100% உண்மையான மூலப்பொருட்கள் கொண்ட சுவையான Chirpy Chips ஐ மீண்டும் கொண்டு வரும் உஸ்வத்த

இலங்கையின் நீண்ட கால வரலாற்றைக் கொண்ட தின்பண்ட உற்பத்தியாளரான Uswatte confectionery Works Pvt Ltd. நிறுவனம், 68 ஆண்டுகளுக்கும் மேலாக உயர்தர தின்பண்டங்கள், இனிப்புகள் மற்றும் சிற்றுண்டி உணவுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் அனைவரதும் அபிமானம் பெற்ற உருளைக்கிழங்கு நொறுக்குத் தின்பண்டமான Chirpy Chips தயாரிப்பை மாற்றங்களுடன் மீள அறிமுகப்படுத்துவதில் நிறுவனம் மகிழ்ச்சி அடைகிறது. வேடிக்கை நிறைந்த இந்த சிற்றுண்டியானது, தூய உருளைக்கிழங்கைப் பயன்படுத்தி நுணுக்கமாகத் தயாரிக்கப்படுவதோடு, ஒவ்வொரு கடியிலும் 100% உண்மையான உணவின் பெறுமதியை உறுதியளிக்கிறது. Chirpy Chips முதன்முதலில் 1994 இல் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் அவ்வேளையில் நாட்டிற்கு உயர்தர உருளைக்கிழங்கை இறக்குமதி செய்வதில் ஏற்படுத்தப்பட்ட கட்டுப்பாடு காரணமான அரசாங்கக் கொள்கைகள் காரணமாக mJ இடைநிறுத்தப்பட்டது.

Chirpy Chips மிகவும் கட்டுப்படியான விலையிலும், மிகவும் வசதியான சிற்றுண்டித் தெரிவாகவும் அமைகின்றது. இது பசியை போக்குவதோடு மட்டுமல்லாமல், முதல் கடி முதல் நுகர்வோரை இயற்கையான பொருட்களின் சுவைக்குள் மூழ்கடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சிப்ஸ்கள் Cheese & Onion, Salted, Hot N Spicy (சீஸ் மற்றும் வெங்காயம், உப்பு சேர்ந்த, உறைப்பு சேர்ந்த) ஆகிய மூன்று சுவைகளில் கிடைக்கின்றன. இவை 16 கிராம் ரூ.70, 24 கிராம் ரூ.100, 50 கிராம் ரூ.200, 73 கிராம் ரூ.300 என பல்வேறு அளவுகளில் கிடைக்கிறது. அது மாத்திரமன்றி, உள்ளூர் கடைகள் மற்றும் முன்னணி பல்பொருள் அங்காடிகளில் கிடைக்கின்ற உண்மையான உருளைக்கிழங்கு கொண்ட ஒரேயொரு சிப்ஸ் வர்த்தகநாமமாக இது காணப்படுகின்றது.

Chirpy Chips வர்த்தகநாமத்தின் மீள் அறிமுகம் மற்றும் அதனைத் தூண்டுவதற்கான உந்து சக்தியாக, Uswatte confectionery Works Pvt Ltd நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளர் ஷனுர பெரேரா திகழ்கின்றார். சிற்றுண்டி உணவுப் பிரியர்களின் இதயங்களை கவரும் வகையில் நாட்டின் முதல் தர சிற்றுண்டி உணவுத் தெரிவாக Chirpy Chips உற்பத்தியை தயாரித்து, உள்ளூர் சிற்றுண்டி உணவுச் சந்தையில் புரட்சியை ஏற்படுத்துவதே அவரது நோக்கமாகும்.

இதன் மீள் அறிமுகம் தொடர்பில் தனது கருத்துகளைப் பகிர்ந்த, Uswatte confectionery Works Pvt Ltd நிறுவனத்தின் தலைவர் குயின்டஸ் பெரேரோ, “உலகம் முழுவதும் உள்ள அனைத்து வகை சிற்றுண்டி உணவுகளிலும் உருளைக்கிழங்கு சிப்ஸ் ராஜாவாக திகழ்கின்றது. அத்துடன் இந்த பிரியமான வர்த்தகநாமமான உருளைக்கிழங்கு சிப்ஸை இலங்கைக்கு மீண்டும் அறிமுகப்படுத்த முடிந்தமை தொடர்பில் நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். Chirpy Chip வர்த்தகநாமத்தின் மீள் அறிமுகத்தின் மூலம், சர்வதேச தரத்தை பூர்த்தி செய்யும் வகையிலான உயர் தர உருளைக்கிழங்கு சிப்ஸ் வர்த்தகநாமத்தை உருவாக்குவதற்கு எமக்கு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.” என்றார்.

சுவை மற்றும் திருப்தியின் உயர்ந்த சர்வதேச தரத்தை பூர்த்தி செய்யும் உயர்தர சிற்றுண்டி உணவைத் தயாரிப்பது தொடர்பான உஸ்வத்த நிறுவனத்தின் ஈடு இணையற்ற அர்ப்பணிப்பினால் Chirpy Chips உற்பத்தி செய்யப்படுகிறது. Chirpy Chips வர்த்தக நாமத்தை மீண்டும் அறிமுகப்படுத்தியதன் மூலம், Uswatte நிறுவனம் இலங்கையில் மீண்டும் சிற்றுண்டி உணவுகளுக்கான தர அளவுகோல்களை நிர்ணயித்துள்ளதோடு, பாரம்பரியத்துடன் உயர் தரத்தை இணைக்கும் தயாரிப்பை  வழங்குகின்றது. பயணம் செல்லும் போது உடனடி சிற்றுண்டியாகவோ, ஓய்வெடுக்கும் போது இரசித்து உண்ணக் கூடிய உணவாகவோ உண்ணக் கூடிய Chirpy Chips தயாரிப்பானது அனைவரும் விரும்பும் சிறந்த தெரிவாக அமைகின்றது.

Share

You may also like...