பாடசாலை மாணவர்களிடையே வாய்ச் சுகாதாரம் தொடர்பான நிகழ்வுகள் மூலம் பற்குழி அற்ற தேசத்தை அடையும் க்ளோகார்ட்

பற்குழிகள் அற்ற தேசத்தை கட்டியெழுப்புவதற்கான சமூகப் பணியை, Hemas Consumer Brands இனது நம்பகமான வாய்ச் சுகாதார பராமரிப்பு வர்த்தகநாமமான க்ளோகார்ட் (Clogard), நீண்ட காலமாக முன்னெடுத்து வருகிறது. இதன் மூலம் கடந்த சில வருடங்களில் ஆயிரக்கணக்கான பாடசாலை மாணவர்களுக்கு சிறந்த வாய்ச் சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வை அது ஏற்படுத்தியுள்ளது. இலங்கைச் சந்தையில் முன்னணியில் உள்ள மற்றும் பயனுள்ள வர்த்தக நாமங்களில் ஒன்று எனும் 30 வருட வரலாற்றை க்ளோகார்ட் கொண்டுள்ளது. அத்துடன் வாய்ச் சுகாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பான பொதுமக்களுக்கான இந்த முயற்சிகள் நாட்டு மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

வாய்ச் சுகாதார பராமரிப்பு தொடர்பான ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்கும், புத்தாக்கமான தயாரிப்புகளை வெளியிடுவதற்கும், வாய்ச் சுகாதாரம் தொடர்பான பாதுகாப்பு அணுகுமுறையை ஊக்குவிக்கும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடாத்துவதற்கும் க்ளோகார்ட் உறுதியுடன் இருந்து வருகிறது. கடந்த 10 வருடங்களாக, சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை (MOH) பிராந்திய அலுவலகங்களுடன் இணைந்து வாய்ச் சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை க்ளோகார்ட் முன்னெடுத்து வருகின்றது. இது சிறந்த வாய்ச் சுகாதாரப் பழக்கவழக்கங்கள் தொடர்பான பாடத்திட்டத்திற்கு உதவியாக அமைகின்றது.

தற்போது 3 மாத திட்டமொன்றை க்ளோகார்ட் முன்னெடுத்து வருகிறது. இது அனைத்து ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கும் இலவச பல் பரிசோதனையை மேற்கொள்ள உதவுவதோடு, மேலதிக கவனம் தேவைப்படும் மாணவர்களை உரிய பல் நிபுணர்களிடம் செல்ல பரிந்துரைக்கின்றது.

க்ளோகார்டைத் தெரிவு செய்வதன் மூலம், நுகர்வோர் தமது வாய்ச் சுகாதாரத்திற்கு முன்னுரிமை அளிப்பதோடு மட்டுமல்லாமல், பற்குழியிலிருந்து உச்சபட்ச பாதுகாப்பை பெறுவதன் மூலம் பற்குழி அற்ற தேசத்தை நோக்கிய தூர நோக்கத்தை அடைவற்காக பங்களிக்கும் ஒரு வர்த்தகநாமத்தில் அவர்கள் முதலீடு செய்கிறார்கள் எனலாம்.

இந்த நீண்ட கால மற்றும் நம்பகமான வர்த்தக நாமமானது, இலங்கை பல் மருத்துவ சங்கத்தினால் (SLDA) தொடர்ச்சியாக 25 ஆவது வருடமாக அங்கீகாரம் பெற்ற சான்றிதழை பெற்றமையை அண்மையில் கொண்டாடியமையானது, வாய்ச் சுகாதாரத்தை மிக உயர்ந்த தரத்தில் நிலைநிறுத்துவதில் வர்த்தகநாமத்தின் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கான மற்றுமொரு சான்றாகும்.

க்ளோகார்ட் உருவாக்கிய ‘Dual Action’ (இரட்டை செயற்பாடு) எண்ணக்கருவானது, கிருமிகளை எதிர்த்துப் போராடுவதற்கு கிராம்பு எண்ணெய் மற்றும் பல் மிளிரியை வலுப்படுத்தும் செயற்பாட்டு புளோரைட் ஆகியவற்றின் தனித்துவமான கலவையின் மூலம், பற்குழியிலிருந்தான உச்சபட்ச பாதுகாப்பை வழங்கவும், வலிமையான மற்றும் ஆரோக்கியமான பற்களை உருவாக்கவும் வர்த்தகநாமம் கொண்டுள்ள அம்சம் ஏனையவற்றிலிருந்து அதனை வேறுபடுத்துகிறது. இந்த புத்தாக்கமான அணுகுமுறையானது, வாய்ச் சுகாதாரத்திற்கு அவசியமான பல்வேறு அம்சங்களை பூர்த்தி செய்யும் விரிவான வாய்ச் சுகாதார பராமரிப்புத் தீர்வுகளை வழங்குவதில் க்ளோகார்டின் உறுதிப்பாட்டை வலியுறுத்துகிறது.

Share

You may also like...