கற்பிப்பவர்களை AI சகாப்தத்தை நோக்கி மேம்படுத்தும் EWIS TechEdu 2025 உச்சி மாநாடு

இலங்கை, கொழும்பு – 2025 மார்ச் 11 –“கல்வியில் AI ஒரு அங்கமாக இருக்குமா என்பதை ஒரு கேள்வியாகவே கேட்க முடியாது. நாம் எவ்வாறு அதை தழுவிக் கொள்வது என்பதே கேள்வியாகும்.” இந்த சக்திவாய்ந்த கூற்றுக்கு ஏற்றாற்போல் TechEdu 2025 Summit 2025 உச்சி மாநாடு கல்வியின் எதிர்காலம் குறித்த ஒரு புரட்சிகரமான விவாதத்திற்கு களம் ஏற்படுத்தியுள்ளது. கொழும்பில் உள்ள ஷங்ரி-லா ஹோட்டலின், லோட்டஸ் மண்டபத்தில் நடைபெற்ற இந்த உச்சி மாநாடு, கல்வியாளர்கள், நிர்வாகிகள் மற்றும் பாடசாலைத் தலைவர்களை ஒன்றிணைத்து, செயற்கை நுண்ணறிவானது (AI) கல்வியை எவ்வாறு மாற்றுகிறது என்பதையும், பாடசாலைகள் இந்த புதிய யதார்த்தத்திற்கு எவ்வாறு தம்மை மாற்றியமைக்க முடியும் என்பதையும் ஆராய்கிறது.
“இந்த பூதம் தற்போது ஜாடிக்கு வெளியே வந்துவிட்டது. அது தற்போது வெளிப்பட்டு விட்டது. எமது குழந்தைகள் அதைப் பயன்படுத்துகின்றார்கள். அவர்கள் தற்போது அது தொடர்பில் ஆழமாக இணைக்கப்பட்டுள்ளனர். எனவே தற்போது அவர்கள் அதை திறம்பட பயன்படுத்துகிறார்களா என்பதை உறுதி செய்ய நாம் கடமைப்பட்டுள்ளோம்.” இந்த கூற்றானது, உச்சிமாநாடு முழுவதும் எதிரொலித்ததோடு, கற்றல் மற்றும் கற்பித்தல் அனுபவங்களை மேம்படுத்த AI ஐ தழுவிக் கொள்வதன் அவசரத்தை இது எடுத்துக் காட்டுகிறது.

39 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள டிஜிட்டலுக்கான மாற்றத்தை ஏற்படுத்துவதில் முன்னோடியாக திகழ்ந்து வரும் E-W Information Systems Ltd (EWIS) நிறுவனம், TechEdu 2025 உச்சி மாநாட்டின் மூலம் இலங்கையில் AI-சார்ந்த கற்றலுக்கான தனது உறுதிப்பாட்டை மேலும் மேம்படுத்துகின்றது. மஹிந்தோதய திட்டத்தின் கீழ் 800 பாடசாலைகளில் IT ஆய்வகங்களை வெற்றிகரமாக நிறுவியமை மற்றும் டிஜிட்டல் தழுவல் குறித்து, கற்பிப்பவர்களுக்கு பயிற்சி அளிக்க நாடு முழுவதும் 22 தொழில்நுட்ப மன்றங்களை செயல்படுத்தியமை உள்ளிட்டவற்றின் அடிப்படையில், EWIS பாரம்பரிய கற்றலுக்கும் நவீன டிஜிட்டல் முன்னேற்றங்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்து, நாட்டின் கல்வியின் பரிணாம வளர்ச்சியில் அதன் பங்கை உறுதிப்படுத்துகிறது.

TechEdu 2025 உச்சி மாநாட்டில் சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற கல்வி தொழில்நுட்ப வல்லுநர்கள் கலந்து கொண்டனர். முக்கியமாக கல்வி கண்டுபிடிப்புகளில் முன்னணி அதிகாரியான பேராசிரியர் Brenton Burchmore, இம்மாநாட்டில் நவீன கற்பித்தலில் தொழில்நுட்பத்தின் வளர்ந்து வரும் பங்கு குறித்த நடைமுறை நுண்ணறிவுகளை வழங்கினார். AI சார்ந்த கற்றல் மற்றும் கற்பித்தலில் நிபுணரான டாக்டர் Rani Burchmore, AI சார்ந்த ஒரு கற்பிப்பவர் எனும் வகையில் தனது பயணத்தைப் பகிர்ந்து கொண்டதோடு, கற்பித்தலில் தடையற்ற AI ஒருங்கிணைப்புக்கான உத்திகளை வழங்கினார்.
கல்வியில் AI இன் மாற்றத்தக்க திறனை உச்சிமாநாட்டின் கலந்துரையாடல்கள் எடுத்துக் காட்டின. தனிப்பட்ட மாணவர் தேவைகளுக்கு ஏற்ப பாடத் திட்டங்களை வடிவமைக்கும் AI மூலமான கருவிகள் மூலம் தனிப்பயனாக்கப்பட்ட கற்றல் அம்சம், ஆசிரியர் பணிச்சுமையைக் குறைக்கும் தன்னியக்க நிர்வாகப் பணிகள், மாணவர் முன்னேற்றத்தைக் கண்காணித்து கல்வியாளர்களால் தகவலுடன் கூடிய முடிவுகளை எடுக்க உதவும் தரவு சார்ந்த நுண்ணறிவுகள் மற்றும் gamification (விளையாட்டு இணைப்பு), virtual reality (மெய்நிகர் யதார்த்தம்) மற்றும் interactive learning (பங்குபற்றலுடனான கற்றல்) போன்ற தொழில்நுட்பங்கள் மூலம் மாணவர் ஈடுபாட்டை மேம்படுத்துதல் போன்ற முக்கிய நன்மைகள் இங்கு வலியுறுத்தப்பட்டன. TechEdu 2025 வெறுமனே எண்ணக்கருக்கள் அல்ல, அது நிஜ உலக பயன்பாடுகளைப் பற்றியதாகும். இங்கு கற்பிப்பவர்கள் தமது வகுப்பறைகளில் AI ஐ திறம்பட செயல்படுத்துவதற்கான நடைமுறை ரீதியான, செயற்பாட்டு ரீதியான தெளிவுகளை பெற்றனர்.
EWIS நிறுவனத்தின் தலைவரும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான. சஞ்சீவ விக்ரமநாயக்க இது பற்றித் தெரிவிக்கையில், “EWIS ஆகிய நாம், AI ஒரு தடையாக அன்றி, கல்வியாளர்களுக்கான ஒரு பாலமாக இருக்க வேண்டும் என விரும்புகிறோம். கற்பிக்கும் மற்றும் கற்றுக்கொள்ளும் முறையை மாற்றும் சக்தியை AI கொண்டுள்ளது. ஆனால் கல்வியை கற்பிப்பவர்கள் இதை சுமையாக அன்றி, வலுவூட்டப்படுகின்ற ஒன்றாக உணர வேண்டியது அவசியமாகும். TechEdu 2025 போன்ற முயற்சிகள் மூலம், இலங்கையின் கல்வித் துறையானது AI இனால் இயக்கப்படும் உலகில் மேம்பட்டு வளர்வதற்கான சரியான கருவிகள் மற்றும் அறிவை பெறுகின்றது என்பதை நாம் உறுதி செய்கிறோம்.” என்றார்.
இலங்கையின் கல்வித் துறையில் மாற்றத்திற்கான ஒரு ஊக்கியாக செயற்படுவதில் EWIS கொண்டுள்ள பங்கை TechEdu 2025 உச்சி மாநாடு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. கற்றலின் எதிர்காலத்தை AI தொடர்ச்சியாக மீள் வரையறை செய்து வருவதால், கற்பிப்பவர்களை மேம்படுத்துவதற்கும், ஸ்மார்ட்டான, கற்றல் சூழலுக்கான தழுவலை ஏற்படுத்துவதற்காக AI ஐப் பயன்படுத்த அவர்கள் நன்கு தயாராக இருப்பதை உறுதி செய்யவும் EWIS நிறுவனம் மிகவும் அர்ப்பணிப்புடன் உள்ளது.
Recent Comments