சுகாதாரப் பராமரிப்புக்கான விசேடத்துவ மையமான தேசிய வைத்தியசாலை, Medicare 2025 – சர்வதேச சுகாதாரப் பராமரிப்பு கண்காட்சியின் மூலோபாய பங்காளராக கைகோர்க்கிறது

இலங்கையின் மிகவும் பிரபலமான சுகாதார நிறுவனமும், சுகாதாரப் பராமரிப்புக்கான விசேடத்துவ மையமுமான, ஒப்பிட முடியாத பராமரிப்பு சேவைகளை வழங்குவதில் அயராத முயற்சிகளுக்குப் பெயர் பெற்ற இலங்கை தேசிய வைத்தியசாலை, Medicare 2025 (மெடிகேர் 2025) கண்காட்சியுடன் ஒரு மூலோபாய பங்காளராக கைகோர்த்துள்ளது. “මෙහෙවර අභිමන් – Mission Pride” (பணியின் பெருமை) எனும் பெருநிறுவன சமூகப் பொறுப்பு (CSR) திட்டத்தின் கீழ் இக்கண்காட்சி இடம்பெறுகின்றது. கடந்த சில வருடங்களாக சிறப்பாக பேணப்பட்டு வரும் இந்த தொடர்ச்சியான கூட்டாண்மையானது, அனைவருக்கும் நிலைபேறான மற்றும் பரிவுடனான பராமரிப்பை வழங்குவதை ஊக்குவிக்கும் அதே வேளையில், இலங்கையில் சுகாதாரப் பராமரிப்பு வழங்கலின் தரத்தை மேலும் உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இலங்கை தேசிய வைத்தியசாலையானது, தேசிய சுகாதாரப் பராமரிப்பு கண்காட்சியின் தொடக்கத்திலிருந்தே  ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. வைத்தியசாலையின் சிறந்த பங்களிப்புகளை கௌரவிக்கும் வகையில், அதன் பெருநிறுவன சமூகப் பொறுப்பு (CSR) முயற்சியின் ஒரு பகுதியாக, வைத்தியசாலைக்கு அர்ப்பணிப்பு மிக்க இடத்தை இக்கண்காட்சி வழங்குகின்றது.

மெடிகேர் சர்வதேச சுகாதார கண்காட்சியின் 14ஆவது பதிப்பானது, பெப்ரவரி 28 முதல் மார்ச் 02 வரை கொழும்பில் உள்ள BMICH இல் இடம்பெற உள்ளது. இந்த மதிப்புமிக்க நிகழ்வானது, மருத்துவத் தொழில்நுட்பம், சுகாதார சேவைகள் மற்றும் சுகவாழ்வு தொடர்பான தீர்வுகளில் அடைந்துள்ள முன்னேற்றங்களை வெளிப்படுத்தும் வகையில், இத்தொழில்துறையில் உள்ள தலைவர்கள், சுகாதார வல்லுநர்கள் மற்றும் நிறுவனங்களை ஒன்றிணைக்கவுள்ளது. இங்கு இடம்பெறவுள்ள Asia Wellness Forum ஆனது, Aitken Spence Conventions & Exhibitions உடன் இணைந்து “Cure Sri Lanka” எனும் கருப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் முதன்மையான சுகாதார நிறுவனம் எனும் வகையில், இலங்கை தேசிய வைத்தியசாலையானது (NHSL), பாரிய சவாலான சூழ்நிலைகளுக்கு மத்தியில், தினசரி ஆயிரக்கணக்கானோருக்கு பரந்த பராமரிப்பு சேவைகளை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மெடிகேர் 2025 உடனான அதன் கூட்டாண்மை மூலம், சுகாதார சேவை வழங்கலில் அதன் முக்கிய சாதனைகளை வெளிப்படுத்துகின்றதும் நாட்டின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்குமான அதன் தொடர்ச்சியான முயற்சிகள் குறித்த மதிப்புமிக்க நுண்ணறிவுகளை இக்கண்காட்சியில் வழங்கவுள்ளது.

இவ்வருடம், தேசிய வைத்தியசாலையின் முக்கிய கவனமானது விபத்துகளுக்கு சிகிச்சையளிப்பதிலும் அதனை தடுப்பதிலும் அமைகிறது. இது விபத்துகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பயனுள்ள பராமரிப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல், விபத்துகளைத் தடுப்பதற்கும் அவ்வாறான நிகழ்வுகளைக் குறைப்பதற்குமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதற்கான அவர்களது உறுதிப்பாட்டை எடுத்துக் காட்டுகிறது. இந்த முயற்சியின் மூலம், பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், தனிநபர்கள் மற்றும் சமூகங்களிடையே விபத்துகளின் தாக்கத்தைக் குறைப்பதற்கான தீர்வுகளை வழங்குவதையும் தேசிய வைத்தியசாலை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Mission Pride திட்டமானது, அவர்களது கடின உழைப்பை விரிவுபடுத்தி, அவர்கள் சமூகத்துடன் இணைவதற்கும், அறிவைப் பகிர்ந்து கொள்வதற்கும், ஆரோக்கியமான இலங்கையை நோக்கி செல்வதற்கான கூட்டு நடவடிக்கையை ஊக்குவிப்பதற்கும் ஒரு தளத்தை வழங்குகிறது. ஒத்துழைப்பு மற்றும் அங்கீகாரத்திற்கான வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் சுகாதாரப் பாதுகாப்புத் துறையில் பாராட்டப்படாத ஹீரோக்களை கௌரவிப்பதை Mission Pride நோக்கமாகக் கொண்டுள்ளது. Medicare 2025 உடனான இந்த கூட்டாண்மையானது, முழுமையான சுகவாழ்வை மேம்படுத்துவது மற்றும் அனைவரையும் உள்ளீர்த்த சுகாதார சேவைகளை உறுதி செய்வது எனும் பகிரப்பட்ட தூரநோக்கை பிரதிபலிக்கிறது. Medicare 2025 உடன் இலங்கையின் சுகாதார சம்பியனான தேசிய வைத்தியசாலை இணைந்துள்ளதால், அவை இரண்டும் ஆரோக்கியமான மற்றும் மிகவும் நெகிழ்வான எதிர்காலத்திற்கான தங்கள் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை மீண்டுமொரு முறை உறுதிப்படுத்துகின்றன. அவர்களது அர்ப்பணிப்பை கொண்டாடுவதோடு, ஒரு செழிப்பான, சிறந்த பராமரிப்பைக் கொண்ட தேசத்தின் தொலைநோக்கை அடைவதற்காக ஒன்றிணைந்து செயற்படுவோம்.

Share

You may also like...