BYD இன் மேம்பட்ட மின்கலம் மற்றும் இன்வெர்ட்டர் தீர்வுகள் மூலம் இலங்கையை வலுவூட்டும் Hayleys Solar

இலங்கையின் முன்னணியிலுள்ள சூரியசக்தி வழங்குநரான Hayleys Solar, உலகளாவிய புதுப்பிக்கத்தக்க வலுசக்தி பாதுகாப்புத் துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் BYD உடன் இணைந்து இலங்கைச் சந்தையில் அதிநவீன வலுசக்தி சேமிப்பு மற்றும் இன்வெர்ட்டர் தீர்வுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இது நாட்டின் வலுசக்தி பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்தில் ஒரு முக்கிய படியைக் குறிக்கிறது.

BYD Energy Systems உடனான இந்த ஒத்துழைப்பானது, LV 5.0, LV 5.0 Plus, Battery-Box Premium HVS, Battery-Max LiteIn, Solar Hybrid Inverters உள்ளிட்ட BYD இன் மிகவும் மேம்பட்ட வலுசக்தி தொழில்நுட்பங்களை இலங்கையில் வெளியிட வழிவகுத்துள்ளது. வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களை திறனாகவும், அளவிடக்கூடிய மற்றும் அறிவார்ந்த தீர்வுகளுடனும், அவற்றின் வலுசக்தி பயன்பாட்டை மேம்படுத்தவும் இந்த தொகுதிகள் உதவுகின்றன.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட தயாரிப்பு வரிசையில் பின்வருவன அடங்குகின்றன:

  • LV 5.0 – அதிக செயல்திறன் மற்றும் பாதுகாப்புடன் வீட்டு பயன்பாட்டிற்கு ஏற்ற ஒரு சிறிய மற்றும் குறைந்த மின்னழுத்த மின்கல கட்டமைப்பு.
  • LV 5.0 Plus – இது அதிக வெளியிடும் விகிதம் மற்றும் வெப்பத்திற்கு ஈடுகொடுக்கக் கூடிய வலுவான செயல்திறன் கொண்ட மேம்படுத்தப்பட்ட பதிப்பாகம். அதிக கேள்வி கொண்ட ஹைபிரிட் வலுசக்தி கட்டமைப்புகளுக்கு ஏற்றது.
  • Battery-Box Premium HVS – இது 38.4 kWh வரை விரிவாக்கக்கூடிய திறன் கொண்ட மேம்பட்ட குடியிருப்பு மற்றும் வணிக பயன்பாட்டு உபகரணங்களுக்கான உயர் மின்னழுத்தம் கொண்ட, அளவிடக்கூடிய வலுவான LFP மின்கலத்தைக்  கொண்ட மின்சார சேமிப்பு தீர்வாகும்.
  • Battery-Max LiteIn – இது உச்சபட்ச செயல்திறன் மற்றும் நெகிழ்வுத்தன்மைக்காக வடிவமைக்கப்பட்ட உயர் மின்னழுத்தம் கொண்ட வணிக மின்கலத் தீர்வாகும். இது 30kWh முதல் 2.64MWh வரை அளவிடப்படக்கூடிய திறன் கொண்டது. இது 1C வேகமான சார்ஜிங்/டிஸ்சார்ஜிங் மற்றும் 100% Depth of Discharge (DoD) வசதிகளை ஆதரிக்கிறது. இது அதிக கேள்வி கொண்ட தொழில்துறை மற்றும் வணிக வலுசக்தி சேமிப்புத் தேவைகளுக்கு ஏற்றதாக அமைகிறது.
  • Solar Hybrid Inverter – அறிவார்ந்த மையமாக செயற்படும் இது, வலுசக்தி கட்டமைப்பை ஒன்றாக இணைக்கிறது. இது ஸ்மார்ட் லோட் கண்ட்ரோல் மற்றும் தொலைதூரத்திலிருந்தான கண்காணிப்பு திறன்களுடன் grid-tied, off-grid மற்றும் hybrid பயன்பாடுகளை ஆதரிக்கிறது.

அதிகரித்து வரும் வலுசக்தி தேவைகள் மற்றும் மாற்றீட்டு மின்சக்தி, வலுசக்தி பாதுகாப்பு மற்றும் நீண்டகால நிலைபேறான தன்மைக்கான அதிகரித்து வரும் கேள்விகளுக்கு மத்தியில் இந்த தயாரிப்புகளின் அறிமுகமானது, இலங்கைக்கு ஒரு முக்கியமான நேரத்தில் அமைந்துள்ளது. உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட BYD இன் தொழில்நுட்பம் மற்றும் தூய்மையான, புத்திசாலித்தனமான வலுசக்தி உட்கட்டமைப்பிற்கு மாறுவதற்கு ஆதரவளிக்கும்.

இது பற்றி BYD Energy Storage நிறுவனத்தின் சிரேஷ்ட பணிப்பாளர் Karson Xiao தெரிவிக்கையில், “எமது மேம்பட்ட வலுசக்தி சேமிப்பு மற்றும் இன்வெர்ட்டர் தீர்வுகளை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக Hayleys Solar உடன் இணைவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். BYD ஆகிய நாம், உலகளாவிய ரீதியில் தூய்மையான, நம்பகமான, அறிவார்ந்த வலுசக்தி தொழில்நுட்பங்களை வழங்குவதே எமது நோக்கமாகும். இந்த கூட்டாண்மையானது உலகளாவிய நிலைபேறான தன்மையை மேம்படுத்துவதற்கும் புதுப்பிக்கத்தக்க வலுசக்திக்கு மாறுவதற்கு சமூகங்களுக்கு ஆதரவளிப்பதற்குமான எமது உறுதிப்பாட்டுடன் ஒத்துப்போகிறது.” என்றார்.

கொழும்பு, கிங்ஸ்பெரி ஹோட்டலில் இடம்பெற்ற இந்த உத்தியோகபூர்வ வெளியீட்டு விழாவில், Hayleys Fentons Limited முகாமைத்துவ பணிப்பாளர் ஹசித் பிரேமதிலக தெரிவிக்கையில், “நிலைபேறான கண்டுபிடிப்புகளை முன்னெடுக்கும் பாரம்பரியம் கொண்ட ஒரு நிறுவனம் எனும் வகையில், எதிர்காலத்திற்குத் தயார் நிலையிலுள்ள வலுசக்தி தீர்வுகளை இலங்கைக்கு அறிமுகப்படுத்த BYD உடன் கூட்டாண்மை ஏற்படுத்துவதில் நாம் பெருமிதம் கொள்கிறோம். இந்த உற்பத்திகளின் அறிமுகமானது Hayleys Solar இற்கு மாத்திரமல்லாது, நாட்டின் வலுசக்திக்கு ஈடுகொடுத்தல் மற்றும் அது தொடர்பான சுதந்திரத்திற்கான பயணத்தில் ஒரு முக்கிய மைல்கலாகும்.” என்றார்.

Hayleys Solar நிறுவனத்தின் பணிப்பாளரும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ரொஷேன் பெரேரா தெரிவிக்கையில், “இந்த மேம்பட்ட தொழில்நுட்பங்களை உள்ளூர் சந்தைக்கு அறிமுகப்படுத்துவதில் நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். உலகளாவிய  ரீதியிலான 100 இற்கும் மேற்பட்ட நாடுகளில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான நிறுவல்களில் பூச்சிய தீ விபத்துக்களைப் பதிவு செய்துள்ள BYD இன் சிறந்த மின்கலங்கள் மற்றும் இன்வெர்ட்டர் தீர்வுகளின் நீடித்த பாரம்பரியத்தை Hayleys Solar தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்ல தயாராக உள்ளது.

உலகின் மிகவும் மேம்பட்ட வலுசக்தி சேமிப்பு கட்டமைப்புகள் மற்றும் இன்வெர்ட்டர்களை இலங்கை நுகர்வோர் தற்போது பெற்றுக் கொள்ள முடியும். இது Hayleys Solar இன் விரிவான நிபுணத்துவம் மற்றும் சிறந்த சேவை மூலம் ஆதரவளிக்கப்படுகிறது. BYD இன் மின்கலம் மற்றும் இன்வெர்ட்டர் தீர்வுகள் தற்போது கிடைக்கப்பெறுவதால், இலங்கை நுகர்வோர், தேசிய மின்கட்டமைப்பில் சாந்திருப்பதை குறைத்துக் கொள்ளவும், அதிகரித்த வலுசக்தி சேமிப்பு மற்றும் உள்ளூர் சந்தையின் அதிகரித்து வரும் கேள்விகளுக்கு ஏற்ப பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஸ்மார்ட் வலுசக்தி முகாமைத்துவத்தையும் அனுபவிக்கலாம். இவை அனைத்தும், Hayleys Solar இன் நம்பகமான நிபுணத்துவம் மற்றும் சிறந்த சேவையால் ஆதரிக்கப்படுகிறது.

நாவலவில் உள்ள Hayleys Fentons அனுபவ மையம் மற்றும் மாத்தறை, யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, கண்டி ஆகிய இடங்களில் உள்ள Hayleys Solar அனுபவ மையங்களில் இத்தயாரிப்புகளை நேரடியாக பார்த்து ஆராய்ந்து வாடிக்கையாளர்கள் அதன் திறனை சோதித்து பெற்றுக் கொள்ள முடியும்.

இலவச ஆலோசனை அல்லது மேலதிக தகவல்களுக்கு, 011 210 2102 எனும் இலக்கத்தின் ஊடாக Hayleys Solar நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது www www.hayleyssolar.com இணையத் தளத்தைப் பார்வையிடலாம்.

Hayleys Solar பற்றி

Hayleys Fentons Limited இன் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி பிரிவான Hayleys Solar, குடியிருப்புகள், வணிக மற்றும் தொழில்துறை சந்தைப் பிரிவுகளுக்கான சோலார் PV நிறுவல்களில் முக்கியமாக கவனம் செலுத்துகிறது. அத்துடன் பயன்பாடு அளவிலான திட்டங்கள் மூலம் நாட்டில் நிலைபேறான வலுசக்தி வளங்களின் அதிக பயன்பாட்டை செயற்படுத்துகிறது. நாடு முழுவதும் 300 MWp இற்கும் அதிகமான சூரியமின்சக்தி நிறுவல்களை Hayleys Solar நிறைவு செய்து நடைமுறைப்படுத்தியுள்ளது. இது இலங்கையில் பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமானத்தில் (EPC) அதன் தலைமைத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது.

BYD பற்றி

புதுப்பிக்கத்தக்க வலுசக்தி தீர்வுகளில் உலகளாவிய ரீதியில் முன்னணி நிறுவனமாக BYD விளங்குகின்றது. அதன் மேம்பட்ட மின்கல தொழில்நுட்பங்கள், மின்சார வாகனங்கள் மற்றும் பசுமை வலுசக்தி தயாரிப்புகளுக்கு பெயர் பெற்றவையாகும். புத்தாக்கம் மற்றும் நிலைபேறான தன்மையில் வலுவான கவனம் செலுத்தி, ஒரு தூய்மையான மற்றும் நிலைபேறான எதிர்காலத்தை உருவாக்க BYD உறுதிபூண்டுள்ளது.

Share

You may also like...