விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதன் மூலம் விவசாய இயந்திரமயமாக்கலை ஊக்குவிக்கும் DIMO பரிசு மழை அறிமுகம்
முதல் கட்டம் வெற்றிகரமாக நிறைவு
விவசாய இயந்திரமயமாக்கல் மூலம் விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான மற்றுமொரு படியாக, Mahindra உழவு இயந்திரங்களை கொள்வனவு செய்யும் விவசாயிகளுக்கு இலவச மடிகணனிகள், டெப் கணனிகள், மின்சார சைக்கிள்கள் மற்றும் வெளிநாட்டு பயணங்களை வழங்கும் “மஹட்ட வஹின வாசி வெஸ்ஸ” (பெரும் போகத்திற்கு பெய்யும் பரிசு மழை) திட்டத்தை DIMO நிறுவனம் அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
விவசாயத்தில் வினைத்திறனையும் உற்பத்தித்திறனையும் அதிகரிக்க, இயந்திரமயமாக்கல் மற்றும் நவீன தொழில்நுட்பத்தின் பயன்பாடு மிகவும் முக்கியமானதாகும். உலகின் முன்னணி வர்த்தக நாமங்களின் கீழ் இலங்கையில் விவசாய இயந்திரங்களை விநியோகிக்கும் நிறுவனம் எனும் வகையில், இந்நாட்டின் விவசாயத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்கும் DIMO நிறுவனம், இந்நாட்டில் விவசாய இயந்திரமயமாக்கலை வலுப்படுத்தவும் அதன் மூலம் விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் எதிர்பார்க்கிறது. Mahindra ட்ரக்டர்களை கொள்வனவு செய்யும் போது இலவச மடிகணனிகள் மற்றும் டெப் கணனிகளை வழங்குவதன் மூலம், விவசாயிகள் தங்களது அன்றாட வேலைகளை எளிதாக்குவதுடன், விவசாய நடவடிக்கைகளுக்கு நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக்கொள்ளவும், குறிப்பாக இணையத்தின் மூலம் பயிர்ச் செய்கைகள் தொடர்பான புதிய விடயங்கள், தகவல்களையும் பெறலாம். இது தவிர “மஹட்ட வஹின வாசி வெஸ்ஸ” ஊக்குவிப்புத் திட்டத்தின் மூலம், விவசாய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தக்கூடிய சேறு சக்கரங்களையும் (Mud Wheel) விவசாயிகள் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
4 பரிசுத் தெரிவுகளைக் கொண்ட இந்த ஊக்குவிப்புத் திட்டத்தில், விவசாயிகள் தங்களுக்கு விருப்பமான பரிசுப் பொதியைத் தெரிவு செய்ய முடியும். முதல் பரிசுப் பொதியில் மின்சார சைக்கிள், இரண்டாவது பொதியில் அற்புதமான அனுபவத்துடனான மலேசியாவுக்கான வெளிநாட்டு சுற்றுப்பயணம் வழங்கப்படுகிறது. வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இலவச உணவு, தங்குமிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் குழுக்களாக மலேசியா அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மூன்றாவது பொதியில் ஒரு மடிகணனி மற்றும் ஒரு டெப் கணனி காணப்படுகின்றது. நான்காவது பொதியில் ஒரு மடிகணனி மற்றும் 2 சேறு சக்கரங்கள் உள்ளன. இந்த ஊக்குவிப்புத் திட்டத்தின் முதல் கட்டம் அண்மையில் இடம்பெற்றதோடு, ஓகஸ்ட் 01 முதல் நவம்பர் 30 வரை எந்தவொரு Mahindra ட்ரக்டர் வகையையும் கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களும் இந்த பரிசுகளை பெரும் வாய்ப்புக்கு தகுதியுடையவர்களாக உள்ளனர்.
DIMO நிறுவனத்தின் விவசாய இயந்திரப் பிரிவிற்குப் பொறுப்பான நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஜீவ் பண்டிதகே தெரிவிக்கையில் “மஹட்ட வஹின வாசி வெஸ்ஸ” எனும் ஊக்குவிப்பு பிரசாரத் திட்டத்தையும் தாண்டி, விவசாயிகள் மற்றும் அவர்களது குடும்பங்கள் பெறும் நன்மைகள் மூலம் சிறந்த மாற்றத்தை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். உதாரணமாக, ஒரு மடிகணனியானது அக்குடும்பத்தில் உள்ள சிறுவர்களின் கல்விக்கு பயன்படுத்த முடியும் என்பதோடு, குடும்பத்தினரின் ஒன்லைன் மூல கல்வி பாடநெறிகள் உள்ளிட்ட விடயங்களை விடயங்களுக்கும் பயன்படுத்த முடியும். அத்துடன், மின்சார சைக்கிளை குடும்ப உறுப்பினர்களின் பல்வேறு சிறிய பயணங்களுக்கு சிக்கனமான செலவில் பயன்படுத்தலாம். வெளிநாட்டுப் பயணங்கள் மூலம் விவசாயிகளுக்கு புதிய அனுபவத்தை கொடுப்பதன் மூலம் அவர்களின் மனநலனில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என நாம் நம்புகிறோம். இந்த ஊக்குவிப்புத் திட்டத்திற்காக பரிசுகளைத் தெரிவு செய்யும் போது, விவசாயிகள் மற்றும் அவர்களது குடும்பங்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து பரிசுகளை தெரிவு செய்தோம்,” என்றார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “இது போன்ற திட்டங்களின் மூலம், விவசாயிகளை மேம்படுத்தவும், விவசாய இயந்திரமயமாக்கலில் அவர்களின் ஆர்வத்தை அதிகரிப்பதன் மூலம் விவசாயத்தை புதிய மட்டத்திற்கு கொண்டு செல்லவும் நாம் எதிர்பார்க்கிறோம்.” என்றார்.
இலங்கையில் விவசாயத்தை மேம்படுத்துவதற்காக எப்போதும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் DIMO நிறுவனம், விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஒரு தனித்துவமான வாய்ப்பாக “மஹட்ட வஹின வாசி வெஸ்ஸ” திட்டத்தை கருத முடியும் என்பதோடு, இது இந்நாட்டின் விவசாயிகளின் கனவுகள் மற்றும் அபிலாஷைகளுக்கு வலுவூட்டுவதற்கும் பங்களிக்கும்.
Recent Comments