மத்திய மாகாண வாடிக்கையாளர்களுக்கு விரிவான சேவைகளை வழங்க புதிதாக மேம்படுத்தப்பட்ட தனது பலகொல்ல கிளையை திறந்துள்ள DIMO

இலங்கையில் முன்னணியில் உள்ள பல்வகைத் துறை குழுமமான DIMO, மத்திய மாகாணத்தில் உள்ள நுகர்வோரின் பல்வேறுபட்ட தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தனது பலகொல்ல சேவை மையத்தை இல. 688, பலகொல்ல, கென்கல்ல எனும் முகவரியில் அண்மையில் திறந்து வைத்துள்ளது.

இதற்கு முன்னதாக, பலகொல்ல சேவை மையமானது TATA வாகனங்களுக்கான மட்டுப்படுத்தப்பட்ட சேவைகளுக்கு மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது இந்த புதிய கிளையானது, போக்குவரத்து மற்றும் விவசாயத் துறை தொழில்துறையினருக்கு பல்வேறு சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளதோடு, வீட்டுப் பயன்பாட்டு உபகரணங்களுக்கான தீர்வுகளை வழங்கி, வாடிக்கையாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையிலான வலுவான பங்களிப்பை வழங்குகின்றது.

இது தொடர்பில், DIMO நிறுவனத்தின் Automotive Engineering Solutions இன் பிரதம செயற்பாட்டு அதிகாரி மஹேஷ் கருணாரத்ன தனது கருத்தை வெளியிடுகையில், “நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தும் வகையில், பிராந்திய வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். DIMO பலகொல்ல சேவை மையத்தை முழுமையான கிளையாக தரமுயர்த்தியமையானது, பிராந்திய வளர்ச்சிக்கு பங்களிக்கும் எமது முயற்சிகளில் மற்றுமொரு படியாக குறிப்பிடலாம். DIMO நிறுவனத்தின் பலகொல்ல கிளையின் ஊடாக வாடிக்கையாளர்களுக்கு ஒரே கூரையின் கீழ் பல்வேறு தீர்வுகளை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது நிச்சயமாக பிராந்திய மக்களின் கனவுகள் மற்றும் அபிலாஷைகளை வலுப்படுத்த உதவும் என நாம் நம்புகிறோம்.” என்றார்.

இந்த புதிய கிளையானது, வாகன பழுதுபார்ப்பு, விபத்து பழுதுபார்ப்பு, எஞ்சின் பழுதுபார்ப்பு, வாகன கழுவுகை மற்றும் உட்புற சுத்தப்படுத்தல், வாகன விற்பனை மற்றும் TATA வாகனங்களுக்கான உதிரிப் பாகங்களின் விநியோகம் உள்ளிட்ட முழுமையான சேவைகளை வழங்குகிறது. இப்புதிய கிளையானது, சமீபத்திய கருவிகள் மற்றும் தொழில்நுட்ப உபகரணங்களுடன், TATA நிபுணர்களால் பயிற்சியளிக்கப்பட்ட திறமையான தொழில்நுட்ப வல்லுநர்களின் குழுவையும் கொண்டுள்ளது. TATA வாகனங்களுக்கு தரமான சேவைகளை வழங்கி, நீண்ட ஆயுளை வழங்குவதன் மூலம், இப்பிராந்தியத்தில் உள்ள தொழில்முனைவோர், தொழில் துறையார்கள் மற்றும் வாகன உரிமையாளர்களுக்கு புத்தம் புதிய அனுபவத்தை இப்புதிய கிளை வழங்குகிறது. அதற்கமைய, அனைத்து போக்குவரத்துத் தேவைகளுக்குமான முழுமையான பங்காளியாக தனது நிலையை மேலும் உறுதிப்படுத்தியுள்ள DIMO நிறுவனம், அதன் புதிய கிளையில் TATA வாகன வாடிக்கையாளர்களுக்கு மிக உயர்ந்த தரமான சேவையை வழங்குகிறது. அத்துடன், இந்தக் கிளையானது, Michelin, Kumho, MRF, Sailun உள்ளிட்ட பல்வேறு பிரபல டயர் வர்த்தக நாமங்களையும் DIMO வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

இது தவிர, பிராந்தியத்தில் உள்ள DIMO விவசாய இயந்திர உரிமையாளர்களுக்கான சேவைகளை வழங்குவதற்காக, இந்த புதிய DIMO கிளையில் ஒரு விசேட சேவைக் குழுவினரும் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். மத்திய மாகாண விவசாய சமூகத்திற்கு, DIMO உழவு இயந்திரங்கள் மற்றும் அறுவடை இயந்திரங்களின் விற்பனை, உதிரிப் பாகங்கள் மற்றும் நடமாடும் சேவைகளை இந்தக் குழு வழங்கும்.

இந்த புதிய கிளையில், வீட்டு உபயோகப் பொருட்கள் தீர்வுகள் பிரிவின் கீழ் Black + Decker வீட்டு பயன்பாட்டு உபகரணங்கள் மற்றும் DIMO Lumin lighting solutions களையும்  தீர்வுகளை வாடிக்கையாளர்களுக்கு DIMO வழங்குகிறது.

Image Caption : புதிய கிளையின் திறப்பு விழாவில் DIMO நிர்வாகத்தினர்…

Share

You may also like...