புத்தளம் மாவட்டம் மாரவிலவில் புதிய DIMO CAREHUB கிளையை திறந்து பிராந்திய வளர்ச்சியை பலப்படுத்தும் DIMO

இலங்கையிலுள்ள முன்னணி பல்வகைத் துறை கூட்டு நிறுவனமான DIMO, வடமேல் மாகாணத்தின் பொருளாதார நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் வகையிலும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை தீர்வுகளை வழங்குவதற்குமாக அண்மையில் புத்தளம் மாவட்டத்தின் மாரவிலவில் சிலாபம் வீதி ஹொரகொல்ல பிரதேசத்தில் புத்தம் புதிய DIMO CAREHUB கிளையை திறந்து வைத்துள்ளது. நீர்கொழும்பு மற்றும் சிலாபம் பிரதேசத்திற்கு நடுவில் அமைந்துள்ள இந்த புத்தம் புதிய DIMO CAREHUB ஆனது, வாகனங்கள், விவசாயம் மற்றும் வீட்டுப் பயன்பாட்டு தீர்வுகள் ஆகிய அனைத்துத் துறைகளுக்கும் விரிவான சேவைகளை வழங்குகிறது.

இக்கிளை திறப்பு தொடர்பில், DIMO நிறுவனத்தின் Automotive Engineering Solutions பிரதம செயற்பாட்டு அதிகாரி மஹேஷ் கருணாரத்ன கருத்துத் தெரிவிக்கையில், “மாரவில மற்றும் அதனை அண்டியுள்ள பகுதி மக்களை வலுவூட்டுவதே இந்த விரிவாக்கத்தில் எமது முதன்மையான நோக்கமாகும். போக்குவரத்து, விவசாயம் மற்றும் வீட்டுப் பயன்பாட்டு உபகரணங்கள் தீர்வுகள் போன்ற பிரிவுகளில் புதிய தீர்வுகளை எளிதாக அணுகுவதன் மூலம் இந்தப் பிராந்தியத்திலுள்ள மக்களின் கனவுகள் மற்றும் அபிலாஷைகளை வலுவூட்ட நாம் எதிர்பார்க்கிறோம்.” என்றார்.

DIMO நிறுவனமானது இலங்கையில் பல ஆண்டுகளாக TATA வாகனங்களின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தராகத் தொடர்ச்சியாக திகழ்ந்து வருகிறது. அந்த வகையில் புத்தம் புதிய மாரவில DIMO CAREHUB கிளையானது, TATA அசல் உதிரிப் பாகங்கள் மற்றும் லூப்ரிகண்ட்கள், TATA வாகனப் பழுதுபார்ப்பு, எஞ்சின் உள்ளிட்ட ஏனைய உதிரிப்பாகங்களின் பழுதுபார்ப்பு, உட்புற மற்றும் வெளிப்புற சுத்தம் செய்தல் போன்ற சேவைகளுடன் விற்பனைக்குப் பின்னரான பரந்த சேவைகளை வழங்குகிறது. இதன் மூலம் பிராந்தியத்தில் உள்ள TATA வாடிக்கையாளர்களின் வாகனங்கள் தொடர்பான அனைத்து தேவைகளையும் ஒரே கூரையின் கீழ் எளிதாகப் பெற உறுதி செய்கிறது. அது மாத்திரமன்றி சேவை நடவடிக்கைகளில் உயர் தகைமையும் திறமையும் கொண்ட நிபுணர்களைத் தெரிவு செய்து சேவையில் ஈடுபடுத்தியுள்ளதன் மூலம், வாடிக்கையாளர்களுக்கு தரமான சேவையை வழங்க DIMO முன்னெடுத்துள்ள முயற்சிகள் தெளிவாகத் தெரிகின்றன.

TATA வாகனங்களைத் தவிர, விவசாய இயந்திரங்களான உழவு இயந்திரங்கள் மற்றும் அறுவடை இயந்திரங்களுக்கான தீர்வுகள் இந்த அதிநவீன CAREHUB இல் வழங்கப்படுகின்றமை இதன் சிறப்பம்சமாகும். DIMO நிறுவனத்தின் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட

அணுகுமுறையானது இந்த DIMO CAREHUB இற்கு மேலும் பலமாக அமைகிறது. Michelin, Kumho, Sailun, MRF டயர்கள் போன்ற உயர்தர தயாரிப்புகளையும், DIMO LUMIN மின்குமிழ்கள் மற்றும் சுவிட்ச்கள், Black + Decker வீட்டுப் பயன்பாட்டு உபகரணங்கள் மற்றும் WD-40 போன்ற உயர்தர தயாரிப்புகளையும் வாடிக்கையாளர்களுக்கு CAREHUB வழங்குகிறது. இந்த பிராந்தியத்தில் உள்ள மக்களுக்கு நவீன, உலகளாவிய வர்த்தகநாமங்கள் மற்றும் நவீன போக்குகளை அறிமுகப்படுத்துவதானது அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவும்.

இலங்கையில் உள்ள நுகர்வோருக்கு உயர்தர தீர்வுகள் மற்றும் சேவைகளை வழங்கும் DIMO CAREHUB ஆனது, தேசிய பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கான DIMO நிறுவனத்தின் அர்ப்பணிப்புக்கான ஒரு சான்றாகும்.

Share

You may also like...