இலங்கையின் சுகாதாரப் பராமரிப்புத் துறையை மாற்றியமைத்து 20 வருட நிறைவை கொண்டாடும் பிரீமியம் இன்டர்நேஷனல்
இலங்கையின் ஒரேயொரு தயார்நிலை சுகாதாரப் பராமரிப்பு தீர்வுகள் வழங்குநரான பிரீமியம் இன்டர்நேஷனல், சமீபத்தில் சினமன் லைஃப் ஹோட்டலில் அதன் 20ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. சிரேஷ்ட தலைமை, ஊழியர்கள் மற்றும் பங்குதாரர்கள் முன்னிலையில் இக்கொண்டாட்டம் இடம்பெற்றது. கடந்த இரண்டு தசாப்தங்களாக, சுகாதாரப் பராமரிப்புத் துறையை மீள்வரையறை செய்து, புத்தாக்கம், மீள்தன்மை மற்றும் ஒப்பிடமுடியாத நிபுணத்துவத்தை இணைக்கும் ஒருங்கிணைந்த தீர்வுகளை வழங்குவதில் ஒரு முன்னோடியாக நிறுவனம் தன்னை வெற்றிகரமாக நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.
இரண்டு தசாப்த கால நிறுவனத்தின் புகழ்பெற்ற பயணம் தொடர்பில், நிறுவனத்தின் தலைவரும் அதன் நிர்வாக பணிப்பாளருமான பிரசாந்த குலரத்ன கருத்து வெளியிடுகையில், “இலங்கையில் சுகாதாரப் பராமரிப்புத் துறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் தொலைநோக்குப் பார்வையுடன் பிரீமியம் இன்டர்நேஷனல் நிறுவப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்ட, பல்வேறு சுகாதார நெருக்கடிகளுக்கு நாம் பதிலளித்துள்ளோம். அத்துடன் நாட்டில் பராமரிப்பு மற்றும் உட்கட்டமைப்பின் தரங்களை மீள்வரையறை செய்த முன்னோடித் திட்டங்களை நாம் செயற்படுத்தியுள்ளோம். நாம் மக்கள் மத்தியில் பெற்றுள்ள நம்பிக்கை, நாம் செயற்படுத்திய புத்தாக்கம் மற்றும் நாம் காப்பாற்றிய உயிர்கள் தொடர்பில் நாம் பெருமையடைகிறோம்.” என்றார்.
நாட்டின் சுகாதாரப் பராமரிப்பு கட்டமைப்பை அதல பாதாளத்திற்குள் தள்ளிய சுனாமிப் பேரழிவுக்கு மத்தியில் பிரீமியம் இன்டர்நேஷனல் 2004 இல் தனது பயணத்தை ஆரம்பித்தது. மருத்துவமனைகள் அழிக்கப்பட்ட நிலையில், சர்வதேச நன்கொடையாளர்களிடமிருந்து சுகாதார உபகரணங்கள் வந்தடைந்த போதிலும், உரிய உட்கட்டமைப்புகள் இல்லாமை காரணமாக அவற்றை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. நன்கொடையாளர்களுக்கும் உள்ளூர் சுகாதார வசதிகளுக்கும் இடையே ஒரு முக்கியமான பொறியியல் பாலமாக பிரீமியம் இன்டர்நேஷனல் நுழைந்து, சுகாதார உபகரணங்களை வழங்குவதைத் தாண்டி, அத்தியாவசிய உட்கட்டமைப்பை அது மீண்டும் கட்டியெழுப்பியது. அந்த வகையில், தயார்நிலை உற்பத்தி சுகாதாரத் தீர்வுகளில் சந்தைத் தலைவராக நிறுவனத்தின் பங்கின் தொடக்கத்தை இது எடுத்துக் கூறியது.
2007 ஆம் ஆண்டில், பிரீமியம் இன்டர்நேஷனல் நாடு தழுவிய மருத்துவ தொழில்நுட்ப மேம்படுத்தல் திட்டத்தை முன்னெடுத்தது. இது இலங்கை முழுவதும் 24 வைத்தியசாலைகளை நவீனமயமாக்கியது. ஒஸ்ட்ரியாவால் நிதியளிக்கப்பட்ட இந்த முக்கிய திட்டத்தில், CT scanners, digital X-rays, video endoscopy systems, ventilators மற்றும் அவசர emergency backup power generators போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி, மேம்பட்ட சுகாதார சேவைகளுக்கு அடித்தளம் அமைத்தது. ஐந்து வருடங்களுக்குப் பின், 2012 ஆம் ஆண்டில், இலங்கை தேசிய வைத்தியசாலையில் உள்ள catheterisation labs இனை நவீனமயமாக்கியதன் மூலம், அதிநவீன cath labs ஆய்வகங்கள் மற்றும் echo-Doppler பிரிவுகாளக அதனை மாற்றியமைத்ததன் மூலம், இலங்கையில் இருதய சிகிச்சையின் தரத்தை நிறுவனம் உயர்த்தியது.
2014 ஆம் ஆண்டில் பிரீமியத்தின் சிறந்த தாக்கமானது, மேலும் நீடிக்கும் வகையில் நாட்டின் இரத்த வங்கிகளை சென்றடைந்தது. இந்த பிரிவுகளின் பங்கை மாற்றியமைக்க ஒரு மைல்கல் திட்டத்தை நிறுவனம் செயற்படுத்தியது. 19 பிராந்திய மையங்களை நிறுவி, 96 இரத்த வங்கிகளை அதிநவீன தொழில்நுட்பத்துடன் மாற்றியமைத்ததன் மூலம், 25 மில்லியன் யூரோ நிதி கொண்ட இந்த திட்டம் இரத்த சேமிப்பு மற்றும் இரத்தமாற்ற தரங்களை உயர்த்தியதன் மூலம், உயிர்களைக் காப்பாற்றுவதில் அதிக செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்தது.
பிரீமியம் இன்டர்நேஷனலிடம் காணப்படும் ஒரு முக்கிய வேறுபாடு யாதெனில், அதன் புத்தாக்கம் மற்றும் உள்ளூர் திறன் மேம்பாட்டிற்கான அதன் அர்ப்பணிப்பு ஆகும். இதைப் பிரதிபலிக்கும் வகையில், 2012 ஆம் ஆண்டில், மொரட்டுவை பல்கலைக்கழகத்துடன் (UoM) கூட்டுச் சேர்ந்து இலங்கையின் முதலாவது உயிரியல் வைத்திய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகத்தை (Biomedical research and development laboratory) நிறுவனம் நிறுவியது. இது சுகாதார தொழில்நுட்பத்தில் உள்ளூர் நிபுணத்துவத்தை வளர்க்கும் அதே வேளையில் நாட்டின் முதலாவது உயிரியல் வைத்திய பொறியியல் பட்டப்படிப்புத் திட்டத்திற்கு வழி வகுத்தது. கொவிட்-19 தொற்றுநோய் காலத்தில், modular ICU பிரிவை வடிவமைத்து நன்கொடை அளித்ததன் மூலம் அதன் சந்தைத் தலைமையையும் புத்தாக்கத்தையும் பிரீமியம் மீண்டும் நிரூபித்தது. 24 மணி நேரத்திற்குள் போக்குவரத்து செய்யக்கூடியதாகவும் செயற்படக்கூடியதாகவும் இருந்த இந்த அலகானது, நெருக்கடியின் போது ஒரு முக்கியமான உயிர்நாடியாக செயற்பட்டதோடு, உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் அங்கீகாரத்தைப் பெற்றது.
உட்கட்டமைப்பு மேம்பாட்டில் நிறுவனத்தின் சாதனைகள் ஒவ்வொன்றும் ஒப்பிட முடியாத அளவில் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. தெற்காசியாவின் மிகப்பெரிய மகப்பேற்று மருத்துவமனையான ஜேர்மன்-இலங்கை நட்புறவு பெண்களுக்கான மருத்துவமனையை முழுமைப்படுத்துவதில் பிரீமியம் முக்கிய பங்கு வகித்தது. கட்டுமான தாமதங்களும் சவால்களும் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக திட்டத்தை முடக்கிய நிலையில், அதை வெறுமனே 24 மாதங்களுக்குள் நிறைவு செய்ய பிரீமியம் முன்வந்தது. கட்டுமானத்திற்கு அப்பால், மருத்துவமனையின் மருத்துவ, ஆய்வக மற்றும் தொழில்துறை உபகரணங்களில் 65% இற்கும் அதிகமானவற்றை நிறுவனம் வழங்கி அதனை செயற்படுத்தியது. CSSD, சலவை மற்றும் சமையலறை உள்ளிட்ட மைய வசதிகள், மிகவும் மேம்பட்ட நவீன தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்டிருந்தன. இது அம்மருத்துவமனையை இலங்கையில் நவீன சுகாதார உட்கட்டமைப்பிற்கான ஒரு அளவுகோலாக மாற்றியது.
உலகளாவிய ரீதியில் புகழ்பெற்ற சுகாதாரப் பராமரிப்பு வர்த்தகநாமங்களுடனான பிரத்தியேக கூட்டாண்மைகள் மூலம், தொடர்ச்சியாக இலங்கைக்கு புரட்சிகரமான தொழில்நுட்பங்களை பிரீமியம் இன்டர்நேஷனல் அறிமுகப்படுத்தி வருகிறது. Sakura histopathology தொகுதிகள் நாட்டில் தற்போது 80% புற்றுநோய் கண்டறிதல் மற்றும் நோயறிதலை செயற்படுத்துகின்றன. அதே நேரத்தில் Fujifilm மற்றும் Erbe ஆகியன சிகிச்சை மற்றும் நோயறிதல் நடைமுறைகளுக்கு மிகவும் மேம்பட்ட எண்டோஸ்கோபி தளங்களை வழங்குகின்றன. Fresenius Kabi, Hettich, Werfen ஆகிய ஜேர்மனி மற்றும் அமெரிக்க தொழில்நுட்பங்கள் மூலம் இரத்த சேகரிப்பு மற்றும் செயலாக்கம் புரட்சிகரமானதாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன. சேகரிக்கப்பட்ட குருதியில் 95% இற்கும் அதிகமானவை தினமும் செயலாக்கப்படுவதை இது உறுதி செய்கிறது.
அது மாத்திரமன்றி, நாட்டில் 300 இற்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை நிலையங்கள் Shinva நிறுவனத்தின் அதிநவீன தொற்றுக் கட்டுப்பாட்டு தீர்வுகளால் இயங்குகின்றன. இவை நாட்டின் முக்கியமான சுகாதாரப் பாதுகாப்பு தேவைகளைப் பூர்த்தி செய்ய 24 மணி நேரமும் செயற்படுகின்றன.
பிரீமியம் இன்டர்நேஷனலின் பங்களிப்புகள் மருந்துத் துறைக்கு விரிவடைவதோடு, அது உள்ளூர் உற்பத்தியில் முன்னேற்றங்களை ஏற்படுத்துகின்றது. ஆரம்பத்தில் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திற்கு (SPMC) தொழில்நுட்ங்கள் மூலம் ஆதரவு வழங்கிய நிறுவனம், பின்னர் LAUGFS Holdings உடன் இணைந்து இலங்கையின் மிகவும் மேம்பட்ட தனியார் துறை Aseptic pharmaceutical plant தொழிற்சாலையை உருவாக்கும் சவாலை ஏற்றுக்கொண்டது. 2023 ஆம் ஆண்டில், George Steuart உடன் இணைந்து “Seregen” எனும் தனது சொந்த மருந்து உற்பத்தி தளத்தை பிரீமியம் நிறுவனம் ஆரம்பித்தது. இது இலங்கையில் அதிகளவான மருந்து உற்பத்தி சுதந்திரத்தை ஏற்படுத்துவதை நோக்கிய ஒரு முக்கிய படியைக் குறிக்கிறது.
அந்த வகையில் பிரீமியம் இன்டர்நேஷனல் இரண்டு தசாப்த கால விசேடத்துவத்தைக் கொண்டாடும் அதே வேளையில், இலங்கையில் சுகாதாரப் பாதுகாப்பின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் தொடர்ச்சியாக உறுதியுடன் உள்ளது.
Recent Comments