ஜனசக்தி லைஃப் இனால் இளம் சிந்தனையாளர்களுக்கு வலுவூட்டும் வகையில் முன்னெடுக்கப்பட்ட ‘Nidahas Adahas’ ஓவியப் போட்டியில் 20,000 ஐ அண்மித்த விண்ணப்பங்கள் கிடைத்துள்ளது

JXG (ஜனசக்தி குழுமம்) இன் துணை நிறுவனமான ஜனசக்தி லைஃப், தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாகவும் ‘Nidahas Adahas’ (நிதஹஸ் அதஹஸ்) ஓவியப் போட்டியை ஏற்பாடு செய்துள்ளது. இலங்கையின் இளம் தலைமுறையினரிடமிருந்து புத்தாக்கத்தை வெளிக்கொணரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தப் போட்டியில், இதுவரையில் சுமார் 20,000 ஐ அண்மித்த விண்ணப்பங்கள் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரு வயது பிரிவுகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தப் போட்டிகள் 3-5 வயது மற்றும் 5 – 10 வயது வரையில் முன்னெடுக்கப்படுவதுடன், ஓவியத்தினூடாக சிறுவர்களுக்கு தமது சுதந்திரமான சிந்தனைகளை வெளிப்படுத்த வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும் கல்வியறிவூட்டவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரையில், 58,811 க்கு அதிகமான பாடசாலைகள் மற்றும் 4,872 முன்பள்ளிகளின் மாணவர்கள் இந்த விழிப்புணர்வூட்டும் அமர்வுகளில் பங்கேற்றுள்ளனர். இவை 38 நாட்களில் 33 கிளைகளினூடாக முன்னெடுக்கப்பட்டிருந்தன.

ஜனசக்தி லைஃப்பின் உறுதியான கிளை வலையமைப்பினூடாக ஆதரவளிக்கப்படும் இந்தத் திட்டம் நாடு முழுவதையும் சேர்ந்த பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகளை சென்றடைந்துள்ளது. ஒவ்வொரு பிரிவிலிருந்தும் சிறந்த 100 விண்ணப்பங்களை நடுவர் குழு தெரிவு செய்து, 2025 செப்டெம்பர் மாதம் முன்னெடுக்கப்படவுள்ள பொது கண்காட்சிக்காக 200 சித்திரங்கள் தெரிவு செய்யப்படும்.

இளம் கலைஞர்களை மேலும் ஊக்குவிக்கும் வகையில், செப்டெம்பர் மாதம் முன்னெடுக்கப்படவுள்ள ‘Nidahas Adahas’ ஓவிய போட்டியின் போது, ஜனசக்தி லைஃப் இனால் கலையம்ச திறன்களை கட்டியெழுப்பும் மற்றும் குழுநிலை செயற்பாடுகள் தொடர்பான இலவச பயிற்சிப்பட்டறையும் முன்னெடுக்கப்படும்.  அதனூடாக, கலைகள் மூலம், இளம் திறமைசாலிகளை ஊக்குவிப்பது மற்றும் சமூகங்களுக்கு வலுவூட்டுவதற்கான தனது அர்ப்பணிப்பை இந்நிறுவனம் மேலும் பிரதிபலிக்கும்.

###.

ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி பற்றி

1994 ஆம் ஆண்டு ஆயுள் காப்புறுதி நிறுவனமாக ஸ்தாபிக்கப்பட்ட ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி (ஜனசக்தி லைஃவ்), துறையில் புத்தாக்கமான செயற்பாட்டாளராக தன்னை அடையாளப்படுத்தியுள்ளதுடன், 30 வருடங்களுக்கு மேலாக அனைவர் மத்தியில் அறியப்படும் நாமமாகவும் திகழ்கின்றது. ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி நிறுவனமானது, இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழுவினால் உரிமம் பெற்றது. நாடு முழுவதிலும் உறுதியான பிரசன்னத்தை ஜனசக்தி லைஃப் கொண்டுள்ளதுடன், பரந்த 75 கிளைகள் மற்றும் பிரத்தியேகமான அழைப்பு நிலையத்தையும் கொண்டுள்ளது. “வாழ்க்கையை மேம்படுத்தல் மற்றும் கனவுகளுக்கு வலுவூட்டல்” எனும் நோக்கத்துக்கமைய, ஆயுள் காப்புறுதித் துறையில் முன்னோடியாக திகழ்வதற்காக ஜனசக்தி லைஃப் தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், அதற்காக தனது வாடிக்கையாளர்கள் மற்றும் பங்காளர்களுக்கு காப்புறுதிக்கு அப்பாலான சேவையை வழங்குகின்றது. காப்புறுதி, நிதி மற்றும் முதலீட்டு துறைகளில் இயங்கும் நிதிசார் பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனமான ஜனசக்தி குழுமத்தின் அங்கத்துவ நிறுவனமாக ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி திகழ்கின்றது.

Share

You may also like...