தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட St. Anthony’s Industries Group
1930 களில் இருந்து சிறந்த பாரம்பரியம் கொண்ட இலங்கையின் முன்னணி கூட்டு நிறுவனமான St. Anthony’s Industries Group (Pvt) Ltd, அதன் புதிய இலச்சினையை சமீபத்தில் பெருமையுடன் வெளியிட்டுள்ளது. இந்த முக்கிய நிகழ்வானது, குழுமத்திற்கு ஒரு புதிய சகாப்தத்தை குறிப்பதோடு, சிறந்து விளங்குதல், புத்தாக்கம், தொழில்துறை தலைமைத்துவத்திற்கான அதன் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை குறிக்கிறது.
St. Anthony’s Industries Group பிரதம செயற்பாட்டு அதிகாரி லஹிரு ஜயசிங்க இது பற்றித் தெரிவிக்கையில், “மாற்றத்தின் புதிய சகாப்தத்தில் நாம் நுழையும் நிலையில், சிறந்து விளங்குவதற்கான எமது அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும், புத்தாக்கத்திற்கான தொடர்ச்சியான எமது முயற்சியையும் இந்த புதிய இலச்சினை பிரதிபலிக்கிறது. எமது பல்வேறுபட்ட வர்த்தகநாமங்களை ஒரே அடையாளத்தின் கீழ் ஒன்றிணைப்பதற்கும், தொழிற்துறை தரங்களை மீள்வரையறை செய்வதற்கும், இலங்கைக்கான பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் எமது கூட்டுப் பலத்தைப் பயன்படுத்துவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம்.” என்றார்.
St. Anthony’s Industries Group தனது சிறப்பான ஆரம்பம் முதல், ஒரு குறிப்பிடும்படியான பரிணாமத்தை அடைந்து, பல துறைகளில் முன்னிலையில் உள்ள ஒரு பல்வகை கூட்டு நிறுவனமாக மாறியுள்ளது. இந்த பயணத்தை உள்ளடக்க்கும் வகையில் இந்த புதிய இலச்சினை அமைவதோடு, குழுமத்தின் வளமான வரலாற்றையும் எதிர்காலத்திற்கான அசைக்க முடியாத தூரநோக்கையும் இது காட்டுகிறது.
குழுமத்தின் முக்கிய மதிப்புகள் மற்றும் பணி நோக்கை பிரதிபலிக்கும் வகையில் இப்புதிய இலச்சினையின் ஒவ்வொரு கூறும் உன்னிப்பாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. நட்சத்திரம்: குழுமத்தின் அசைக்க முடியாத நோக்கம் மற்றும் இலட்சியப் பார்வை, மலை: வலுவான அடித்தளம் மற்றும் அசைக்க முடியாத நிலைத்தல், V வடிவம்: தொடர்ச்சியான முன்னேற்றம் மற்றும் புத்தாக்கத்திற்கான முயற்சியை குறிக்கிறது.
புதிய இலச்சினையின் வெளியீட்டுடன், குழுமத்தின் புதுப்பிக்கப்பட்ட மைய நோக்கமான, “Transforming Industries” (தொழில்துறைகளை மாற்றியமைத்தல்) உடன் ஒத்துப்போகிறது. இந்த அர்ப்பணிப்பானது, அதன் மீளமைக்கப்பட்ட பணி நோக்கு, தூர நோக்கு, பெறுமதி ஆகியவற்றை பிரதிபலிப்பதோடு, புத்தாக்கம், தரம், தொலைநோக்கு கொண்ட தலைமைத்துவத்தை வலியுறுத்துகிறது.
St. Anthony’s Industries Group அதன் பல்வேறு துணை வர்த்தகநாமங்களான Anton, Anton Max, Armor, Griffin, NetZ, Thermo, Biocell, Polar, Volta ஆகியவற்றை ஒரே நிறுவனத்தின் கீழ் பெருமையுடன் ஒருங்கிணைக்கிறது. குறிப்பாக, Anton ஆனது, ஒரு முக்கிய வர்த்தகநாமமாக தனித்து விளங்குகிறது. இது தரம் மற்றும் அதிநவீன கண்டுபிடிப்புகளுக்கான குழுமத்தின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பைக் காட்டுகிறது.
தமது மாற்றத்தை நோக்கிய பயணத்தில் இணையுமாறு St. Anthony’s Industries Group அனைவரையும் அழைக்கிறது. தொழில்துறை தரநிலைகளை மீள்வரையறை செய்து இலங்கையின் தொழில்துறையின் எதிர்காலத்தை வடிவமைப்பதற்கான, குழுமமத்தின் ஆவலூட்டும் பல்வேறு மேம்படுத்தல்ளுக்காக காத்திருங்கள்.
END
Recent Comments