2025 WEICHAI LOVOL GLOBAL PARTNERS CONFERENCE இல்இண்டு விருதுகளை வென்ற DIMO

இலங்கையில் LOVOL அறுவடை இயந்திரங்களின் ஒரேயொரு அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான DIMO நிறுவனம், பிராந்தியத்தில் LOVOL வர்த்தக நாமத்தை மேம்படுத்துவதற்கான அர்ப்பணிப்பு மற்றும் தமது நீண்டகால கூட்டாண்மைக்காகவும் அர்ப்பணிப்பு மற்றும் புத்தாக்கமான சந்தைப்படுத்துதலுக்காகவும், சமீபத்தில் சீனாவில் உள்ள LOVOL மையத்தில் இடம்பெற்ற 2025 WEICHAI LOVOL GLOBAL PARTNERS CONFERENCE இல், இரண்டு விருதுகளை வென்றுள்ளது.

இங்கு Loyal Partner  மற்றும் Outstanding Marketing Activity Planning Award ஆகிய விருதுகளை LOVOL நிறுவனம் DIMO நிறுவனத்திற்கு வழங்கியது. இந்த மாநாட்டில் 70 இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 400 இற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்த இரண்டு விருதுகளும் இலங்கையின் விவசாயத்தின் முன்னேற்றத்திற்காக DIMO நிறுவனம் ஆற்றிய பணிகளைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன.

DIMO நிறுவனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, DIMO நிறுவனத்தின் விவசாய இயந்திர விற்பனைத் திணைக்களத்தின் பிரதிப் பொது முகாமையாளர் அமில டி சில்வா மற்றும் உதவி சந்தைப்படுத்தல் முகாமையாளர் மலித் ரொட்ரிகோ ஆகியோர் இந்த விசேட நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த DIMO நிறுவனத்தின் விவசாய இயந்திர பிரிவுக்கு பொறுப்பான நிறைவேற்று பணிப்பாளர் ரஜீவ் பண்டிதகே தெரிவிக்கையில், “இந்த நாட்டில் விவசாயத்தை மேம்படுத்துவதற்காக நாம் மேற்கொண்ட முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையில் சர்வதேச மட்டத்தில் இவ்வாறான விருதுகளை வென்றெடுப்பதில் நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இலங்கை நுகர்வோரின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக சர்வதேச மட்டத்தில் மேம்பட்ட விவசாய இயந்திரங்களை இலங்கைக்கு அறிமுகப்படுத்துவதில் நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். அத்துடன், விவசாயிகளுக்கு தரமான சேவையை வழங்கவும், அவர்களின் கனவுகள் மற்றும் அபிலாஷைகளை மேம்படுத்தவும் நாம் எதிர்பார்க்கிறோம்.” என்றார்.

முதன்மையாக LOVOL ஹாவஸ்டர் அறுவடை இயந்திரங்களுக்கு, சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் சேவை முகவர்கள் மூலம் நாடு முழுவதையும் உள்ளடக்கிய விற்பனைக்குப் பிந்தைய சேவையை வழங்குவதற்கு தொடர்ச்சியாக DIMO பணியாற்றி வருவதோடு, சேவைப் பணிகளுக்குத் தேவையான உதிரிப் பாகங்களை தொடர்ச்சியாக வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளது.

DIMO நேரடியாக விவசாயிகளிடம் நெருக்கமாகச் சென்று, LOVOL ஹாவஸ்டர் அறுவடை இயந்திரங்களுக்கு இலவச பரிசோதனை நடவடிக்கைகளை நடத்தி, ஆலோசனைகளை வழங்குவதன் மூலம் அவர்களுக்குப் பெரும் உதவியாக இருந்தது. இதன் மூலம், அறுவடைக் காலம் நெருங்கும் போது தமது இயந்திரங்களின் உச்சபட்ச செயற்றிறனை உறுதி செய்யும் வாய்ப்பை DIMO விவசாய சமூகத்திற்கு வழங்கியுள்ளது. அது மாத்திரமன்றி, LOVOL ஹாவஸ்டர் அறுவடை இயந்திர உரிமையாளர்கள் மற்றும் செலுத்துனர்களை ஒன்று திரட்டி, ஹாவஸ்டர் அறுவடை இயந்திரங்களின் சரியான பயன்பாடு மற்றும் பயனுள்ள பராமரிப்பு முறைகள் பற்றி மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த உற்பத்தித்திறனை அதிகரிக்க, கடைப்பிடிக்க வேண்டிய தரமான விவசாய முறைகள் குறித்தும் அவர்களுக்குத் தெளிவூட்ட DIMO நடவடிக்கை எடுத்தது.

அத்துடன், LOVOL ஹாவஸ்டர் அறுவடை இயந்திரங்கள் மூலம் எவ்வாறு திறனாக அறுவடை செய்வது என்பது குறித்த நேரடி அனுபவத்தை விவசாயிகளுக்கு வழங்குவதன் மூலமும், பயிர்ச் செய்கை உற்பத்தித்திறனை அதிகரிக்க LOVOL ஹாவஸ்டர் அறுவடை இயந்திரங்களின் திறன்களை மேலும் மேம்படுத்துவது குறித்து அவர்களுக்கு தெளிவூட்டுவதன் மூலமும், விவசாய சமூகத்திற்கு பெரும் உதவியை DIMO மேற்கொண்டுள்ளது. இந்தச் சேவைகள் யாவும், LOVOL ஐ இலங்கையின் ஒரு நம்பகமான வரத்தகநாமமாக நிறுவுவதற்கு மிகவும் உதவிகரமாக உள்ளன.

அது மாத்திரமன்றி, சமூக வலைத்தளங்கள் மூலம் நவீன வாடிக்கையாளர் அனுபவத்தைப் பற்றிய சரியான விடயங்களை முன்வைப்பதன் மூலம் LOVOL ஹாவஸ்டர் அறுவடை இயந்திரத்தின் நன்மைகள் பற்றிய அடிப்படை அறிவைப் பெற வாடிக்கையாளர்களுக்கு DIMO வாய்ப்பளிக்கிறது.

இலங்கையில் LOVOL ஹாவஸ்டர் அறுவடை இயந்திரங்களின் விநியோகச் செயன்முறையில் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இதை நன்கு உணர்ந்துள்ள DIMO நிறுவனம், இலங்கை முழுவதும் பரந்து காணப்படும் LOVOL ஹாவஸ்டர் அறுவடை இயந்திரங்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களை ஊக்குவிக்கும் திட்டங்களையும் செயற்படுத்தி வருகிறது.

எப்போதும் அதிக தரம் மிக்க ஊக்குவிப்புத் திட்டங்களின் மூலம் உள்நாட்டு விவசாயிகளை வலுவூட்டுவதற்கு DIMO வழங்கும் பாரிய ஆதரவானது, இந்த விருதுகள் மூலம் வெளிப்படுகின்றது.

Share

You may also like...