‘DIMO Energy’ வர்த்தகநாமத்தின் கீழ் மின்சக்தி மற்றும் வலுசக்தி தீர்வுகளை ஒருங்கிணைக்கும் DIMO
இலங்கையிலுள்ள முன்னணி பல்வகைத்துறை கூட்டு நிறுவனமான DIMO ஆனது, DIMO Energy எனும் புதிய வர்த்தகநாம அடையாளத்தின் கீழ் தனது மின்சக்தி மற்றும் வலுசக்தி செயற்பாடுகளை மறுசீரமைப்பதாக அறிவித்துள்ளது.
DIMO Energy ஆனது, உயர் மின்னழுத்தம், நடுத்தர மின்னழுத்தம், குறைந்த மின்னழுத்தம் ஆகிய மூன்று பிரிவுகளில் மின்சாரத் தீர்வு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி தீர்வுகளை செயற்படுத்துகிறது. DIMO Energy ஆனது மின்சாரம், மின்சக்தி, வலுசக்தி பிரிவுகளில் விரிவான தீர்வுகளை வழங்கும் அதே நேரத்தில்> நிறுவனத்தின் தற்போதைய தயாரிப்பு வகைகளில் cogeneration தீர்வுகள் மற்றும் agrivoltaics ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.
வாடிக்கையாளர்களை மையப்படுத்திய அணுகுமுறையுடன், அனைத்தும் ஒரே கூரையின் கீழ் அமைந்த தீர்வு வழங்குனராக மாற்றுகின்ற DIMO Energy ஆனது, அதிநவீன தீர்வுகளை வழங்குவதை உறுதி செய்கிறது. மின் உற்பத்திச் செயன்முறைகளில் நேரம், முயற்சி, பண விரயங்களை இது நீக்குகிறது. பல தசாப்தங்களாக இணையற்ற நிபுணத்துவம் மற்றும் அறிவாற்றல் ஆகியவற்றின் மூலம், தீர்வாக வழங்கப்படும் ஒவ்வொரு துணை நடவடிக்கையும், சர்வதேச மின்னுற்பத்தி தீர்வுகளுக்கு இணையான வெளிப்பாட்டை வழங்க உகந்ததாக உள்ளது.
இன்றைய உலகில், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் வணிக நிறுவனங்கள், அதிகரித்து வரும் வலுசக்தி செலவுகளின் சவாலை எதிர்கொள்கின்றன. இந்தச் சவாலுக்கு DIMO Energy விரைவாகப் பதிலளிப்பதோடு, வெப்ப வெளியேற்றத்தை பயன்படுத்தி, cogeneration தீர்வுகள் தொடர்பான வழிகளை ஆராய்கிறது. இந்த அதிகளவான வெப்பத்தை சக்தியாக மாற்ற முடியும். ஆடை அல்லது சீமெந்து தொழிற்சாலைகள் போன்ற இணை உற்பத்தி தொழிற்சாலைகளில் முதலீடு செய்வதன் மூலம், முக்கியமான தொழில்துறைகளால் உற்பத்தி செய்யப்படும் வெப்பத்தை நீராவியை உருவாக்க பயன்படுத்தலாம். இந்த நீராவியின் விசையின் மூலம் மின்பிறப்பாக்கியின் சுழலியை சுழலச் செய்து அது மின்சக்தியாக மாற்றப்படுகிறது.
DIMO Energy ஆனது, Agrivoltaics தொடர்பிலும் முக்கிய கவனம் செலுத்துகிறது. இங்கு விவசாய நிலங்களில் சூரிய மின்கலத் தொகுதிகளை நிறுவுவது உள்ளடங்குகின்றது. இந்த அணுகுமுறையின் கீழ், சூரிய மின்கலத் தொகுதிகள் விவசாய நிலங்களுடன் ஒருங்கிணைக்கப்படுகின்றன. நேரடி சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கப்படும் போது செழித்து வளரும் குறிப்பிட்ட தாவரங்களை வளர்க்க இது உதவுகிறது.
DIMO Energy ஆனது, அதன் மூலோபாய பங்காளியான Siemens உடன் இணைந்து, இலங்கையில் மின்சார விநியோக சங்கிலியின் பல புள்ளிகளில் அங்கம் வகிக்கின்றது. நாட்டின் உப மின் மின்நிலையங்களில் குறிப்பிடும்படியான அளவிலான 70% நிர்மாண பின்னணியில் DIMO Energy உள்ளது. DIMO Energy ஆனது, இலங்கையில் உள்ள பல்வேறு தொழில்துறைகளின் நடுத்தர மற்றும் குறைந்த மின்னழுத்த தேவைகளையும் பூர்த்தி செய்கிறது. அது மாத்திரமன்றி, DIMO தனது சொந்த ‘DIMO LUMIN’ வர்த்தகநாமத்தின் கீழ் அதிநவீன சுவிட்ச் போர்டுகளை வழங்குகிறது. அத்துடன் சர்வதேச அளவில் பாராட்டைப் பெற்றுள்ள நன்கு சோதனை செய்யப்பட்ட ‘SIEPAN’ மற்றும் ‘SIVACON’ சுவிட்ச் போர்டுகளுடன், மேலும் பல்வேறு அதி நவீன தேவைகளையும் பூர்த்தி செய்கிறது.
DIMO Energy ஆனது, நாட்டின் முதல் micro-grid திட்டத்தை மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் வெற்றிகரமாக செயற்படுத்துவதற்கு முன்னோடியாக இருந்துள்ளது. நிறுவனத்தின் ‘DI-Solar’ புதுப்பிக்கத்தக்க வலுசக்தி தீர்வானது, வாடிக்கையாளர்களுக்கு DIMO வின் நிரூபிக்கப்பட்ட தொழில்துறை சாதனையின் ஆதரவுடன் நீண்ட காலம் நிலைத்திருக்கும், கூரை மீதான சூரிய மின்கல தொகுதிகளை வழங்குகிறது. DIMO Energy ஆனது, இலங்கைக்கு அப்பால் பரந்து செல்லும் அதே வேளையில் சக்தி உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக உகண்டா, மாலைதீவு ஆகிய நாடுகளிலும் தனது செயற்பாடுகளை நிறுவியுள்ளது.
DIMO நிறுவனத்தின் மின்சக்தி மற்றும் எரிசக்திப் பிரிவின் பணிப்பாளரும் அதன் நிர்வாகப் பணிப்பாளருமான விஜித் புஷ்பவெல இது தொடர்பில் தெரிவிக்கையில், “புதிய DIMO Energy ஆனது, ஒரு புதிய வர்த்தகநாம பிம்பமாகும். இது நாம் சேவை செய்யும் சமூகங்களின் கனவுகள் மற்றும் அபிலாஷைகளை ஊக்குவிப்பதற்கான எமது அர்ப்பணிப்பை மேலும் உறுதிப்படுத்துகிறது. DIMO Energy யின் வர்த்தகநாம வாக்குறுதிக்கு அமைய, எதிர்காலத்தை மேம்படுத்தும் அதே வேளையில், எமது வாடிக்கையாளர்களின் அனைத்துத் தேவைகளையும் ஒரே கூரையின் கீழ் பூர்த்தி செய்ய எம்மால் முடியும்.” என்றார்.
DIMO நிறுவனமானது, பயன்பாட்டு அளவிலான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களில் ஒரு முக்கிய பங்காளராகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளதோடு, உடனடி பயன்பாட்டு EPC ஒப்பந்தக்காரர் மற்றும் டெவலப்பர் என வாடிக்கையாளர்களின் நம்பிக்கையையும் பெறுகிறது. இந்த உறுதியான அடித்தளத்துடன், DIMO அதன் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி வணிகத்தின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு சிறப்பாக தயாராக உள்ளது. இது இத்துறையின் விரைவான வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது. இலங்கையில் கனியவள எரிசக்தி ஆதாரங்கள் கிடைக்காமை, உலகளாவிய எரிபொருள் சந்தைகளின் ஏற்ற இறக்கம், அனல் மின்சாரத்திற்கான அதிக எரிபொருள் செலவுகள், சூழல் தொடர்பான பொறுப்புகள் மற்றும் உற்பத்தியாளர் பொறுப்புகள், நிலைபேறானதன்மை ஆகியவற்றில் அதிகரித்து வரும் முக்கியத்துவம் காரணமாக, உள்நாட்டு நிறுவனங்கள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை தழுவ வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.
பொருளாதார மீட்சியை நோக்கிய பயணத்தில் இலங்கை அடைந்துள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்திற்கு மத்தியில், அதன் புவியியல் அனுகூலங்கள் மற்றும் போட்டித்தன்மை கொண்ட உற்பத்தி காரணிகளின் காரணமாக, விரைவான தொழில்துறை அபிவிருத்திக்கான முதலீடுகளை ஈர்ப்பதில் நாடு தற்போது முதன்மையாக உள்ளது. தனது பரந்த அளவிலான தீர்வுகளுடன், திறனான மற்றும் சூழலுக்கு ஏற்ற வலுசக்தி வழங்கல் மற்றும் விநியோகத் தீர்வுகளுக்கான வளர்ந்து வரும் தேவையை DIMO Energy பூர்த்தி செய்ய தயாரக உள்ளது.
Recent Comments