2024 TAGS விருது விழாவில் ஜொலித்த DIMO; மதிப்புமிக்க ஒட்டுமொத்த வெள்ளி விருதுகளை வென்றது
2024 TAGS விருது விழாவில் DIMO சிறந்த வெற்றியை பதிவு செய்துள்ளது. பெருநிறுவன அறிக்கையிடலில் ஒட்டுமொத்த மதிப்புமிக்க வெள்ளி விருதுகளை நிறுவனம் வென்றுள்ளது. இந்நிகழ்வில் ஒரு தங்க விருதையும் நான்கு வெள்ளி விருதுகளையும் நிறுவனம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், நிர்வாகம், நிலைபேறான தன்மை ஆகியவற்றில் அதன் அர்ப்பணிப்பை இது எடுத்துக்காட்டுகிறது. நிறுவனம் Diversified Holdings தங்க விருது (100 பில்லியன் வரையான குழும வருமான பிரிவு) மற்றும் Integrated Reporting, Corporate Governance Disclosure – Non-Financial Services, Sustainability Reporting, Digitally Transformative Reporting ஆகிய 4 பிரிவுகளில் வெள்ளி விருதுகளை பெற்றுள்ளது.
இந்த ஒட்டுமொத்த வெள்ளி விருதுகளை நிறுவனத்தின் சார்பில் கஹநாத் பண்டிதகே (குழும முகாமைத்துவ பணிப்பாளர்/CEO), சுரேஷ் குணரத்ன (முகாமைத்துவ பணிப்பாளர்/CFO) ஆகியோர் பெற்றுக் கொண்டனர். DIMO நிறுவனத்தின் 2023/24 வருடாந்த அறிக்கையானது, Dragonfly metaphor (தும்பி உருவகம்) உடன் கூடிய ‘Agile By Nature’ (இயற்கையால் தூண்ட்பட்டது) எனும் கருப்பொருளில், பார்வையற்றோருக்காக ஒரு புத்தாக்கமான பிரெய்லி எழுத்துரு சுருக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அத்தோடு, அதன் டிஜிட்டல் ஈடுபாட்டை மேம்படுத்தும் வகையில் பிரத்தியேக microsite (சிறு இணையத்தளத்தை) இணைப்பையும் இவ்வறிக்கை கொண்டுள்ளது.
Recent Comments