வெளிநாட்டுப் பணம் அனுப்புதலை அதிகரிப்பதற்கான இலங்கையின் முயற்சிக்கு ஆதரவளிக்கும் நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி

நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி அதன் “We Transfer More Than Just Money” (நாம் பணத்திற்கு அப்பாற்பட்ட பரிமாற்றத்தை புரிகிறோம்) எனும் 2024 ஆம் ஆண்டிற்கான வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்பும் ஊக்குவிப்புத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இது வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்புவதில் குறிப்பிடத்தக்க வகையிலான அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளது.

12 வாரங்களாக இடம்பெற்ற இந்த பிரசாரத் திட்டத்தின் ஒரு அங்கமாக, வாராந்த பரிசுக் குலுக்கலும் முன்னெடுக்கப்பட்டது. இது வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்பும் பயனாளிகளான அதிர்ஷ்டசாலி வெற்றியாளர்களுக்கு ஸ்மார்ட்போன்களை வெல்லும் வாய்ப்பை வழங்கியது. வெற்றியாளர்களாக தெரிவு செய்யப்பட்ட 12 அதிர்ஷ்டசாலிகள், அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, சவூதி அரேபியா, பஹ்ரைன், ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து பணம் அனுப்பியிருந்தனர்.

இலங்கைக்கு வெளிநாட்டுப் பணம் அனுப்பும் தொகையை அதிகரிக்கும் பரந்த குறிக்கோளுடன் முன்னெடுக்கப்பட்ட இந்த திட்டமானது நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் பணம் அனுப்பும் சேவைகளின் வளர்ச்சியை வலுப்படுத்துவதற்கான ஒன்றாகும். வாடிக்கையாளர்கள் வெளிநாட்டில் உள்ள தங்கள் அன்புக்குரியவர்களுடன் தொடர்ச்சியாக இணைந்திருக்க உதவும் வெகுமதியை வழங்கிய அதே வேளையில், பணம் அனுப்புபவர்கள் மற்றும் பணம் பெறுபவர்கள் ஆகிய இரு தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்தது. ஒவ்வொரு வாரமும் வெற்றியாளர்கள் எழுந்தமானமாகத் தெரிவு செய்யப்பட்டனர். தலா ரூ. 50,000 அல்லது அதற்கு சமமான வெளிநாட்டு பணத்தை அனுப்புபவர்கள் தானாகவே இந்த குலுக்கலில் இணைகின்றனர்.

இந்த திட்டத்தின் மூலம், நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியானது, நிதிச் சேவைகளை மட்டும் வழங்குவதைக் கடந்து, அது கொண்டுள்ள உறுதிப்பாட்டையும் சுட்டிக் காட்டுகிறது. தடையற்ற மற்றும் நம்பகமான பணம் அனுப்பும் தீர்வுகளுடன் வெகுமதிகளை வழங்குவதன் மூலம், தனது வாடிக்கையாளர்களுக்கு அர்த்தமுள்ள அனுபவங்களை வங்கி தொடர்ச்சியாக வழங்கி வருகிறது. அத்துடன் வெளிநாட்டில் உள்ள குடும்பங்கள் மற்றும் நண்பர்களுடன் வலுவான தொடர்புகளைப் பேணுவதற்கும் உதவுகிறது. Nations Trust Bank PLC ஆனது, நுகர்வோர், வணிகம், பெருநிறுவனப் பிரிவுகளில் பலதரப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு நேரடியாகவும் டிஜிட்டல் ரீதியிலும் பல வகையான வாடிக்கையாளர் தொடுபுள்ளிகள் மூலம் இணைப்பை ஏற்படுத்துகின்றது. அதிநவீன டிஜிட்டல் வங்கியியல் தொழில்நுட்பங்கள் மூலம் டிஜிட்டல் வங்கியியலை ஊக்குவிப்பிதில் வங்கி கவனம் செலுத்துகிறது. அத்துடன், FriMi மூலம் இலங்கையின் முன்னணி டிஜிட்டல் வங்கி அனுபவத்தில் முன்னோடியாக உள்ளது. பிரீமியம் பிரிவு வகையில் தொழிற்துறைத் தலைமைத்துவத்துடன் இலங்கையில் American Express அட்டை வழங்குனரும் அதன் ஒரேயொரு அங்கீகரிக்கப்பட்ட செயற்படுத்துனருமாக Nations Trust Bank PLC விளங்குகின்றது.

Share

You may also like...