தொடர்ச்சியாக 12ஆவது வருடமாக இளங்கலை மாணவர்கள் மத்தியில் முதலிடத்தில் உள்ள தெரிவாக அமையும் யூனிலீவர் ஸ்ரீ லங்கா
இலங்கையில் இளங்கலைப் பட்டதாரிகள் மத்தியில் மிகவும் விருப்பத்திற்குரிய தொழில் வழங்குனராக யூனிலீவர் ஸ்ரீ லங்கா தனது நிலையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. ஒரு சுயாதீன ஆராய்ச்சி நிறுவனத்தால் நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில், யூனிலீவர் நிறுவனத்தை நம்பர் 1 தொழில் வழங்குனராக மாணவர்கள் அங்கீகரித்துள்ளனர். இளம் திறமையாளர்களை வளர்ப்பதனையும், தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பையும் இது சுட்டிக் காட்டுகிறது.
இலங்கையில் உள்ள தேசிய மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் முகாமைத்துவம், விஞ்ஞானம் மற்றும் பொறியியல் துறைகளை உள்ளடக்கிய இளங்கலை மாணவர்களிடையே தொழில் வழங்குனர் தெரிவு தொடர்பான ஆய்வு வருடாந்தம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் இருந்து 360 இளங்கலை பட்டதாரிகளிடம் கருத்துக் கணிப்பு எடுக்கப்பட்டது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பான நிறுவனத்தின் முதலீடு, இளைஞர்கள் மத்தியில் வர்த்தகநாமம் பெற்றுள்ள இடம், தொழிலுக்கான வாய்ப்புகள் மற்றும் தொழில் வழங்கல் போன்ற காரணிகளின் அடிப்படையில் இலங்கையில் உள்ள நிறுவனங்கள் பற்றி ஆய்வில் கலந்து கொள்வோரின் கருத்துகள் இதன் போது மதிப்பீடு செய்யப்பட்டது. அதற்கமைய, இதில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட இளங்கலை மாணவர்களின் இதயங்களையும் மனதையும் யூனிலீவர் ஸ்ரீ லங்கா நிறுவனம் கவர்ந்ததோடு, தெளிவான முன்னணி இடத்தையும் பெற்றுக் கொண்டுள்ளது.
இது தொடர்பில், யூனிலீவர் ஸ்ரீ லங்காவின் மனிதவளப் பணிப்பாளர் அஜித் தோமஸ் தெரிவிக்கையில், “சிறந்த தொழில் வழங்குனர் என, இலங்கையில் இளங்கலைப் பட்டதாரிகளிடையே பெயரைப் பெற்றதில் நாம் நம்பமுடியாத வகையில் பெருமையடைகிறோம். இளைஞர்களின் திறமைகளை மேம்படுத்துகின்ற மற்றும் அவர்களின் வெற்றியை ஊக்குவிக்கின்ற நெகிழ்ச்சித் தன்மை கொண்ட மற்றும் உள்ளீர்க்கப்பட்ட இளைஞர்களுக்கான திட்டங்களை வழங்குவதற்கு எம்மை நாம் அர்ப்பணித்துள்ளோம். பல்கலைக்கழகங்கள் மற்றும் இளைஞர் அமைப்புகளுடனான எமது கூட்டாண்மை தொடர்பில் நாம் பெருமையடைகிறோம். ஒன்றாக இணைந்து, நாடு முழுவதும் உள்ள இளைஞர்களின் வாழ்க்கையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துகிறோம்.
யூனிலீவர் ஸ்ரீ லங்கா நிறுவனமானது, பல்கலைக்கழகங்களுடனான ஈடுபாடுகள், ஆரம்ப நிலை தொழில் வாய்ப்புகள், இளைஞர் மேம்பாட்டு முயற்சிகள் போன்ற பல்வேறு திட்டங்கள் மூலம் இளம் திறமையாளர்களை வளர்ப்பதில் தனது அர்ப்பணிப்பை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகிறது. 2025 ஆம் ஆண்டளவில் 100,000 இலங்கை இளைஞர்களை சிறந்த வேலைவாய்ப்பு திறன் கொண்டவர்களாக மேம்படுத்த யூனிலீவர் ஸ்ரீ லங்கா நிறுவனம் உறுதிபூண்டுள்ளது. வருடாந்தம், 100 இற்கும் அதிக பல்கலைக்கழகங்கள் உடனான ஈடுபாட்டுத் திட்டங்களில் யூனிலீவர் நிறுவனம் முதலீடு செய்து, Sparks மாணவர் தூதுவர் நிகழ்ச்சி, யூனிலீவர் தலைமைத்துவ தொழில் கற்றல் நிகழ்ச்சி, யூனிலீவர் எதிர்கால தலைவர்கள் திட்டம், யூனிலீவர் இளைஞர் மன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலம், 100 இற்கும் அதிக ஆரம்ப நிலை தொழில் வாய்ப்புகளை வழங்குகிறது. “A Glimpse of U” எனும் கருப்பொருளின் கீழ் இந்த வருடத்தின் ஆரம்பத்தில் இடம்பெற்ற யூனிலீவர் இளைஞர் மன்றமானது, யூனிலீவருடனான வாழ்க்கை என்பதன் மூலம் தனது வணிகம், வர்த்தகநாமம், ஊழியர்களாகிய மக்கள் ஆகிய விடயங்கள் தொடர்பில் அறியும் வாய்ப்பை பெற 200 இளங்கலை பட்டதாரிகளை நிறுவனம் ஒன்றிணைத்தது. இந்த நிகழ்வு இளங்கலை பட்டதாரிகளுக்கு பெருநிறுவன உலகத்துடன் தொடர்புடைய விடயங்களை ஒன்றிணைத்து அறியவும், அதில் ஈடுபடவும், அதனை ஆராயவுமான ஒரு தளத்தை வழங்கிய அதே நேரத்தில், எதிர்காலத்துடன் பொருந்தக் கூடிய திறன்களை வளர்க்கவும் மேம்படுத்தவும் அவர்களுக்கு ஊக்கமளிக்கிறது.
இலங்கை இளைஞர்களுக்காக தொடர்ச்சியான முதலீடுகள் மூலம், இணையற்ற தொழில் வாய்ப்புகளை யூனிலீவர் ஸ்ரீ லங்கா வழங்குவதால், இலங்கையின் தொழில் படையணியின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் ஒரு முன்னணி சக்தியாக விளங்குவதற்கு நிறுவனம் உறுதிபூண்டுள்ளது.
END
Recent Comments