உங்கள் தொழில்துறை அபிலாஷைகளை பூர்த்தி செய்வதற்கான முதல் படி: International Learning Academy
இந்த VUCA உலகில் வணிகமொன்றை நிர்வகித்தல் என்பது, திறன்களுடன் தொடர்புடைய மிக வேகமாக வளர்ந்து வரும் ஒரு விடயமாக உள்ளது. ஒரு தொழில்முனைவோராகவோ, வணிக முன்னோடியாகவோ அல்லது வேறு எந்த நிபுணராகவோ இருந்த போதிலும், வணிக முகாமைத்துவம் மற்றும் விமர்சன ரீதியான சிந்தனையின் திறன்கள், சிறந்த தொழில் வாழ்க்கையை உருவாக்குவதற்கான வலுவான அடித்தளத்தை இது உங்களுக்கு வழங்கும்.
International Learning Academy (ILA) ஆனது எதிர்காலத்திற்கான அடித்தளத்தை உருவாக்க உங்களுக்கு உதவும் ஒரு நுழைவாயில் ஆகும். இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான தொழில்முறை ரீதியான கற்பித்தல் அனுபவத்துடன், அங்கீகரிக்கப்பட்ட கல்விப் பங்காளியான Nanaska வின் ஆதரவுடன், அனைத்து மாணவர்களுக்கும், அதாவது, தங்களது தொழில்துறையில் புதிய உயரத்திற்கு செல்ல வேண்டுமென நினைக்கும் உயர் தரங்களில் படிக்கும் மாணவர்கள் முதல், அதிக அனுபவமுள்ள தொழில்முறை ரீதியானவர்கள் வரையிலானோருக்கு உரிய தகுதிகளை ILA வழங்குகிறது.
பல முன்னணி சர்வதேச பல்கலைக்கழகங்களுடன் இணைந்து, வணிக முகாமைத்துவ துறையில் ILA பல்வேறு தகுதிகளை வழங்குகிறது. கனடாவின் ஒன்டாரியோவை தளமாகக் கொண்ட லண்டன் இன்டர்நேஷனல் அகடமியுடன் இணைந்து ஒன்டாரியோ செகண்டரி ஸ்கூல் டிப்ளோமா (OSSD) திட்டம் போன்ற பல்கலைக்கழக முன் கற்கை அடிப்படை நிலை திட்டங்கள், ILA வழங்கும் ஒரு சில திட்டங்ளாகும். இது முதுகலை திட்டங்களை (முதுமாணி மட்டம் மற்றும் PhD மட்டம்) மலேசியாவில் உள்ள IEG வளாகம் மற்றும் பாகிஸ்தான் மற்றும் மொரிஷியஸில் உள்ள பிரபல கிரீன்விச் பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து, பாரம்பரிய க.பொ.த. உயர் தர தகுதி வழியைப் பின்பற்றாமல், பல்கலைக்கழகங்களுக்கான நேரடி அணுகலுக்கு வாய்ப்பை ஏற்படுத்துகிறது.
சர்வதேச பல்கலைக்கழகங்கள் மற்றும் விரிவான மற்றும் மாறுபட்ட பாடத்திட்டங்களுடனான ILA இன் கூட்டிணைந்த முயற்சிகள், நிஜ உலகத்திற்கு ஏற்ற புத்தாக்கம் கொண்ட மற்றும் தொழில்முனைவோர் கலாச்சாரத்தை வளர்ப்பதுடன், மாணவர்களை ஆக்கபூர்வமாக சிந்திக்கவும், அபாயங்களை எதிர்கொள்ளவும், திறமையான குழு வீரர்களாக மாறவும் ஊக்குவிக்கிறது.
ஒன்லைன் மற்றும் தொலைதூரக் கற்றல் திட்டங்களில் இலங்கையின் முன்னோடியான Nanaska (Pvt) Ltd. மூலம் ILA ஆதரவளிக்கப்படுகிறது. தரமான கல்வியை வழங்குவதில் கடுமையான தரங்களைப் பேணி வரும் Nanaska, 2009 ஆம் ஆண்டில் அதன் செயற்பாடுகளை ஆரம்பித்ததில் இருந்து கடந்த ஒரு தசாப்தத்தில் தரமான சேவைகளைப் பேணி வந்துள்ளது. ILA கல்வியத்தில் பெறும் கல்வியானது, மாணவர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த கல்வி மற்றும் திறன் மேம்படுத்தலுக்கான அணுகலை எளிதாகப் பெற வாய்ப்பளிக்கிறது. Nanaska வின் விரிவுரையாளர்கள் கற்பித்தலில் பல தசாப்தங்களாக அனுபவத்தைக் கொண்டுள்ளனர். அத்துடன் தொழில்துறையில் நிறுவனம் முன்னணியில் இருப்பதன் மூலமான மேலதிக நன்மையானது, மாணவர்களை உலகளாவிய அரங்கில் போட்டியிடக்கூடிய திறமையான வணிகத் தலைவர்களாக மாற்றுவதற்கு அவர்களுக்கு உதவியுள்ளது. இதன் மூலம் அவர்களது தொழில்துறைகளிலும் சமூகத்திலும் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
ILA பீடமானது சன்ன குணவர்தன மற்றும் கலாநிதி நிர்மல் டி சில்வா ஆகியோரால் வழிநடத்தப்படுகிறது. சன்ன குணவர்தன, நிதி மற்றும் முகாமைத்துவத்தில் பலதரப்பட்ட தகுதிகளைக் கொண்ட முன்னணி பிரபல பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் ஒன்றில் பிரசித்தி பெற்ற பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் உலகளாவிய ரீதியில் CIMA துறையில் பல வெற்றியாளர்களை உருவாக்குவதிலான பல்வேறு சாதனைப் பதிவுகளையும் கொண்டுள்ளார். கலாநிதி நிர்மல் டி சில்வா, ஒரு திறமையான மூலோபாய ஆலோசகராவார். சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவு (SME) சுவிசேஷகரும் ஆவார். சபை பணிப்பாளர் மற்றும் இணை பேராசிரியர், பல்தேசிய மற்றும் Fortune 500 நிறுவனங்களுக்கு மூலோபாய தலைமைத்துவத்தை வழங்குவதில் பரந்த நிபுணத்துவம் கொண்டவரும் ஆவார்.
ஹைப்ரிட் முறையில் பாடங்களை நடாத்துதல் மற்றும் ஒருவருக்கு ஒருவர் வழிகாட்டுதல், மாணவர்களின் உச்சபட்ச திறனை அடைய வழிகாட்டுதல் ஆகியவற்றில் ILA கொண்டுள்ள அர்ப்பணிப்பு இணையற்றதாகும். மே 18 ஆம் திகதி, கொழும்பு ரமடா ஹோட்டலில் இடம்பெற்ற ILA இன் ஆரம்ப விழாவில், தலைமை விரிவுரையாளர் சன்ன குணவர்தன கருத்து வெளியிடுகையில், “எமது தொலைநோக்குடனான தலைமைத்துவம், எமது மாணவர்கள் சிறந்த கல்வியைப் பெறுவதை உறுதி செய்கிறது. நாம் மாணவர்களை உரிய வகையில் அவர்களது பாடநெறியுடன் இணைப்பதற்கு உதவும் வகையில் வழிகாட்டல் திட்டங்களை வழங்குகிறோம். எந்தவொரு சிரமத்தையும் சமாளிக்க ஒருவருக்கு ஒருவர் இடையிலான பயிற்சி அவசியமாகும். எமது மாணவர்கள் Nanaska Connect மூலம் தங்களது பயிற்சி, சர்வதேச பரிமாற்ற திட்டங்கள், வேலை வாய்ப்புகள் ஆகியவற்றை அடைவதன் ஒரு பகுதியாக, உலகத் தரம் வாய்ந்த நிறுவனங்களில் பயிற்சி ஊழியராக (Internshhip) பணியாற்ற வாய்ப்பும் காணப்படுகின்றது. ILA வில் கல்வி கற்பதானது, எந்தவொரு மாணவரையும் எதிர்கால வணிகத் தலைவர்களாக தங்களை ஆக்கிக் கொள்ளும் திறனை அடைவதற்கான முதல் படியாகும்.” என்றார்.
ILA இன் அறிமுகமானது, இலங்கையை பிராந்தியத்திலுள்ள வர்த்தகத் முன்னோடியாக ஆக்குவது மட்டுமன்றி, வேகமாக மாறிவரும் உலகில் மாணவர்களுக்கு வெற்றிபெற அதிகாரம் அளிக்கும் வகையில், புத்தாக்கமான, மாற்றமுறக்கூடிய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டின் மூலம் உலகத் தரம் வாய்ந்த வர்த்தகத் தலைவர்களாக அவர்களை உருவாக்கும் திறன் கொண்ட ஒரு முதன்மையான கல்வி வழங்குனராக இலங்கையை நிலைநிறுத்துவதற்கான முயற்சியுமாகும்.
Recent Comments