“சின்ன புன்னகையை பாதுகாப்போம்” பேராதனை பல்கலைக்கழக பல் மருத்துவ பீடம் மற்றும் க்லோகாட் இணைந்து உலக சிறுவர் தின கொண்டாட்டம்
உலக சிறுவர் தினத்தைக் கொண்டாடும் வகையில், முன்னணி வாய்ச் சுகாதார பராமரிப்பு வர்த்தக நாமமான க்லோகாட் (Clogard), பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பல் மருத்துவ பீடத்துடன் இணைந்து, முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் ஆரம்பக் குழந்தைப் பருவ மேம்பாட்டு உத்தியோகத்தர்களுக்கான விசேட நிகழ்வொன்றை அண்மையில் முன்னெடுத்திருந்தது. க்லோகாட் அனுசரணையில் ‘Saving Little Smiles’ (சின்ன புன்னகையை பாதுகாப்போம்) எனும் தொனிப்பொருளின் கீழ் இடம்பெற்ற இந்நிகழ்வானது, பாலர் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் ஆரம்பக் குழந்தைப் பருவ மேம்பாட்டு உத்தியோகத்தர்கள் மத்தியில் குழந்தைகளின் பல் பராமரிப்பு தொடர்பான பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. இந்த நிகழ்வில் முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட 300 இற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். சிறுவயதிலிருந்தே குழந்தைகளின் பல் ஆரோக்கியத்தை பராமரித்தல், மேம்படுத்துவதில் கல்வி அறிவை ஊட்டுபவர்களின் முக்கிய பங்கை இது வலியுறுத்தியது.
கல்வி அறிவை ஊட்டுபவர்களிடையே பகிர்ந்து கொள்ளப்படும் அறிவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏனெனில் இது ஆரம்பக் குழந்தை பருவ வளர்ச்சியின் போதான பல் சிதைவு போன்ற பல் தொடர்பான பிரச்சினைகள் கண்டறிந்து தீர்க்கப்படுவதை உறுதிப்படுத்த உதவுகிறது. மத்திய மாகாணத்தில் வருடாந்தம் சுமார் 36,000 சிறுவர்கள் பாலர் பாடசாலைகளில் கல்வியை ஆரம்பிக்கின்றனர் என்றும், ஆயினும் 4,700 ஆரம்ப குழந்தைப் பருவ மேம்பாட்டு ஆலோசகர்கள் மாத்திரமே உள்ளதாகவும் மத்திய மாகாணத்தின் ஆரம்பகால குழந்தைப் பருவ மேம்பாட்டு அலுவலகத்தின் பணிப்பாளர் டி.கே. குணதிலக சுட்டிக் காட்டினார். எதிர்கால சந்ததியினரின் புன்னகையைப் பாதுகாப்பது தொடர்பான அறிவைப் பகிர்ந்துகொள்வதும், பற் குழிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் அவற்றைத் தடுப்பது எவ்வாறு என்பது பற்றி அறிந்திருப்பது இன்றியமையாததாகும்.
இந்நிகழ்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய பேராசிரியர் சந்திரா ஹேரத், ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களிடையே பொதுவாக ‘ஆரம்ப குழந்தைப் பருவ பற் சிதைவு’ என அழைக்கப்படும் Early Childhood Caries (ECC) தொடர்பில் இங்கு விரிவாகப் பேசினார். அவரது உரையில், அதிகளவான இனிப்புகளை உட்கொள்வதால் உருவாகும் பக்டீரியாக்களால் ஏற்படுத்தப்படும் பற்குழிகளால் ECC ஏற்படுவதாக, அவர் இங்கு விளக்கினார். பாலர் பாடசாலை ஆசிரியர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது, ஆரம்ப நிலையிலேயே பற் குழிகளைத் திறம்பட கண்டறிந்து நிவர்த்தி செய்ய உதவுவதுடன், அவை ECC நிலையை அடைவதைத் தடுக்க உதவும் என்றும் அவர் இங்கு சுட்டிக் காட்டினார்.
கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக நம்பகமான வர்த்தக நாமமாக விளங்கும் க்லோகாட் பற்பசையானது, சிறந்த வாய்ச் சுகாதார பராமரிப்பை வழங்குவதோடு, அதன் பரந்துபட்ட தயாரிப்பு வரிசைகள் மூலம் பற் குழிவு அற்ற தேசத்தைக் கட்டியெழுப்புவது தொடர்பான அதன் வாக்குறுதியை தொடர்ச்சியாக நிறைவேற்றி வருகிறது. புளோரைட் கொண்ட பற்பசையின் பயன்பாடானது, பற் குழிகளுக்கு எதிரான பாதுகாப்பை பெறுவதற்கும் தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்களை அழிப்பதற்கும் அவசியம் என்பதை இவ்வர்த்தகநாமம் உறுதிப்படுத்துகிறது. வாய்ச் சுகாதார பராமரிப்பு பிரச்சினைகளின் நீண்டகால விளைவுகள், சிறுவர்களின் எதிர்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதோடு, சிறுவர்களின் தன்னம்பிக்கை மற்றும் மன வள ஆரோக்கியத்திலும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
பல் தொடர்பில் ஏற்படும் பிரச்சினைகளைத் தடுப்பதற்கு அவசியமான அறிவு மற்றும் அது தொடர்பில் அவசியமான விடயங்கள் மூலம் பாலர் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் ஆரம்பக் குழந்தைப் பருவ மேம்பாட்டு உத்தியோகத்தர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களை வலுவூட்டுவதன் மூலம் ’Saving Little Smiles’ நிகழ்வானது மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இது போன்ற திட்டங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். காரணம், ஆரம்பக் குழந்தைப் பருவ பல் பிரச்சினைகள் மற்றும் ஏனைய வாய்ச் சுகாதார பிரச்சினைகள் குறித்து இந்நிகழ்வுகள் மிகவும் அவசியமான விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன. இவ்வாறான திட்டங்களில் பகிர்ந்துகொள்ளப்படும் அறிவூட்டலானது எதிர்கால தலைமுறையினரின் புன்னகை பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய மிக அவசியமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Recent Comments