உள்நாட்டு தலைமைத்துவம், Belluna நிறுவனத்தின் எதிர்காலத்தை நோக்கிய தூரநோக்கை பிரதிபலிக்கிறது

ஜப்பானின் Belluna Co. Ltd. நிறுவனத்தின் இலங்கை கிளையான Belluna Lanka நிறுவனத்தின் முதன்மை சொத்தாக விளங்கும் Granbell Hotel Colombo, தனது புதிய பொது முகாமையாளராக ஷெஹான் சப்ராஸ் நியமிக்கப்பட்டதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. திறமையாளர்கள் வளர இடம் கொடுக்கப்பட்டால் எவ்வாறான விடயங்கள் சாத்தியமாகும் என்பதை பிரதிபலிக்கும் Belluna Lanka நிறுவனத்தில் தனது பயணத்தை மேற்கொண்ட ஒரு தலைவர் எனும் வகையில் அவரது பயணம் இதற்கு ஒரு சான்றாகும். Granbell ஹோட்டல் திறப்பதற்கு முன்பிருந்தே ஷெஹான் அதன் செயற்பாடுகளில் தீவிரமாக பங்காற்றி வந்துள்ளார். Rooms Division முகாமையாளர் நிலையிலிருந்த அவர் தற்போது பொது முகாமையாளராக உயர்ந்துள்ளார். இது Belluna நிறுவனம் கொண்டுள்ள நீடித்த உள்ளக வளர்ச்சிக்கான நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.

மத்திய கிழக்கு நாடுகளில் முன்னணி விருந்தோம்பல் நிறுவனங்களில் ஒன்றாக இருபதாண்டுகளுக்கும் அதிகமான சர்வதேச அனுபவத்தைக் கொண்ட ஷெஹான், உலகளாவிய தூரநோக்கையும் ஆழ்ந்த செயற்பாட்டு நோக்கையும் கொண்டுள்ளார். அவரின் தலைமைத்துவத்தின் கீழ், Granbell Hotel Colombo தொடர்ச்சியாக தனது நிலையை வலுப்படுத்தி வருகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக, 2024 ஆம் ஆண்டு இலங்கை சுற்றுலா விருது விழாவில்  Best City Hotel (சிறந்த நகர ஹோட்டல்) என விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இது, குழுவின் சிறந்த சேவையையும் விருந்தினர் பராமரிப்பையும் நோக்கிய அர்ப்பணிப்பை காட்டுகின்றது.

அவரது படிப்படியான நிலையான வளர்ச்சியானது, அவரது விடாமுயற்சி, ஒழுங்கு மற்றும் பொறுப்புணர்வு ஆகியவற்றை காண்பிப்பதோடு, இவை அவர் இன்று எவ்வாறு வழிநடத்துகிறார் என்பதன் மூலம் வெளிப்படுகின்றது. இது குறித்து கருத்து வெளியிட்ட அவர், “பொறுப்பை ஆரம்ப கட்டத்திலேயே ஏற்றுக் கொண்டதன் மூலம், தலைமைத்துவம் என்பது வெறுமனே தனிப்பட்ட வெற்றிக்கானது மட்டுமல்ல என்பதை எனக்குக் கற்றுத்தந்தது. அது உங்கள் குழுவிற்காக, உங்கள் விருந்தினர்களிற்காக, நீண்டகால நோக்கங்களுக்காக தொடர்ச்சியாக முயற்சி செய்வதாகும்.” என்றார்.

Belluna Lanka நிறுவனத்தின் சொத்துகளில் காணப்படும் தலைமைத்துவ அணுகுமுறையைப் பற்றி நிறுவனத்தின் முகாமையாளரும் பணிப்பாளருமான Reyhan Morris கருத்து வெளியிடுகையில், “எமது நீண்டகால வெற்றியின் மையத்தில் மக்களே உள்ளனர். அவர்கள் எமது விருந்தினர்களாகவும், எமது பணியாளர்களாகவும் காணப்படுகின்றனர். இந்நியமனமானது உள்ளூர்த் திறமையாளர்களை வளர்ப்பதில் காணப்படும் எமது ஆழ்ந்த அர்ப்பணிப்பையும், மக்கள் வளரக்கூடிய சூழலை உருவாக்கும் முயற்சியையும் பிரதிபலிக்கிறது. நாங்கள் பொறுப்புடனும், நோக்கத்துடனும் வளர்வதற்கான வழிமுறை இதுவேயாகும்.” என்றார்.

மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் இந்த நோக்கானது, ஷெஹானின் தலைமையிலும் பிரதிபலிக்கிறது: “ஹோட்டல் நுழைவாயிலில் இன்முகத்துடன் வரவேற்பதிலிருந்து  ஆரம்பித்து, பணிகளின் பின்புலத்தில் காணப்படும் நடைமுறை விடயங்களிலான பலநூறு செயல்பாடுகள் வரை, ஒவ்வொரு விடயமும் முக்கியமானதாகும். விருந்தினர்களின் அனுபவத்திற்கும், பணிக்குழுவின் நலனுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் பணிச்சூழலை உருவாக்குவதுதான் Granbell நிறுவனத்தின் மையத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அம்சமாக காணப்படுகின்றது.” என்றார்.

Belluna Lanka இலங்கையில் தனது தடத்தை விரிவுபடுத்தி வரும் நிலையில், இந்த தலைமைத்துவ முன்னேற்றம் என்பது ஒரு தொடர்ச்சியாகும். இது, உள்ளூர்த் தலைமைத்துவத்தை வளர்ப்பதற்கான அர்ப்பணிப்பையும், ஈடுகொடுக்கும் திறன் கொண்ட குழுக்களை உருவாக்குவதற்கான முயற்சியையும், நீண்டகால வளர்ச்சிக்கான அடித்தளங்களை அமைப்பதையும் காண்பிக்கிறது. Belluna நிறுவனத்தில் தலைமைத்துவம் என்பது வெறுமனே ஒரு நியமனத்தை வழங்குவது மாத்திரமல்ல. தொடர்ச்சியான செயற்பாடு, அனுபவங்கள் மற்றும் ஒரு கூட்டு நோக்கத்தின் மூலம் மேம்படுத்தப்படுவதையே இந்த நியமனம் வலியுறுத்துகிறது. ஷெஹானின் வரலாறானது, Belluna Lanka தனது எதிர்காலத்தை எவ்வாறு வடிவமைக்கிறது என்பதை பிரதிபலிக்கும் ஒரு பரந்த பகுதியின் ஒரு அங்கமாகும். இது மக்களில் முதலீடு செய்தல், முதலில் உள்ளிருந்து வெளி நோக்கி வளர்ச்சியை ஏற்படுத்துவது ஆகியவற்றில் தங்கியுள்ளது.

Photo Caption – Granbell Hotel Colombo நிறுவனத்தின் புதிதாக நியமிக்கப்பட்ட பொது முகாமையாளர் ஷெஹான் சப்ராஸ்

Share

You may also like...