நேர்த்தியான ஆண்களுக்கான தனது ஆடையகத்தை வத்தளையில் திறந்துள்ள Emerald
இலங்கையின் முன்னணி ஆடவருக்கான ஆடை வர்த்தக நாமமான Emerald (எமரல்ட்), அதன் மற்றுமொரு கிளையை திறந்து வைத்து அதன் சில்லறை வர்த்தகத்தை மேலும் விரிவுபடுத்தியுள்ளது. வத்தளையில் உள்ள Damro கட்டடத்தின் 4ஆவது மாடியில் அமைந்துள்ள இந்த புதிய கிளையானது, சேர்ட்டுகள், காற்சட்டைகள் மற்றும் நவநாகரிக அணிகலன்கள் உள்ளிட்ட ஆடவருக்கான ஆடைகளுக்கான முழுமையான தீர்வுகளை வழங்குகின்ற, விசாலமான மற்றும் நவீன விற்பனையகமாக அமைந்துள்ளது.
வத்தளை காட்சியறையானது, Leonardo, RUNN, Focus, Mansak உள்ளிட்ட ஏனைய வர்த்தகநாமங்களுடன், ஆண்களுக்கான Emerald ஆடைகளின் முழுமையான வகைகளையும் வழங்குகின்றது. இந்த புதிய கிளையின் திறப்பின் மூலம், தனது வாடிக்கையாளர்களுக்கு தரமான ஷொப்பிங் அனுபவத்தை வழங்குவதை Emerald நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் அவர்கள் ஒரே கூரையின் கீழ் பரந்துபட்ட முழுமையான ஆண்களுக்கான ஆடை வகைகளைப் பெறுவதற்கும், அவர்களுக்கு விருப்பமான பேஷன் தெரிவுகளை எளிதாகவும் வசதியாகவும் அவர்களுக்கு வழங்குவதோடு, சரியான தெரிவையும், சரியான அளவுடனும் அவர்கள் பெறுவதை உறுதி செய்கிறது.
இக்கிளையின் திறப்பு தொடர்பில், Emerald International நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.எப்.எம். இக்ரம் கருத்துத் தெரிவிக்கையில், “Emerald ஆகிய நாம், இலங்கையர்களுக்கு தரம், வசதி, நவீன பாணியை வழங்க உறுதி பூண்டுள்ளோம். புதிய வத்தளை ஆடையகமானது, ஆண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான எமது பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல் என்பதோடு, இலங்கையில் உள்ள அனைத்து ஆண்களுக்கும் நவீன பாணி மற்றும் அடையாளத்தை மேம்படுத்துவதற்கான ஒரு தளத்தை உருவாக்குகிறது.” என்றார்.
Emerald என்பது இலட்சிய மனிதனின் மனதின் ஆழத்தில் பதிக்கப்பட்ட ஒரு வர்த்தகநாமம் ஆகும். அது ஒவ்வொரு ஆடவரினதும் அலுமாரிகளிலும் இன்றியமையாத ஒரு அங்கமாக இன்று வளர்ந்துள்ளது. இலங்கையில் ஃபேஷன் போக்குகளை மாற்றுவதில் தரம், நம்பகத்தன்மை, புத்தாக்கங்களை இவ்வர்த்தக நாமம் எடுத்துக்காட்டுகிறது. இதுவே இலங்கையில் ISO தரச்சான்றிதழ் பெற்ற ஆடை வர்த்தக நாமமாகும். இது தரத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதோடு, மிகவும் வசதியான மற்றும் சமகால வடிவமைப்புகளை மட்டுமே வழங்குவதற்காக அதன் அனைத்து தயாரிப்புகளிலும் உலகத்தரம் வாய்ந்த தர நிலையை பேணுகிறது.
ஆடவருக்கான புகழ்பெற்ற ஆடை வர்த்தகநாமமான Emerald, அதன் ஒப்பற்ற சலுகைகள் மூலம் ஃபேஷன் ஆர்வலர்களை தொடர்ச்சியாக வசீகரித்து வருகிறது. நேர்த்தியான அலுவலக (formal) சேர்ட்கள், காற்சட்டைகள் முதல் ஸ்டைலான வழக்கமான (casual) மற்றும் நவநாகரீக chino காற்சட்டைகள் உடனான பிற்பகலுக்கான (evening wear) சேர்ட்கள் வரை, Emerald ஒவ்வொரு ஆண்களின் ஃபேஷன் தேவையையும் பூர்த்தி செய்கிறது. இந்த வர்த்தகநாமத்தின் தொகுப்புகளில் வட்ட கழுத்து (crew neck) ரீ-சேர்ட்கள் மற்றும் Polo சேர்ட்கள் உள்ளிட்ட வகைகளும் காணப்படுகின்றன. இந்த ஆடைகளுடன் இணைந்து அதனை முழுமையாக்கும் வகையில், பல விதமான இணை அணிகலன்களையும் Emerald வழங்குகிறது. அது தவிர, அவர்களின் கட்டுமஸ்தான விளையாட்டு ஆடைகள் உரிய வசதியையும் நவீன பாணியையும் தடையின்றி வழங்குவதோடு, அவர்களின் உள்ளாடைகளின் தொகுப்பு உகந்த வசதியையும் உறுதி செய்கிறது. சிறுவர் ஃபேஷன் ஆர்வலர்களையும் மறந்துவிடாமல், Emerald Junior ஆனது, 4 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு அழகு மற்றும் நேர்த்தியை வெளிப்படுத்துகின்ற, எந்த வயதிலும் தன்னம்பிக்கையுடன் இருக்க உதவும் வகையிலான விதவிதமான ஆடைகளுடன், தங்களது மகன்களுக்கு ஸ்டைலையும் வசதியையும் பரிசாக வழங்குகிறது. அதன் மாறுபட்ட மற்றும் பரந்த ஆடைத் தெரிவு வகைகள் மூலம், Emerald உண்மையான பன்முகத்தன்மையை வெளிப்படுத்துகிறது. இதன் மூலம் ஒவ்வொரு தலைமுறை ஆடவரும் தமது தனித்துவமான பாணியையும் நம்பிக்கையையும் திறமையையும் வெளிப்படுத்த முடியும் என்பதை அது உறுதிப்படுத்துகிறது.
Recent Comments