உலகளாவிய போக்குகளை ஈர்க்கும் உள்நாட்டு சுவைகள்: Unilever Food Solutions வழங்கும் “எதிர்கால மெனுக்களில் ஈடுபடுங்கள்” நிகழ்வு 150 இற்கும் மேற்பட்ட இலங்கை சமையல் நிபுணர்களை ஊக்குவிக்கிறது
2024 ஆம் ஆண்டு உலக சமையல் நிபுணர்கள் தினத்தை கொண்டாடும் வகையில், யூனிலீவர் ஸ்ரீ லங்காவின் உணவு சேவை வணிகமான Unilever Food Solutions (UFS) (யூனிலீவர் உணவுத் தீர்வுகள்) அண்மையில் கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் முன்னெடுத்த “Indulge in Future Menus” (எதிர்கால மெனுக்களில் ஈடுபடுங்கள்) நிகழ்வை நடத்தியிருந்தது. இதில் நாடு முழுவதிலுமிருந்து 150 இற்கும் மேற்பட்ட சமையல் நிபுணர்கள் பங்குபற்றியிருந்தனர்.
இந்நிகழ்வானது, இரண்டு தெளிவான நோக்கங்களைக் கொண்டிருந்தது: முதலாவதாக, உள்ளூர் சமையல் கலைக்கு உலகளாவிய அறிவையும் புத்தாக்கத்தையும் கொண்டு வருவதன் மூலம் இலங்கையின் சமையல் துறையை மேம்படுத்துவதற்கான UFS இன் அர்ப்பணிப்பை இது வெளிப்படுத்தியது. இரண்டாவதாக இந்த நிகழ்வு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட Knorr தேங்காய்ப் பால் மா மற்றும் Global UFS வணிக நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட “Future Menus” (எதிர்கால மெனுக்கள்) போக்குகளை அறிமுகப்படுத்துவதற்கான ஒரு தளமாக அமைந்தது.
இந்நிகழ்ச்சியில் Unilever Global Innovation Centre இன் Lead Innovation Chef சமையல் நிபுணர் Evert Vermandel சிறப்புரையாற்றினார். “Future Menus” போக்குகள் பற்றிய அவரது உரையானது உலகளாவிய சமையல் இயக்கங்கள் மற்றும் இலங்கையில் சமையல்காரர்களை ஊக்குவிக்கும் ஆக்கபூர்வமான நுட்பங்கள் பற்றிய மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்கியது.
இதன்போது, புகழ்பெற்ற விருந்தோம்பல் ஆலோசகரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான சமையல் நிபுணர் சுதுசிங்க சந்திரசேன Knorr தேங்காய்ப் பால் மா பற்றி விளக்கும் அம்ர்வொன்றை முன்னெடுத்தார். இலங்கையின் சமையல் கலையில் சிறந்த நிபுணத்துவத்திற்காக பிரபலமான சமையல் கலை நிபுணர் சந்திரசேன இந்த புதிய தயாரிப்பின் செயல்விளக்கத்தை இங்கு விபரித்தார். சமகால மற்றும் பாரம்பரிய உணவுகளை வலுப்படுத்துவதற்கான சாத்தியத்தை அவர் இங்கு எடுத்துக் கூறினார். UFS சமையல் நிபுணர்கள் Knorr தேங்காய்ப் பால் மாவின் தரம் மற்றும் மதிப்பை எடுத்துக்கூறி, உலகளாவிய நுண்ணறிவையும் தமது ஆதரவையும் வழங்கினர்.
யூனிலீவர் ஸ்ரீ லங்காவின் வீட்டுப் பராமரிப்பு மற்றும் ஊட்டச்சத்துக்கான சந்தைப்படுத்தல் பணிப்பாளர் இமேஷிகா காரியவசம் தெரிவிக்கையில், “இந்த நிகழ்வானது இலங்கையின் சமையல் துறையை மேம்படுத்துவதற்கான எமது அர்ப்பணிப்பை வலியுறுத்துகிறது. புத்தாக்கங்ளை ஊக்குவித்தல் மற்றும் உலகளாவிய நுண்ணறிவுகளை வழங்குவதன் மூலம், சமையல் நிபுணர்கள் சிறந்த உணவு அனுபவங்களை உருவாக்குவார்கள் என நாம் நம்புகிறோம். உயர்தர தயாரிப்புகள் மற்றும் நிபுணத்துவ அறிவின் மூலம் சமையல் நிபுணர்களுக்கு உதவுவயதான மூலம், இலங்கை உணவு வகைகளின் எதிர்காலத்தை UFS வழிநடத்துகிறது.” என்றார்.
தமது சமையல் புத்தாக்க கண்டுபிடிப்பு பயணத்தில் இணையுமாறு சமையல் கலை நிபுணர்களுக்கு யூனிலீவர் Unilever Food Solutions Sri Lanka அழைப்பு விடுக்கிறது. அவர்களை Instagram இல் www.instagram.com/ufsglobal/ ஊடாகவும் Facebook இல் www.facebook.com/@UFSLK/ ஊடாகவும் பின்தொடருங்கள்.
END
Recent Comments