமி தெளிவான விளக்கங்களை பகிர்ந்தமை குறிப்பிடத்தக்கது.

பேபி செரமி டயபர்கள், தற்போது புதிய வடிவில் மீள அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவை மருத்துவ ரீதியாக சோதிக்கபட்டவை எனவும், தோலில் எரிச்சலை ஏற்படுத்தாது எனவும் மருத்து ரீதியாக சான்று பெற்றுள்ளது. மிருதுவான டயபர்களாக உருவாக்கப்பட்ட போதிலும், உயர்தர உறிஞ்சும் திறன் கொண்ட இவை முழு நாளும், குழந்தைகளை உலர் தன்மையுடனும், சொகுசாகவும், சந்தோசமாகவும் வைத்திருக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன. தற்பொழுது பேபி செரமி வர்த்தகநாமம், குழந்தைகளின் வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்தையும் பூரணமாகக் கவனத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்ட முழுமையான டயபர் வரிசையை வழங்குகின்றது. இதில், புதிதாக பிறந்த குழந்தைகளுக்கான டயபர்கள், தாயிடமிருந்து புதிதாக பிரிக்கப்பட்ட தொப்புள்கொடியை பாதுகாப்பாக வைக்கும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு, குழந்தையின் ஆரம்ப நாட்களுக்கான மென்மையான பராமரிப்பை வழங்குகின்றன. அத்துடன், மேலும் அதிக சுறுசுறுப்பான, வளரும் குழந்தைகளுக்காக, எளிதில் அணியக்கூடிய, நாள் முழுவதும் வசதியளிக்கும் வகையிலான Baby Pants காணப்படுகிறது. அத்துடன், Baby Cheramy Liquid Soap தற்போது இவ்வர்த்தநாம சவர்க்காரத்தின் குடும்பத்தில் புதிய சேர்க்கையாக இணைந்துள்ளது. குழந்தையின் சருமத்திற்கு இரட்டிப்பு ஈரப்பதனை வழங்கும் இந்நவீன திரவ வடிவம், குழந்தை மகிழ்ச்சியுடன் குளிப்பதற்கான பொங்கும் குமிழிகளுடனான, ஆடம்பர அனுபவத்தை தருகிறது.

பேபி செரமி, கடந்த 15 ஆண்டுகளாக இலங்கையின் சிறுவர் பாதுகாப்பு சூழலை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வந்துள்ளது. அந்த வகையில் ‘Safe World for Children’ எனும் அதன் பொறுப்புணர்வான சமூக முயற்சியானது, அதன் சமூக பொறுப்புணர்ச்சிக்கு ஒரு முன்னுதாரணமாக அமைகிறது. இத்திட்டம், இலங்கை சிறுவர் நல வைத்திய நிபுணர்களின் சங்கம், இலங்கை சமூக விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் மற்றும் தேசிய ஆரம்பக் குழந்தை பருவ வளர்ச்சி செயலகம் போன்ற முன்னணி அரச மற்றும் மருத்துவ நிறுவகங்களுடன் இணைந்து, பேபி செரமி நாடளாவிய விழிப்புணர்வு பிரசாரங்கள், கல்வி நிகழ்ச்சிகள் மற்றும் பெற்றோர் வழிகாட்டல் நூல்களை விநியோகித்து பெற்றோர்கள் மற்றும் பராமரிப்பாளர்களை வலுப்படுத்தி வருகிறது. அத்துடன், ஆரம்ப குழந்தை பருவ வளர்ச்சி குறித்த விழிப்புணர்வு, தாய்மார்களுக்கான விழிப்பூட்டல் நிகழ்ச்சிகள், அனைவரையும் உள்ளீர்த்த பெற்றோர் செயற்பாடுகள் குறித்து வழிகாட்டல் மற்றும் நிபுணர்களின் வழிகாட்டலுடன் நடத்தப்படும் டிஜிட்டல் ஊடகங்கள் மூலமான கேள்வி – பதில் (Q&A) நிகழ்ச்சிகள் போன்றவை குழந்தைகள் வீடுகளில் எதிர்கொள்ளும் விபத்துகளை தடுக்கும் நோக்குடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. பேபி செரமி தற்போது அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து, சிறுபராயத்தில் ஏற்படும் விபத்துகளை குறைக்கவும், ஆரம்ப குழந்தைப் பருவ வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உறுதியாக செயற்பட்டு வருகிறது.

கடந்த ஆறு தசாப்தங்களுக்கு மேலாக தலைமுறை தலைமுறையாக குழந்தைகள் பராமரிப்புத் துறையில் இலங்கை குடும்பங்களின் நம்பிக்கையான பெயராக பேபி செரமி திகழ்ந்து வருகின்றது. மென்மை, பாதுகாப்பு மற்றும் உயர் தர உற்பத்திக்காக பெயர்பெற்று விளங்கும் புதிய நோக்குடன், பொறுப்புணர்வுடனும், தொடர்ச்சியான புத்தாக்கங்கள் மூலமும், சிறுவர் பராமரிப்புத் துறையில் வழிகாட்டியாகத் திகழ்ந்து, பல மில்லியன் கணக்கானோரின் அன்பையும் நம்பிக்கையும் பேபி செரமி வென்றுள்ளது.

Share

You may also like...