பெரும் போகத்திற்கு தயாராகும் விவசாயிகளுக்கு உதவும் வகையில் இடம்பெற்ற “DIMO Care Camp” உழவு இயந்திர சேவை முகாம் வெற்றிகரமாக நிறைவு

பெரும் போகத்திற்கு தயாராகும் விவசாயிகளுக்கு உதவுவதற்காக, நாட்டின் விவசாயப் பிரதேசங்களை இலக்காகக் கொண்டு, DIMO Agribusinesses முன்னெடுத்திருந்த இலவச உழவு இயந்திர சேவை முகாமான, “DIMO Care Camp” அண்மையில் வெற்றிகரமாக நிறைவு பெற்றது.

DIMO நிறுவனத்தின் விவசாயப் பிரிவான DIMO Agribusinesses ஆனது உலகப் புகழ்பெற்ற வர்த்தகநாமங்களான Mahindra, Claas போன்றவற்றின் உயர் தரத்திலான விவசாய இயந்திரங்களை இலங்கைக்கு கொண்டு வந்து நாட்டில் விவசாய இயந்திரமயமாக்கலை துரிதப்படுத்துகின்றது. அதிநவீன இயந்திரங்களை வழங்குவதற்கு அப்பால் அதன் அர்ப்பணிப்பை விரிவுபடுத்தும் வகையில், நிறுவனம் விவசாய இயந்திரங்களுக்கான உலகத் தரம் வாய்ந்த விற்பனைக்குப் பின்னரான சேவையை வழங்கி, தொழில்துறையில் இயந்திரமயமாக்கலை மேலும் வலுப்படுத்துகிறது. “DIMO Care Camp” நிகழ்ச்சித்திட்டத்தின் முதன்மையான நோக்கம், விவசாய இயந்திரங்களுக்கான விற்பனைக்குப் பின்னரான சேவைகளை வழங்குவதில் நாம் கொண்டுள்ள விரிவான அனுபவத்தையும் நிபுணத்துவத்தையும் பயன்படுத்தி பெரும்போகத்திற்கு தயாராகும் அனைத்து டிரக்டர் உரிமையாளர்களுக்கும் சிறந்த சேவையை வழங்குவதாகும். இந்த நோக்கத்துடன் “DIMO Care Camp” எந்தவொரு உழவு இயந்திரத்தையும் இலவசமாக சரிபார்த்து சேவையை வழங்கியதுடன், பெரும்போகத்திற்கு தயாராகிக் கொண்டிருந்த டிரக்டர் உரிமையாளர்களுக்கு உதிரிப் பாகங்களுக்கு விசேட தள்ளுபடியையும் வழங்கியது.

மட்டக்களப்பு, குருணாகல், அநுராதபுரம், பொலன்னறுவை, அம்பாறை போன்ற விவசாய மாவட்டங்களை உள்ளடக்கியதாக, 12 நாட்களாக “DIMO Care Camp” நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், இந்த ஒவ்வொரு மாவட்டத்திலும் செங்கலடி, உஹண, செவனபிட்டிய, கல்நேவ, இப்பாகமுவ, கலென்பிந்துனவெவ ஆகிய நகரங்களை மையமாகக் கொண்டு இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அத்துடன், பல்வேறு வர்த்தகநாமங்களைக் கொண்ட பெருமளவிலான உழவு இயந்திர உரிமையாளர்கள் இந்த நிகழ்ச்சித்திட்டங்களில் கலந்துகொண்டு தமது உழவு இயந்திரங்களுக்கான சேவைகளை இலவசமாக பெற்றுக்கொண்டதுடன், இதன் மூலம் சர்வதேச தரத்திலான சேவை அனுபவத்தை அவர்களால் பெற்றுக்கொள்ள முடிந்தது.

DIMO நிறுவனத்தின் விற்பனைக்குப் பின்னரான சேவைகளின் பிரதம செயற்பாட்டு அதிகாரி மஹேஷ் கருணாரத்ன இது தொடர்பில் தெரிவிக்கையில், “DIMO ஆனது, விவசாயத்தின் அனைத்துத் துறைகளிலும் தனது செயற்பாடுகளை முன்னெடுப்பதன் மூலம் இலங்கையில் உள்ள விவசாய சமூகத்தினரின் கனவுகள் மற்றும் அபிலாஷைகளை வலுப்படுத்தும் ஒரு நிறுவனமாகும். “DIMO Care Camp” நிகழ்ச்சித் திட்டமானது, எமது சேவை நிபுணத்துவம் மூலம், பெரும் போகத்திற்கு தயாராகும் விவசாய சமூகத்தை வலுப்படுத்துவதற்கான வழிகளில் ஒன்றாகும். இத்தகைய திட்டங்களின் மூலம், எமது முதன்மையான நோக்கம், விவசாயிகளை விவசாய இயந்திரமயமாக்கலுக்கு உட்படுத்தி, விவசாய உற்பத்தித்திறனை அதிகரிப்பதாகும்.

DIMO ஆனது விவசாய இயந்திரங்களை மாத்திரமன்றி உலகின் முன்னணி வர்த்தகநாமங்களின் கருவிகள், டயர்கள், வாகன உதிரிப் பாகங்களையும் இலங்கைக்கு அறிமுகப்படுத்துகிறது. இலங்கையின் வாடிக்கையாளர்களுக்கு DIMO Lumin வர்த்தக நாமத்தின் கீழ் உயர்தர மின்விளக்கு சாதனங்களையும் DIMO வழங்குகிறது. “DIMO Care Camp” திட்டத்தில் பங்குபற்றிய அனைவருக்கும், அதன் தயாரிப்புகளின் அனுபவத்தை பெறுவதற்கும் விசேட தள்ளுபடியில் அவற்றை கொள்வனவு செய்வதற்கும் வாய்ப்பு கிடைத்தது. இங்கு இலவச கண் பரிசோதனைக்காக விசேட கண் மருத்துவ முகாமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும், “DIMO Care Camp” நிகழ்ச்சித்திட்டத்தை மிகவும் சுவாரஸ்யமான அனுபவமாக மாற்றும் வகையில், FM தெரண வானொலியுடன் இணைந்து பல்வேறு வேடிக்கையான விளையாட்டுகள் மற்றும் விசேட செயற்பாடுகளை DIMO ஏற்பாடு செய்திருந்தது.

இலங்கையில் அனைத்து வகையான உழவு இயந்திர உரிமையாளர்களுக்குமாக மேற்கொள்ளப்பட்ட முதலாவது சேவைத் திட்டமாக “DIMO Care Camp” வரலாற்றில் இடம்பிடிப்பதோடு, விவசாய சமூகத்தின் அதிக கோரிக்கையின் அடிப்படையில், வருடாந்தம் இந்த நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளது.

Share

You may also like...