சிறப்பம்சத்திற்கான அங்கீகாரம்: கொழும்பு தாமரைக் கோபுரத்தில் நடைபெற்ற கோல்டன் நைட் நிகழ்வில் ஜனசக்தி லைஃப் சாதனையாளர்கள் கெளரவிப்பு

இலங்கையின் முன்னோடி ஆயுட் காப்புறுதி வழங்குனரான

ஜனசக்தி லைஃப் (Janashakthi Life),  அண்மையில் கொழும்பின் பிரபல அடையாளமாக விளங்கும்  தாமரைக் கோபுரத்தில் ‘Janashakthi Life Achievers Golden Night’ நிகழ்வை நடாத்தியிருந்தது. இந்நிகழ்வில் இவ்வருடத்தின் முதல் பாகத்தில் சிறந்து விளங்கிய 300 உயர் சாதனையாளர்களின் சாதனைகள்

கொண்டாடப்பட்டன. ஜனசக்தி லைஃப் நிறுவனத்தின் பிரதித் தலைவர் பிரகாஷ் ஷாஃப்டர், குழுமத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும்/

பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ரமேஷ் ஷாஃப்டர் உள்ளிட்ட

மதிப்பிற்குரிய விருந்தினர்கள் மற்றும் ஜனசக்தி லைஃப் நிறுவனப்

பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ரவி லியனகே உள்ளிட்ட

நிறுவனத்தின் முக்கிய முகாமைத்துவ உறுப்பினர்களும் இவ்விழாவில்

கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில், சிறந்த அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்புகளை வழங்கிய சிறந்த

சாதனையாளர்கள் அங்கீகரிக்கப்பட்டு அவர்களுக்கு வெகுமதிகளும்

வழங்கப்பட்டன. இதன் மூலம் இந்த மாலைப்பொழுது சாதனைகளாலும்  தோழமை உணர்வுகளாலும் ஊக்கப்படுத்தப்பட்ட அதேவேளை , Personal Lines Channel பொது முகாமையாளர் ரெஹான் குணவர்தன மற்றும் Retail Business Channel பொது

முகாமையாளர் H.E.T. சம்பத் ஆகியோரின், அனைவரையும் கவரும்

வகையிலான விளக்கக்காட்சிகளும் இதன்போது இடம்பெற்றன. அவர்கள் ஜனசக்தி லைஃப்பின் மூலோபாய தூரநோக்கு மற்றும் எதிர்கால வாய்ப்புக்களை இங்கு சுட்டிக் காட்டினர்.

எழுச்சியூட்டும் கலந்துரையாடல்கள் மற்றும் பாராட்டுகளுக்கு மேலதிகமாக,

இம்மாலைப்பொழுதானது பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்ததாகவும்

காணப்பட்டதோடு, கொண்டாட்டங்களையும் மகிழ்ச்சியையும்

உற்சாகத்தையும் அது சேர்த்தது. பங்கேற்பாளர்களுக்கு அவர்களின்

விலை மதிப்பற்ற பங்களிப்பிற்கான பாராட்டுகளைப் பிரதிபலிக்கும் வகை யில்,

ஜனசக்தி லைஃப்பினால் ஒரு மறக்கமுடியாத அனுபவம் இங்கு

ஏற்படுத்தப்பட்டது.

நிறுவனத்தின் பணிப்பாளரும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ரவி லியனகே , இந்த நிகழ்வில் தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டபோது  “எமது உயர் செயல்திறன் கொண்ட குழு உறுப்பினர்களின் குறிப்பிடத்தக்க சாதனைகள் தொடர்பில் நாம் மிகவும் பெருமையடைகிறோம். அவர்களது அயராத சிறப்பான முயற்சி மற்றும் எமது முக்கிய விழுமியங்கள் தொடர்பிலான அர்ப்பணிப்பு ஆகியன, ஜனசக்தி லைஃப்பை வெற்றிப்பாதையில் முன்னோக்கி  கொண்டு செல்வதற்கான கருவியாக அமைந்துள்ளன. சாதனையாளர்களுக்கான இந்த இரவானது, அவர்களின்

சாதனைகளை நினைவுகூருவது மட்டுமல்லாது அவர்களது திறமைகளை

அங்கீகரிப்பதிலும் மேலும் அவர்களை ஊக்குவிப்பதிலும் எமது நிறுவனத்தின்

அசைக்கமுடியாத அர்ப்பணிப்புக்கு சான்றாகவும் விளங்குகிறது.” என்றார்.

‘வாழ்க்கையை மேம்படுத்துதல் மற்றும் கனவுகளை வலுப்படுத்துதல்’ ஆகிய

தனது கூட்டாண்மை நோக்கத்திற்கு உண்மையாக இருந்து, ஜனசக்தி லைஃப் அதன் அனைத்து பங்குதாரர்களுக்கும் நெறிமுறையான மற்றும்

வெளிப்படையான முறையில் பெறுமதியான சேவையை வழங்க எப்ப போதும் பாடுபட்டு வருகிறது. வாடிக்கையாளரை முன்னிலைப்படுத்தி, அவர்களது வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் காப்புறுதித் தீர்வுகள் மற்றும் சேவைகள் மூலம் காப்பீட்டாளரால் இது உயிர்ப்பிக்கப்படுகின்றது. இந்த நோக்கத்தை ஊழியர்களுடனான தனது ஈடுபாட்டினை விரிவுபடுத்தும் வகை யில், ஜனசக்தி லைஃப் எப்போதும் தனது குழு உறுப்பினர்களுக்கு அவர்களின் கனவுகள் மற்றும் அபிலாஷைகளை வளர்த்துக் கொள்ளவும், அதனை நனவாக்கவும் உதவுகின்ற, உயர்ந்த ஆதரவான பணிச்சூழலை வழங்க முயற்சித்து வருகிறது.

கடந்த 28 வருட காலப்பகுதியில், ஜனசக்தி லைஃப் நிறுவனம் காப்புறுதித்

துறையில் தொடர்ச்சியாக புரட்சியை ஏற்படுத்தி முன்னோக்கிப் பயணித்து

வருவதுடன், கணிப்பிடக்கூடிய ஒரு சக்தியாக முன்னோக்கிப் பயணித்துள்ளது. அத்துடன், நாடளாவிய ரீதியில் 75 இற்கும் அதிக கிளைகள் கொண்ட அதன் வலையமைப்பு, அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அதன் தனித்துவமான காப்புறுதித் தீர்வுகளை அடைய உதவுகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

END.

Share

You may also like...